மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையைப் பற்றி அறிதல் – மரணத்திற்குப் பிறகு உண்மையில் என்ன நடக்கிறது

மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையைப் பற்றி அறிதல் - மரணத்திற்குப் பிறகு உண்மையில் என்ன நடக்கிறது

எண்ணிலடங்கா ஆராய்ச்சி மற்றும் பதிவு செய்யப்பட்ட முற்பிறவி பற்றிய அனுபவங்கள் நமக்கு மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கையைப் பற்றி தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. மரணத்திற்குப் பிறகும் வாழ்க்கை தொடர்கிறது என்பதற்கான ஆதாரத்தைக் கண்டறிவதற்காக, பல்வேறு நிறுவனங்கள் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை, மரணத்தின் விளிம்பிற்கு சென்ற அனுபவங்கள் அல்லது மரணத்திற்குப் பிறகு உள்ள உணர்வு பற்றி ஆராய்ச்சி செய்துள்ளன. மரணத்தின் விளிம்பிற்குச் சென்ற பலரின் நிகழ்வுகள், ‘ஒளியைப் பார்ப்பது அல்லது இறந்த தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திப்பது போன்றதாகும். மறுபிறவி பற்றிய பதிவு செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும், மரணத்திற்குப் பிறகும், பூமியில் அடுத்து பிறப்பதற்கு முன்பும் இடையில் கால தாமதம் இருப்பது கண்டறியப்பட்டது.

எனவே, மரணத்திற்குப் பிறகு, பூமியில் நமது மறுபிறப்பு(மறுபிறவி) எடுக்கும்வரை நாம் எங்கு செல்கிறோம்? மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரே ஒரு பரிமாணம்தான் உள்ளதா அல்லது பல்வேறு பரிமாணங்கள் உள்ளனவா? அப்படியானால், இறந்த பிறகு நாம் எங்கு செல்கிறோம் என்பதை தீர்மானிக்கும் காரணிகள் என்ன? இந்தக் கட்டுரையில், மரணத்திற்குப் பின் வாழ்க்கை பற்றியும், மற்றும் மேலே கேட்கப்பட்ட பிற கேள்விகளுக்கான பதில்களையும் நாங்கள் வழங்குகிறோம். இந்த பதில்கள் ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (SSRF) புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வுடைய (ESP)  ஸாதகர்களின் ஆன்மீக ஆராய்ச்சி மூலம் பெறப்படுகின்றன.

அட்டவணை

1. மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது?

மனிதனை, பின்வரும் நான்கு அடிப்படை தேஹங்களை உள்ளடக்கியுள்ளவனாக ஆன்மீக ஆராய்ச்சி காட்டுகிறது :

  • ஸ்தூல தேஹம் (உடல்)
  • மனோ தேஹம் (மனம்)
  • காரண தேஹம் (புத்தி)
  • மஹாகாரண தேஹம் அல்லது சூட்சும அகம்பாவம்

கீழே உள்ள வரைபடம் ஒரு மனிதனுக்குள் உள்ளடக்கியுள்ளவற்றை விவரிக்கும் பிரதிநிதித்துவ வரைபடமாகும்.

மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையைப் பற்றி அறிதல் - மரணத்திற்குப் பிறகு உண்மையில் என்ன நடக்கிறது

மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையைப் பற்றி அறிதல் - மரணத்திற்குப் பிறகு உண்மையில் என்ன நடக்கிறது

ஒருவர் இறந்த பின் ஸ்தூல தேஹம் இல்லாமல் இருப்பினும், மீதமுள்ள இருப்பு அல்லது உணர்வு தொடர்கிறது. ஸ்தூல தேஹம் இல்லாத ஒருவரின் இருப்பு சூட்சும தேஹம் (லிங்க-தேஹம்) என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது மன, காரண மற்றும் மஹாகாரண தேஹங்களைக் (சூட்சும அகம்பாவம்)  கொண்டுள்ளது. ஒருவர் இறந்த பிறகு, இந்த சூட்சும தேஹம் பூமியைத் தவிர்த்து வேறு 13 சூட்சும பரிமாணங்களில், ஒன்றிற்குச் செல்கிறது.

2. மரணத்திற்குப் பிறகு நாம் எங்கு செல்கிறோம்: பிரபஞ்சத்தில் உள்ள 14 லோகங்கள்

பிரபஞ்சத்தில் 14 முக்கிய லோகங்கள் உள்ளன. அவற்றில் ஏழு தீயவை மற்றும் ஏழு நல்ல லோகங்கள் ஆகும். ஏழு தீய லோகங்கள் பொதுவாக நரகம் (பாதாள லோகம்) என்று அழைக்கப்படுகின்றன. இந்த லோகங்களுள் ஏராளமான துணை லோகங்கள் உள்ளன.

தர்மம் என்பது 3 பணிகளை சாதிக்கின்றது:


1. சமூக அமைப்பை சிறந்த நிலையில் வைத்திருத்தல்
2. ஒவ்வொரு உயிரின் உலக முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்
3. ஆன்மீக ரீதியிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்.


- ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார்

ஏழு நல்ல லோகங்கள்: ஸப்தலோகம் என்று அழைக்கப்படும் நல்ல லோகங்கள் பெரும்பாலும் உயிருள்ள மனிதர்களையும், நேர்மையான செயல்களைச் செய்து, நல்ல ஆன்மீக வழிகாட்டுதலின் படி ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்ட இறந்தவர்களின் சூட்சும தேஹங்களையும் கொண்டுள்ளது. நேர்மறையான பாதையில் ஆன்மீகப் பயிற்சி என்பது கடவுளை உணர்தலை நோக்கியதாகும். அதாவது  கடவுளோடு ஒன்றிணைவது, இது ஆன்மீக வளர்ச்சியில் இறுதியானது.

பூலோகம் தான் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரே ஸ்தூல லோகம் மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள நல்ல லோகங்களின் வரிசையில் முதன்மையானது.

ஏழு தீய லோகங்கள்: இவை பெரும்பாலும் அநீதியான செயல்களைச் செய்து, தீய வழியில் ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டவர்களின் மரணத்திற்கு பின்னுள்ள சூட்சும தேஹங்களை கொண்டுள்ளது. தீய வழி என்று நாங்கள் குறிப்பிடுவது,  அவர்களின் ஆன்மீக பயிற்சியின் நோக்கமே ஆன்மீக சக்தியை, அதாவது இயற்கைக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய சக்திகளை அடைவதாகும்.  அதாவது இந்த ஆன்மீக சக்தி முக்கியமாக மற்றவர்கள் மீது ஒருவரின் கட்டுப்பாட்டை அதிகரிக்கவோ அல்லது தீய நோக்கங்களுக்கோ பயன்படுத்தப்படுகிறது. நரகத்தில் உள்ள லோகங்களில் ஏதேனும் ஒன்றிற்குச் செல்லும் அனைத்து சூட்சும தேஹங்களும் அவற்றின் தீய எண்ணங்களால் பேய்களாகின்றன.

ஆவிகள் என்றால் என்ன?’ என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

நரகத்தின் துணை லோகங்கள் (பாதாளம்): நரகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பாதாளம் எனப்படும் துணை லோகங்கள் உள்ளது. எடுத்துக்காட்டாக, பாதாளத்தின் முதல் நிலையை எடுத்துக்கொண்டால் அதற்குள் முதல் நரக்(நரகம்) எனப்படும் துணை லோகம் இருக்கும்.  நரக் (நரகம்) எனப்படும் துணை லோகம், நரகத்தில் உள்ள மோசமான ஆவிகளுக்கு (பேய்கள், பிசாசுகள், எதிர்மறை ஆற்றல்கள் போன்றவை) ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் நரக்கை ஆக்கிரமித்துள்ள ஆவிகள்  பாதாளத்தின் முதல் நிலை நரகத்தில் இருக்கும் போது அனுபவிக்கும்  தண்டனையை விட  கடுமையான தண்டனையை நீண்ட காலத்திற்கு எதிர்கொள்கின்றன.

கீழே உள்ள வரைபடம் பிரபஞ்சத்தில் இருக்கும் 14 லோகங்களைக் காட்டுகிறது.

மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையைப் பற்றி அறிதல் - மரணத்திற்குப் பிறகு உண்மையில் என்ன நடக்கிறது

மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை, நல்ல அல்லது தீய லோகங்களில் தொடர்கிறது

தயவுசெய்து கவனிக்கவும் :

  1. எளிமைக்காக, நாம், இந்த வரைபடத்தில் இருப்பிலுள்ள லோகங்களை ஒன்றன் மேல் ஒன்றாகக் காட்டியிருந்தாலும், உண்மையில் அவை எல்லா திசைகளிலும் நம்மைச் சுற்றி உள்ளன. பூலோகமானது ஸ்தூல ரீதியாக கண்ணுக்கு தென்படுகிறது; அதேசமயம் மற்ற லோகங்கள் படிப்படியாக மேலும் மேலும் சூட்சுமமானவையாதலால், ஸ்தூல கண்களுக்குப் புலப்படாது. உண்மையில் வெவ்வேறு மக்கள், பூலோகத்தில் வாழ்ந்தாலும், அவர்களின் ஆன்மீக நிலை அல்லது எண்ணங்களுக்கு ஏற்ப வெவ்வேறு லோகங்களில் இருப்பதைப்போன்ற எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அனுபவிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, மகான்கள், அதாவது 70% ஆன்மீக நிலையில் உள்ளவர்கள், சொர்க்கம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள நல்ல லோகங்களுக்கு ஒத்த எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை பெறுகிறார்கள். இதற்கு நேர்மாறாக, திருடுவதற்கு திட்டமிடும் எண்ணத்துடன் இருப்பவர் நரகத்தின் முதல் லோகம், மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் சில செயல்களைத் திட்டமிடுபவர் நரகத்தின் 2 வது லோகம், அதுபோல கொலை செய்ய திட்டமிடுபவர் நரகத்தின் 7 வது லோகத்தில் இருப்பதை போன்ற எண்ணங்களை பெறுகிறார்கள். இருப்பினும் ஒரே நேரத்தில் இரண்டு லோகங்களிலிருக்கும், அதாவது சொர்க்கம் மற்றும் மஹர்லோகம் போன்ற இரு வெவ்வேறு லோகங்களுடன் தொடர்புடைய எண்ணங்களை ஒருவர் அனுபவிக்க முடியாது.
  2. புவர்லோகம், துல்லியமாகச் சொல்வதானால், கடவுளிடமிருந்து விலகிச் செல்லும் ஒரு பகுதி. இருப்பினும் நாம் அதை ஒரு நல்ல லோகமாக சித்தரித்துள்ளோம், ஏனெனில் மரணத்திற்குப் பிறகு, இந்த பகுதியிலிருக்கும் சூட்சும தேஹங்கள் ஆன்மீகத்தில் முன்னேறுவதற்காக பூமியில் பிறப்பதற்கான வாய்ப்புகள் இன்னும் இருப்பதால் நாம் அதை ஒரு நல்ல லோகமாக சித்தரித்துள்ளோம். சூட்சும தேஹங்கள் நரகத்தின் எந்த பகுதியில் தங்கினாலும், அவர்கள் பூமியில் பிறந்து கடவுளை நோக்கி முன்னேறுவதற்கான சாத்திய கூறுகள் குறைவே.

பல்வேறு வண்ணங்களை பயன்படுத்தியதற்கான விளக்கம்

  • பூமியானது செயலை (அதாவது சூட்சும அடிப்படையிலான ராஜஸீக கூறுகள் ) பிரதிநிதித்துவம் செய்வதால் சிவப்பு நிறத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பூலோகத்தில் மட்டுமே நமக்கு உடல் கிடைத்து அதன் மூலம் ஏதேனும் செய்யக்கூடியதாக உள்ளது.
  • சுவர்க்கம் இளஞ்சிவப்பு நிறத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது, இது ஏராளமான மகிழ்ச்சியைக் குறிக்கிறது.
  • மஞ்சள் ஆன்மீக ஞானம் மற்றும் அடிப்படை சூட்சும ஸாத்வீக தன்மையின் அதிகரிப்பை குறிக்கிறது. இது இறுதியாக மிக உயர்ந்த நிலையில் கிட்டத்தட்ட வெள்ளை நிறமாகிறது, இது வெளிப்படுத்தப்படாத இறை தத்துவத்தின் கடவுள் கொள்கையின் அருகாமையைக் குறிக்கிறது.
  • நரகத்தின் பகுதிகள் அடர் நிழல்கள் கருப்பு நிறத்தின் வெவ்வேறு வகைகளில் முதல் கருப்பு வரை குறிப்பிடப்படுகின்றன, ஏனெனில் இது அடிப்படையான சூட்சும தாமஸீக தன்மையின் அதிகரிப்பை குறிக்கிறது.

சத்வ, ரஜ மற்றும் தம பற்றிய கூடுதல் தகவலுக்கு, கீழே உள்ள பிரிவு 6 ஐப் பார்க்கவும்.

3. சுவர்க்கத்தில் மரணத்திற்குப் பிந்தைய  வாழ்க்கை மற்றும் பிரபஞ்சத்தின் பிற நல்ல பகுதிகள்/ லோகங்கள்

லோகங்கள்1 ஆன்மீக நிலை % ஸாத்வீக குணங்களின் விகிதம் மனிதர்களின் வகை பிரதானமான/முதன்மையான தேஹம்6 பிரதானமான/முதன்மையான உணர்வு
சத்யலோகம் 90 95 பூரண ஞானம் பெற்றவர்கள் மஹாகாரண தேஹம் (சூட்சும அஹம்பாவம்) ஸாத்வீக மகிழ்ச்சி (5%) பேரின்பம் & அமைதி (95%)
தபோ லோகம் 80 90 அதிக ஞானம் பெற்றவர்கள் காரண தேஹம் ஸாத்வீக மகிழ்ச்சி (25%) பேரின்பம் & அமைதி (75%)
ஜனலோகம் 70 85 அதிக ஞானம் பெற்றவர்கள் காரண தேஹம் ஸாத்வீக மகிழ்ச்சி (50%) பேரின்பம் & அமைதி (50%)
மஹர்லோகம் 605 80 ஞானம் பெற்றவர்கள் காரண தேஹம் ஸாத்வீக மகிழ்ச்சி 9 (75%)
பேரின்பம் & அமைதி (25%)10
உயர்நிலை சொர்க்கம் 50 75 அதீத புண்ணியங்கள் செய்தவர்கள் காரண தேஹம் அதிக மகிழ்ச்சி
தாழ்ந்த நிலை சொர்க்கம் 404 60 குறிப்பிட்ட அளவு புண்ணியங்கள் செய்தவர்கள் மனோ தேஹம் குறைவான மகிழ்ச்சி8
புவர்லோகம்2 25 40 சாதாரணமானவர்கள் மனோ தேஹத்தின் ஆசையுள்ள ஒரு பகுதி மகிழ்ச்சியின்மை7
பூலோகம் 203 33 சாதாரணமானவர்கள் ஸ்தூல தேஹம் மகிழ்ச்சி/மகிழ்ச்சியின்மை

அடிக்குறிப்புகள் (மேலே உள்ள அட்டவணையில் சிவப்பு நிறத்தில் உள்ள எண்களின் அடிப்படையில்):

  1. பூமி (ஸ்தூல) பகுதிக்கு அப்பால் இருக்கும் ஒவ்வொரு நல்ல மற்றும் தீய லோகங்கள் மேலும் மேலும் சூட்சுமமாகிறது. அதாவது ஐந்து புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் புரிதலுக்கு அப்பாற்பட்டது என்று பொருள். சத்யலோகமே உயர்ந்த சூட்சுமமான நல்ல லோகம், எனவே புலனுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு (ESP) நிலையை அடையாதவரை, அதை உணரவோ அல்லது புரிந்துகொள்வதோ மிகவும் கடினம்.
  2. ஆன்மீகப் பயிற்சியின்மை மற்றும் அதிகளவில் செய்த தீமைகளின் (பாவங்களின்) காரணமாக, இன்றைய யுகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள், மரணத்திற்குப் பிறகு புவர்லோகம் அல்லது நரகத்தில்  உள்ள லோகங்களில் ஒன்றிற்குச் செல்கிறார்கள்.  நாம்  செய்யும் பாவங்களின் (பூமியில் தவறான செயல்களை செய்வதால் ஏற்படுபடுவது) விகிதம் தோராயமாக 30% மாக  இருக்கும் பட்சத்தில் நாம் மரணத்திற்குப் பிறகு புவர்லோகம் செல்வோம். பாவங்கள் என்பது பொதுவாக மற்றவர்கள் மீது நாம் கொண்டுள்ள பொறாமை மற்றும் நிறைய ஆசைகளையும்  உள்ளடக்கியதாகும். மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில், பாதாளத்தின் தாழ்ந்த நிலையில் உள்ள லோகங்களிலிருக்கும் உயர்ந்த நிலையிலுள்ள ஆவிகளால் ஆன்மாக்கள் தாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏறக்குறைய உறுதியாக உள்ளன.
  3. பூமி மட்டுமே பல்வேறு ஆன்மீக நிலைகளைக் கொண்ட மக்கள் ஒன்றிணைந்த ஒரே பகுதியாகும். இருப்பினும், மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கையில், நமது ஆன்மீக நிலைக்கு ஏற்ப துல்லியமான சூட்சும பகுதிக்குச் செல்கிறோம்.
  4. மரணத்திற்குப் பின் சொர்க்கத்தை அடைவதற்கு தேவையான குறைந்தபட்ச ஆன்மீக நிலை 40% ஆகும். மேலும் விவரங்களுக்கு ஆன்மீக நிலை என்றால் என்ன மற்றும் 2016 இல் ஆன்மீக நிலையின் படி உலக மக்கள் தொகையின் பாகுபாட்டினை  விவரிக்கும் கட்டுரையைப் பார்க்கவும். இந்த பாகுபாடு வரயிருக்கும் மூன்றாம் உலகப்போர் வரை செல்லுபடியாகும். ஆன்மீக அறிவியலின் கண்ணோட்டத்தின் அடிப்படையில், மரணத்திற்குப் பின் சொர்க்கத்தை அல்லது நல்ல உயர்ந்த லோகத்தை அடைய தகுதியான நல்ல செயல்களை செய்ய வேண்டும். மேலும் அவற்றை எவ்வித எதிர்பார்ப்புமின்றி கடவுளை உணர்தல் அல்லது அவரோடு இரண்டற கலப்பது என்ற உணர்வோடு செய்யவேண்டும். மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்வை  நிர்ணையிக்கும் மூன்று அளவுகோல்கள் பின்வருமாறு :
    • தானே கர்த்தா என்ற உணர்வின்றி செயல் புரிவது அதாவது நான் செய்கிறேன் என்று எண்ணாமல், கடவுளே அதை என்னூடாக செய்து முடிக்கிறார் என்ற உணர்வோடு செயலாற்றுதல்.
    • செய்யும் செயலுக்கான புகழ் மற்றும் பாராட்டுகளை எதிர்பார்க்காமல் செய்வது.
    • முடிவுகளை எதிர்பார்க்காமல் செயலாற்றுதல். செயல்களை விட, அதன் பின்னால் இருக்கும் மனப்பான்மை அல்லது கண்ணோட்டமே முக்கியமானது.

    வெறும் 40% எல்லையில் உள்ள சூட்சும தேஹங்கள், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் தீயசக்திகளால் அடிக்கடி இழுக்கப்பட்டு புவர்லோகத்தில் இருக்கவேண்டியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  5. மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் சொர்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரு உயர்ந்த லோகத்தை அடைய, ஒருவர் 60% க்கும் அதிகமான ஆன்மீக நிலையில் இருக்க வேண்டும். ஆன்மீகப் பயிற்சியின் ஆறு அடிப்படை விதிகளின் படி சீரான ஆன்மீகப் பயிற்சி செய்யவேண்டும், மேலும் அஹம்பாவத்தை பெருமளவு குறைப்பதன் மூலம் மட்டுமே இதை அடைய முடியும்.
  6. முதன்மையான தேஹம் என்று நாங்கள் கூறுவது, மிகவும் செயல்பாட்டிலுள்ள மனம், புத்தி அல்லது சூட்சும அஹங்காரம்  முதலியனவாகும். உதாரணமாக, புவர்லோகத்தில் உள்ள சூட்சும தேஹங்கள் அதிகளவு  ஆசைகள் மற்றும் பற்றுகளைக் கொண்டுள்ளன. இதன் விளைவாக, பெரும்பாலும் அவர்கள் தங்கள் சந்ததியினர் மூலமாகவோ அல்லது பூமியில் உள்ள மக்கள் மூலமாகவோ தங்கள் ஆசைகளை நிறைவேற்ற முயற்சிக்கும் பேய்களாக மாறுகிறார்கள். இது நரகத்தின் கீழ் பகுதிகளிலிருக்கும்  உயர்-நிலை தீய சக்திகள் அவர்களை ஆட்கொள்ள வழியாகிறது.  தீயசக்திகள், அவர்களின் ஆசைகளை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி பூமியில் உள்ள மக்கள் பாதிப்படையச் செய்கிறார்கள்.
  7. புவர்லோகத்தில், சூட்சும தேஹங்கள் ஆசைகளை நிறைவேற்ற முடியாததால் துன்பத்தை மட்டுமே அனுபவிக்கின்றன.
  8. சொர்க்கலோகத்தில், சூட்சும தேஹங்கள் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிக்கின்றன. இது பூமியில் அனுபவிக்கும் மகிழ்ச்சியை விட அளவிலும், தரத்திலும் மற்றும் கால அளவிலும் மேன்மையானது. நாம் நல்ல லோகங்களுக்கு செல்ல செல்ல, மகிழ்ச்சியின் தரம் அதிகரிப்பதோடு துன்பமும் இருப்பதில்லை.
  9. ஸாத்வீகமான மகிழ்ச்சி என்பது எவ்வித எதிர்பார்ப்போ அல்லது நிபந்தனையோ இல்லாமல் பிறருக்கு உதவி செய்வதன் மூலம் பெறப்படும் மகிழ்ச்சியாகும். ஒரு செயலை அஹங்காரத்துடன் செய்யும் போது, அது ராஜஸீகமாகிவிடும்.
  10. அமைதி என்பது ஆனந்தத்தை விட உயர்ந்த ஆன்மீக அனுபவம்.

3.1 மரணத்திற்கு பிந்தைய வாழ்வில் நல்ல லோகங்களுக்கு செல்லுதல் மற்றும் பூமியில் மறுபிறப்பு

மரணத்திற்குப் பின், மஹர்லோகத்திற்கு கீழே உள்ள சூட்சும லோகங்களில், மக்கள் தங்கள் விதியைத் தீர்ப்பதற்கும், கொடுக்கல்-வாங்கல் கணக்குகளை முடிக்கவும் பூலோகத்தில் மறுபிறவி எடுக்க வேண்டும். மரணத்திற்குப் பிறகு ஒருவர் அவரின் உன்னத ஆன்மீக நிலையின் காரணமாக மஹர்லோகம் அல்லது ஜனலோகம் போன்ற உயர்ந்த லோகங்களை அடைந்தால், அவரின் எஞ்சியிருக்கும் விதியை (சஞ்சித கர்மா  ) அந்த லோகங்களிலிருந்தே அவரால் தீர்த்திடமுடியும் என்பதால் மறுபிறவி எடுக்கத் தேவையில்லை. இருப்பினும், இந்த உன்னத நிலையிலுள்ள சூட்சும தேஹங்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் மறுபிறவி எடுக்கலாம். அவர்களின் பரந்தமனப்பான்மையின் காரணமாக அவர்கள் மனிதகுலத்திற்கு ஆன்மீக வழிகாட்டவும், சமூகத்தை ஆன்மீக ரீதியில் உயர்த்தவும் மறுபிறவி எடுக்கிறார்கள்.

மரணத்திற்குப் பிந்தைய வாழ்வில் ஒருவரது ஆன்மீக வளர்ச்சிக்கான திறனை பொறுத்து சில சந்தர்ப்பங்களில் 60% ஆன்மீக நிலைக்குக் கீழே உள்ளவர்கள் கூட மஹர்லோகத்தை அடையலாம். நமது ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் இவ்வாறான ஆன்மீக வளர்ச்சிக்கான திறனை அதிகரிக்க உதவும்  5 காரணிகளை கண்டறிந்துள்ளோம். அவை

  • அதிக அளவு ஆன்மீக உணர்வை கொண்டிருப்பது (பாவ்),
  • குறைந்த அளவு அஹம்பாவத்துடன் இருத்தல்,
  • ஆன்மீக வளர்ச்சியில் தீவிர ஆசை கொண்டிருத்தல்,
  • வழக்கமான ஆன்மீக பயிற்சியை மிக உயர்ந்த நிலைகளில் அதிகமாக செய்தல்
  • தீய சக்திகளால் பாதிக்கப்படுவது அல்லது படாமலிருத்தல். தீய சக்திகளால் பாதிக்கப்படுவதோ / ஆட்கொள்ளப்படுவதோ ஆன்மீக வளர்ச்சிக்கான திறனை கடுமையாகத் தடுக்கும். அத்தகைய பாதிக்கப்பட்ட சூட்சும தேஹங்கள் 60% ஆன்மீக நிலையில் இருந்தாலும், அவர்கள் பிரபஞ்சத்தின் உயர்ந்த சூட்சும பகுதிகளை அடைவதை தீய சக்திகள் தடுக்கலாம்..

3.2 பூலோகத்தின் முக்கியத்துவம்

imp_of_earth_plane

பூமி மிகவும் முக்கியமானது. நாம் விரைவான ஆன்மீக வளர்ச்சியை அடைந்து, நமது கொடுக்கல் வாங்கல் கணக்கை மிகக் குறுகிய காலத்தில் தீர்க்கக்கூடிய ஒரே பிராந்தியம் இதுதான். இதற்கு முக்கிய காரணம், இங்கு நாம் ஸ்தூல தேஹத்தின் உதவியுடன், நமது ஆன்மீக வளர்ச்சி மற்றும் ஆன்மீக நிலையை மேம்படுத்தவும், அடிப்படை சூட்சும தாமஸீக கூறுகளைக் குறைக்கவும் பல விஷயங்களை செய்யலாம்.

மரணத்திற்குப் பிந்தைய ஆன்மீக வளர்ச்சியானது பெரும்பாலும் பூமியைத் தவிர, மஹர்லோகம் போன்ற சொர்க்கலோகத்திற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் மட்டுமே நிகழ்கிறது. ஏனென்றால், இறந்த பிறகு சொர்க்கத்தில் கிடைக்கும் முடிவில்லாத ஆனந்தத்தில் சூட்சும தேஹங்கள் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. புவர்லோகம் மற்றும் நரகத்தில் தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும். மேலும் பிற உயர் நிலை பேய்களால் ஏற்படும் கஷ்டங்களால், பலன் தரும் எந்தவொரு ஆன்மீக பயிற்சியையும் மேற்கொண்டு அங்கிருந்து மேலே வருவது மிகவும் கடினம்.

4. தீய லோகங்களில் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை: இறந்த பிறகு நரகத்திற்குச் செல்வது யார் மற்றும் நரகம் எப்படி இருக்கும்?`

நரகலோகம் (பாதாளம் ) ஸாத்வீக  குணங்களின் % மனிதர்களின் வகை பிரதானமான/ முதன்மையான தேஹம் பிரதானமான/ முதன்மையான உணர்வு
முதல் நிலை 28% ஸ்தூல தேஹம்
இரண்டாம் நிலை 25% மனோ தேஹத்தின் ஆசைகள் பகுதி
முன்றாம் நிலை 22% மனோ தேஹம்
நான்காம் நிலை 19% அதிகமான தாமஸீக  உணர்வு காரண தேஹம் மகிழ்ச்சியின்மை அதிகரிக்கும்
ஐந்தாம் நிலை 16% காரண தேஹம்
ஆறாம் நிலை 13% காரண தேஹம்
ஏழாம் நிலை 10% காரண தேஹம்
  • ஒருவர் பாதாளத்தில் உள்ள தாழ்வான லோகங்களுக்கு செல்லும்போது, சூட்சும ஸாத்வீக கூறுகள் அந்த சூழலில் படிப்படியாகக் குறைவதால், மகிழ்ச்சியை உணர முடியாது.
  • பாதாளத்திற்குள், ஆன்மீக சக்தியைப் பெற குறிப்பிட்ட வகையான ஆன்மீக பயிற்சிகளை செய்யும் சில ஆவிகள் உள்ளன.  மிக உயர்ந்த நிலையில் உள்ள இந்த ஆவிகள் பாதாளத்தின் ஏழாவது பகுதியைச் சேர்ந்த மந்திரவாதிகள். இவர்கள் ஆன்மீக நிலையில் 90% ஆன்மீக சக்தியுள்ள ஒரு மகானுக்கு நிகரானவர்கள். இவர்கள் குறைந்த ஆன்மீக சக்தியுடைய மற்ற அனைத்து வகையான ஆவிகளையும் கட்டுப்படுத்துகிறார்கள்.
  • ஒருவர் பாதாளத்தின் 1 முதல் 7 வரை உள்ள பல்வேறு பகுதிகளுக்குள் ஆழமாக செல்லச் செல்ல, சூட்சும தேஹம் அனுபவிக்கும் மகிழ்ச்சியின் அளவு குறைந்து, துன்பத்தின் அளவு பெருகிக்கொண்டே செல்கிறது. குறைந்தளவு மகிழ்ச்சி அனுபவிப்பது கூட கடந்த கால நல்ல நிகழ்வுகளை பற்றிய நினைவுகள், கடந்தகால வாழ்க்கையின் செல்வத்தின் இனிமையான நினைவுகள் போன்றவற்றில் மூழ்கி இருப்பதனாலாகும். கடந்தகால வாழ்க்கையில் ஏற்பட்ட உடல் வலி, அவமானகரமான  நிகழ்வுகள், கல்வி, வீடு, தொழில், குழந்தைகளிடமிருந்து மகிழ்ச்சியை எதிர்பார்த்தது போன்ற நிறைவேறாத ஆசைகளை பற்றிய நினைவுகள் ஆகியவற்றால் துன்பத்தை அனுபவிக்கிறார்கள் .
  • பாதாளத்திலும் அதனுடன் தொடர்புடைய நரகத்திலும் அனுபவிக்க வேண்டிய தண்டனை/ வலியின் அளவு அடுத்தடுத்த லோகத்துடன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும், பாதாளத்துடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு நரகத்திலும் அனுபவிக்க வேண்டிய தண்டனை காலம் அதிகமாக உள்ளது. பாதாளத்தின் முதல் நிலை 100% என்று நாம் கருதினால், அதற்குரிய முதல் நரக் பகுதியில் தண்டனை 50% அதிகம், அதாவது 150%.

பின்வரும் அட்டவணையில் பாதாளத்தின் பல்வேறு தளங்களில் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி மற்றும் மகிழ்வின்மையின்  சராசரி மதிப்பீடு உதாரணத்துடன் விளக்கப்பட்டுள்ளது.

நரகலோகம் (பாதாளம் ) நரகலோகம் (பாதாளம் ) %1 இன்பத்திற்கான  உதாரணங்கள் துன்பத்தின்1% துன்பத்திற்கான  உதாரணங்கள்
முதல் நிலை 30% கடந்தகால வாழ்க்கையில் நடந்த நல்ல நிகழ்வுகளை நினைத்து மகிழ்ச்சியாக இருத்தல் 50% கடந்தகால வாழ்க்கையில் எற்பட்ட உடல் வலி மற்றும் அவமானகரமான நிகழ்வுகளை நினைத்து வருத்தமாக  இருத்தல்
இரண்டாம் நிலை 25% உலக வாழ்க்கையில் கிடைத்த செல்வத்தை பற்றிய இனிமையான நினைவுகளுடன் இருத்தல் 55% நிறைவேறாத ஆசைகளை நினைத்து வருத்தப்படுத்தல், உதாரணமாக, கல்வி, வீடு, தொழில், குழந்தைகள் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி
முன்றாம் நிலை 20% கடந்தகால வாழ்க்கையில் நிறைவேறிய ஆசைகளை நினைத்து மகிழ்ச்சியாக இருத்தல் 60% ஸ்தூல தேஹம் இல்லாததால் நிறைவேறாத ஆசைகளால் மகிழ்ச்சியற்று இருத்தல்
நான்காம் நிலை 15% பிறர் படும் துன்பத்தைப் பார்த்து நொடிப் பொழுதின் மகிழ்ச்சியும், தான் மட்டும் துன்பப்படவில்லை என்ற உணர்வுடன் இருத்தல் 70% பிறர் படும் துன்பத்தைப் பார்த்து நொடிப் பொழுதின் மகிழ்ச்சியும், தான் மட்டும் துன்பப்படவில்லை என்ற உணர்வுடன் இருத்தல்
ஐந்தாம் நிலை 10% எவரேனும் ஒருவர் என்றாவது ஒரு நாள் ஒரு துன்பத்திலிருந்தாவது விடுவிப்பார்கள் என்ற எண்ணத்துடன் கூடிய கணநேர மகிழ்ச்சி 80% மந்திரவாதிகளிடம் அடிமை வாழ்க்கை மற்றும்  துன்பத்திலிருந்து ஒரு போதும் தப்ப முடியாது என்ற எண்ணங்களால் மிகுந்த மனச்சோர்வு
ஆறாம் நிலை எதுவும் இல்லை 90% எதுவும் இல்லை
ஏழாம் நிலை எதுவும் இல்லை 100% தொடர்ச்சியான துன்பத்தினால் அக்கறையற்ற  தன்மையை அடைதல்
குறிப்பு 1: பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மகிழ்ச்சி மற்றும் மகிழ்வின்மையின் அளவுகள் 100% ஆகக் காட்டப்படுவதில்லை. காரணம் எஞ்சியுள்ள சதவீதம் பாதாளத்தில் உள்ள சூட்சும தேஹங்கள் நடுநிலையான உணர்வு நிலையில் இருக்கும். உதாரணமாக, சில சாதாரணமான பணிகளைச் செய்யும்போது மகிழ்வான மற்றும் மகிழ்வற்ற எண்ணங்களில்லாமல் சம நிலையில் இருக்கும்.

5. மரணத்திற்குப் பிறகு பிரபஞ்சத்திலுள்ள சூட்சும லோகங்களுக்கு இடையில் சூட்சும தேஹங்களின் நகர்வு(அசைவு)

மரணத்திற்கு பிந்தைய வாழ்வில், ஒருவரின் ஸத்வ, ரஜ மற்றும் தம பண்புகளின் அடிப்படை இயல்புடன் பொருந்தக்கூடிய  லோகம் ஒதுக்கப்படுகிறது. இதுவும் ஒருவரின் ஆன்மீக நிலையின் செயல்பாடாகும். ஆகையால், கீழ்நிலையில் உள்ள நல்ல லோகங்களில் இருந்து உயர் நிலைக்கோ, அல்லது முதல் அல்லது இரண்டாவது தீய லோகங்களில் இருந்து நரகத்தின் ஆழமான லோகங்களுக்கோ சூட்சும தேஹங்களால் செல்ல இயலாது. அதாவது பூலோகத்தில் தாழ்வான இடத்தில் வசிப்பவர்கள் அதிக உயரமான  இடங்களுக்குச் செல்லும் போது சுவாசிப்பதற்கு சிரமப்படுவதைப் போல. ஆனால் மிக உயரமான பகுதியிலேயே இருப்பவர்கள் இந்த சூழ்நிலையை சமாளிக்கிறார்கள்..

6. இறந்த பிறகு நாம் செல்லும் இடத்தை தீர்மானிப்பது எது?

மரணத்தின் போது ஸ்தூல தேஹம் செயலற்று, அது இயங்குவதற்குப் பயன்படுத்தப்படும் உயிர்சக்தி பிரபஞ்சத்திற்குள் விடுவிக்கப்படுகிறது. இறக்கும் போது உள்ள உயிர்சக்தி, சூட்சும தேஹத்தை பூமிக்கு அப்பால் தள்ளுகிறது. ஒரு எரிபொருளின் எடை ராக்கெட்டை எவ்வளவு தூரம் செலுத்தும் என்பதை தீர்மானிப்பது போல, சூட்சும தேஹத்தின் எடை அது இறந்த பிறகு அதன் வாழ்க்கையில் எந்த லோகத்திற்குச் செல்லவேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.

சூட்சும தேஹத்தின் ‘எடை’ என்பது நம்மிடம் உள்ள சூட்சும தம குணங்களின் செயல்பாட்டின் அளவை பொறுத்தது.

மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையைப் பற்றி அறிதல் - மரணத்திற்குப் பிறகு உண்மையில் என்ன நடக்கிறது

சூட்சும தேஹத்தின் ‘எடை’ என்பது நம்மிடம் உள்ள
சூட்சும தம குணங்களின் செயல்பாட்டின் அளவை பொறுத்தது.

மூன்று சூட்சும அடிப்படை குணங்கள் : நாம் ஒவ்வொருவரும் மூன்று சூட்சும  அடிப்படை கூறுகள் அல்லது குணங்களால் ஆனவர்கள். இவை ஆன்மீக இயல்புடையவை. நம் கண்களுக்கு புலப்படாதவை. ஆனால் அவை நமது ஆளுமைகளை வரையறுக்கின்றன. அவையாவன :

  • ஸாத்வீகம்: தூய்மை மற்றும் அறிவு
  • ராஜஸீகம்: செயல் மற்றும் பேரார்வம்
  • தாமஸீகம்: அறியாமை மற்றும் செயலற்ற தன்மை. தற்போதைய காலகட்டத்தில் ஒரு சராசரி மனிதனில் அடிப்படை சூட்சும தம குணங்கள் 50% வரை அதிகமாக உள்ளது.

மேலும் விபரங்களுக்கு மூன்று சூட்சும அடிப்படை குணங்கள் பற்றிய கட்டுரையைப் படிக்கவும்.

நம்மிடம் உள்ள அதிகமான ரஜ, தம குணங்களின் அளவைப்பொறுத்து நம்மிடம் உள்ள பின்வரும் குணங்களை அதிகளவு வெளிப்படுத்துகிறோம். இதனால் நமது சூட்சும தேஹத்தின் எடை அதிகரிக்கும். இது நாம் மரணத்திற்கு பின், எந்த சூட்சுமலோகத்திற்கு செல்லவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

  • உலக விஷயங்களில் அதிக பற்றுதல் மற்றும் சுயநலம்
  • அதிகமான நிறைவேறாத ஆசைகள்
  • பழிவாங்கும் உணர்வுகள்
  • அதிக அளவு ஆளுமை குறைகள் அல்லது தவறான செயல்கள் செய்தல்
  • கோபம், பேராசை, பயம் போன்ற அதிகளவு ஆளுமை குறைபாடுகள்.
  • அதிகளவு அஹம்பாவம்: ஒரு நபர் ஆன்மாவிற்கு பதிலாக தனது உடல், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் மூலம் எந்த அளவிற்கு தன்னை அடையாளம் காட்டுகிறார் என்பதையே அஹம்பாவம் என்று கூறுகிறோம்.
  • குறைந்த அளவு ஆன்மீக நிலையில் இருத்தல்

ஆன்மீகப் பயிற்சியின் ஆறு அடிப்படை விதிகளின்படி செய்யப்படுகின்ற நிலையான ஆன்மீகப் பயிற்சியின் மூலம் மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ள அடிப்படையான சூட்சும தாமஸீக தன்மைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பண்புகளின் விகிதம் நிரந்தரமாக குறையும். இது மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் நமக்கு உதவும். சுய உதவி புத்தகங்கள் மூலம் உளவியல் முன்னேற்றம் அடைதல், நல்லவராக இருக்க முயற்சிப்பது, மேலோட்டமாக சிறந்தவையாக இருந்தாலும் அவை தற்காலிகமானவையே.

6.1 மரணத்தின் போது மன நிலையின் முக்கியத்துவம்

மேலே குறிப்பிடப்பட்டதைத் தவிர, மரணத்தருவாயில் இருக்கும் மன நிலை மிகவும் முக்கியமானது. நமது மன நிலை பொதுவாக நம்முள் உள்ள சூட்சும அடிப்படை குணங்களின் விகிதத்துடன் தொடர்புடையது.

ஒருவர் மரணத்தின் தருவாயில் இருக்கும் போது கடவுளின் நாமத்தை ஜபிப்பது போன்ற ஆன்மீக பயிற்சியை செய்வதால், ஆசைகள், பற்றுதல்கள், ஆவிகள் போன்றவற்றின் தாக்கம் அந்த நபர் ஆன்மீக பயிற்சி செய்யாமல் இருக்கும்போது ஏற்படுவதை விட குறைவாகவே இருக்கும். இது அவரது சூட்சும தேஹத்தை இலகுவாக்கி நல்ல லோகங்களில் உள்ள சிறந்த துணை லோகங்களை அடைய வழிவகுக்கும். இது அவர் நாமஜபம் செய்யாமல் அடையும் லோகத்தை விட மிகவும் சிறந்ததாக இருக்கும்.

இறக்கும் தருவாயில், ஒருவர் கடவுளின் பெயரை உச்சரித்து,  கடவுளின் விருப்பத்திற்கிணங்க சரணடையும் நிலையில் இருந்தால், மரணத்திற்குப் பிந்தைய வாழ்வில் இன்னும் சிறந்த நிலையை அடைவார். மேலும் அவரது தற்காலிக இருப்பு மின்னல் வேகத்தில் நடக்கும். ஏனென்றால், பூமியில் வாழும் போது சரணடையும் குணத்துடன் இருப்பவரது மரணத்திற்குப் பிந்தைய வாழ்வில் அவரது அஹம்பாவம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. மேலும், அவரது நல்வாழ்வின் முழுப் பொறுப்பும் அவரது ஆன்மீக வழிகாட்டியின் (குருவின்) மூலம் வழிநடத்தப்படுகிறது.

6.2 இறந்த பிறகு நரகத்திற்குச் செல்வது யார்?

பொதுவாக பூமியில் நாம் வாழும் போது செய்யும் பின்வரும் செயல்களே மரணத்திற்கு பிந்தைய வாழ்வில் நாம் பாதாளத்தின் எப்பகுதிக்கு செல்வோம் என தீர்மானிக்கின்றன.

நரகலோகம் (பாதாளம்) பாவங்களின் % பாவங்களின் வகைகளுக்கான உதாரணங்கள்
முதல் நிலை 40% தனிநபர்களுக்கு மட்டுமே தீங்கு விளைவித்தல்
இரண்டாம் நிலை 50% பெரியளவிலான மோசடியில் பலரை ஒரே நேரத்தில் ஏமாற்றுவது போன்ற சமூகத்தின் சில பகுதிகளுக்கு தீங்கு விளைவித்தல்
முன்றாம் நிலை 55% உணவு அல்லது மருந்துகளை கலப்படம் செய்தல் போன்ற சமூகத்தின் பெரும் பகுதிகளுக்கு தீங்கு விளைவித்தல்
நான்காம் நிலை 60% சமூகத்தின் சில பகுதிகளுக்கு கட்டமைக்கப்பட்ட தீங்கு விளைவித்தல் – துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் தொடர்புடைய வன்முறைகள் அடங்கும்.
ஐந்தாம் நிலை 70% சமூகத்திற்கு தீங்கு விளைவிக்க மற்றவர்களை தூண்டுதல்
ஆறாம் நிலை 80% ஒரு நாட்டிற்குள்/ ஒரு பகுதிக்கு தீங்கு விளைவித்தல்
ஏழாம் நிலை 90% ஒட்டுமொத்த தேசத்திற்கும் சமுதாயத்திற்காக உழைக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவித்தல்

7. தற்கொலை செய்துகொள்வதால் கிடைக்கும் மரணத்திற்குப் பிந்தைய  வாழ்க்கை

விரைவில் பகிரப்படும்..

8. இறந்த பிறகு மறுபிறப்பு  எடுப்பதற்கு காலதாமதம் ஏற்படுவதன் காரணம்  என்ன?

aft_death_bfr_birth

மனிதனின் கடந்த கால வாழ்க்கையைக் கண்டறிய ஹிப்னாடிக் ட்ரான்ஸ் மூலம் ஆராய்ச்சி செய்த போது, பூமியில் இரண்டு (மறு)பிறப்புகளுக்கு இடையிலான கால தாமதம் சராசரியாக 50 முதல் 400 ஆண்டுகள் வரை இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கால தாமதத்திற்கான காரணங்கள் பின்வருமாறு:

  • மரணத்திற்குப் பிறகு, சூட்சும தேஹம் அதன் பாவ புண்ணியங்களின் அளவை பொறுத்து சில காலங்களுக்கு சொர்க்கலோகம் அல்லத புவர்லோக பகுதியில் இருக்கும்.
  • பல்வேறு நபர்களுடன் முந்தைய பிறவிகளின் கொடுக்கல் வாங்கல் கணக்கை முடிக்க பூமியில் சாதகமான சூழ்நிலைகள் இருக்க வேண்டும். இது கர்ம விதிக்கு உட்பட்டது. தங்களுடன் கொடுக்கல் வாங்கல் கணக்கு வைத்திருக்கும் பல்வேறு நபர்களும் மறுபிறவி எடுக்கத் தயாராகும் வரை சூட்சும தேஹத்தின் மறுபிறப்பு ஒத்திவைக்கப்படுகிறது.
  • ஹிப்னோடிக் ட்ரான்ஸ் நிலையில் இருப்பவர், ஏதேனும் முற்பிறவி ஒன்றைப் பற்றி தெரிவிக்காமலே போகலாம். அந்த குறிப்பிட்ட மறுபிறவி மிகவும் சீரற்றதாகவோ அல்லது சுருக்கமாகவோ இருந்து, அது அவரது நினைவில் இல்லாமல் இருக்க வாய்ப்பு இருப்பதே இதன் காரணமாகும்.

மரணத்திற்குப் பிறகு நரகத்தின் ஆழமான பகுதிகளுக்குத் தள்ளப்பட்ட, சூட்சும தேஹங்ளின் மறுபிறப்புகளுக்கு இடையிலான கால தாமதம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கூட இருக்கலாம். அவர்கள் தங்கள் தண்டனையை முடிக்கும் வரை அந்தந்த பாதாளத்தில் தங்குவார்கள். இது பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பிரபஞ்சம் அழியும் வரை அவர்களின் வாழ்க்கையில் பாதாள லோகத்தில் தவிப்பதைக் குறிக்கிறது.

9. மரணத்திற்குப் பின் வாழ்க்கை – சுருக்கமாக

பல்வேறு லோகங்களைப் பற்றிய மேற்கண்ட உண்மைகள், மரணத்திற்குப் பின் நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சாத்தியமான விளைவுகளைப் பற்றிய உண்மையை நமக்கு உணர்த்துகின்றன. ஆன்மீகப் பயிற்சி அல்லது அதீத புண்ணியச் செயல்களால் மட்டுமே ஒருவர் உயர்ந்த சூட்சும பகுதிகளுக்குச் சென்று, அதன் மூலம் துன்பம் மற்றும் தண்டனையைத் தவிர்த்து, மரணத்திற்குப் பின் வாழ்க்கையில் உயர்ந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். ஆன்மீக பயிற்சிக்கு உகந்த சூழ்நிலையுடன் பூமியில் மறுபிறவிக்கான சிறந்த வாய்ப்புகள் உள்ளன. இதனால் ஒருவர் பிரபஞ்சத்தில் உள்ள சூட்சும லோகங்களுக்கு மேல்நோக்கி செல்ல முடியும். தற்போதைய கலியுகத்தில், காலம் செல்லச் செல்ல, மக்கள் மரணத்திற்குப் பிறகு உயர்ந்த லோகங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு

மரணத்திற்கு பின் நரகத்தின் பிற தாழ்ந்த சூட்சும லோகங்களான புவர்லோகம் போன்றவற்றிற்கு சென்றால், அங்கு பல நூற்றாண்டுகளுக்கு தங்கி நமது பாவங்கள் முழுமையாக தீரும் வரை கடுமையான தண்டனைகளை அனுபவித்து பிறகு பூமியில் மறுபிறவி எடுக்க வாய்ப்பு கிடைக்கும்.

தற்போதய காலகட்டத்தில் பூமியில் ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை விதிகளின் படி நிலையான பயிற்சியை செய்வது, அலைக்கு எதிராக நீந்துவதற்கு சமமானதாகும். ஆனால் அதுவே மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் உயர்ந்த சூட்சும லோகங்களுக்கு முன்னேறுவதற்கான உத்தரவாதமாகும்