நம் ஒவ்வொருவருக்கும் வலியை தாங்கும் திறனானது வேறுபடும்; பௌதீகமான அல்லது உணர்வுபூர்வமான அல்லது உளவியல் ரீதியான வலி என அது எதுவாகவும் இருக்கலாம். சில சமயங்களில் நாம் வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகள் வலி மிகுந்ததாக அமையும். அந்த வலி மிகுந்த நிகழ்வுகள் ஒரு திருமண முறிவாகவோ அல்லது நெருங்கிய உறவினரின் மரணமாகவோ இருக்கலாம். பின்வரும் உதாரணங்கள் மூலம் வலியினை தாங்கும் திறனின் அளவிலுள்ள வித்தியாசத்தினை புரிந்துகொள்ளலாம்:.
ஒரு பெண்மணி, தன் முடி ஒப்பனையாளர் அவளது முடியை சிறிது அளவு அதிகமாக வெட்டி விட்டார் என்பதற்காக மிகவும் சினம் கொண்டு இதை ஒரு பெரிய பிரச்சனையாக்கி பல நாட்கள் தன் நண்பர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.
இதற்கு மாறாக ஒரு பெண்மணி திருமணமான சிறிது நாட்களிலேயே கணவனை இழந்து பெரிய துக்கத்திற்கும் பாதிப்பிற்கும் ஆளானாலும் தனது ஆன்மீக பயிற்சியினால் மன வலிமையையும் பொறுமையும் பெற்று தனது கஷ்டத்தை வெளிப்படுத்தாமல் மகனை இழந்து துக்கம் தாளாது துடித்த கணவனது பெற்றோர்களை சமாதானப் படுத்தினாள்.
முதல் உதாரணத்தில் ஒன்றும் இல்லாத சிறு விஷயத்திற்கு ஒரு பெண்மணி கோவத்தை வெளிப்படுத்தியதையும் மாறாக அடுத்த உதாரணத்தில் ஒரு பெண்மணி பேரிடி போன்ற தன் அன்புக் கணவனின் இழப்பை பொறுமையுடன் தாங்கிக் கொண்டதையும் பார்த்தோம். எனவே எம்மாதிரியான சந்தர்ப்பங்கள் நம்மிடமுள்ள வேண்டாத குணங்களை வெளிக்கொண்டு வரும் என்பது நமக்குத் தெரிவதில்லை. இது போல் ஒரு சந்தர்ப்பத்தை நேருக்கு நேர் சந்திக்கும்போதுதான் நம் குறைகள் வெளிப்படுகின்றன. மாறாக நாம் விடாது தொடர்ந்து ஆன்மீக பயிற்சி செய்வதன் மூலம் எந்த விதமான துன்பத்தை விளைவிக்கும் சந்தர்ப்பங்களையும் எதிர்கொள்ள தேவையான மன வலிமையைப் பெறுவோம்.