இதுவே ஆன்மீக பயிற்சியின் அடுத்த படியாகும். இங்கு ஒருவர் ஏற்கனவே ஆன்மீக பயிற்சியின் முக்கியத்துவத்தினை அறிந்திருப்பார். அத்துடன் இறைவனுடைய நாமத்தினை உச்சரித்து பல ஆன்மீக அனுபவங்களை பெற்றிருப்பதோடு ஸத்சங்கத்திலும் கலந்து கொண்டிருப்பார். ஆன்மீக பயிற்சியானது தன்னுடைய வாழ்க்கையில் எவ்வாறு நல்ல விதத்தில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பதனையும் தான் எந்த ஒரு நிலைமையில் இருந்தாலும் இன்பத்துடன் இருக்கமுடியும் என்பதனையும் அறிந்திருப்பார். ஒருவரின் ஆன்மீக பயணத்தில் இந்த கட்டத்தில் அவர் சத்யத்திற்கு செய்யும் சேவையினை (ஸத்சேவை) மேற்கொள்கிறார்.
சத்யத்திற்கு செய்யும் சேவையில் மிக சிறந்தது ஆன்மீக ஞானத்தை பரப்புவதற்கு உதவுதல் ஆகும். இதனை பல விதங்களில் மேற்கொள்ளலாம். உதாரணமாக, ஒருவர் கற்றுக் கொண்டதையும் அனுபவித்ததையும் மற்றவருக்கு கூறுவதன் மூலம் அவர்களும் அந்த நல்ல மாற்றத்தினால் வாழ்வில் நன்மைகளை பெற முடியும். சில ஸாதகர்கள், ஆன்மீக விஞ்ஞானத்தை பற்றி மக்களுக்கு விழிப்பூட்டுவதற்காக இலவசமாக விரிவுரைகளை வழங்கி ஆன்மீகத்தினை பரப்புவதில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் இதன்மூலம் எந்த பணத்தையும் சம்பாதிக்கவில்லை – எனினும் அவர்களுக்கு கிடைக்கும் பயன் என்ன? அவர்கள் பேரின்பம் (ஆனந்தம்) என்ற உள் உணர்வினை பெறுகிறார்கள், இதனை இந்த அளவு பணமோ அல்லது உலக வெற்றியோ கொடுக்க முடியாது. சிலருக்கு விரிவுரைகள் வழங்குவதற்கு வசதி இல்லை. அவர்கள் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதுகிறார்கள் அல்லது வலைத்தளத்துடன் தொடர்புடைய வேலைகளில் உதவ, தங்களது கணினி திறன்களைப் பயன்படுத்துகிறார்கள். சத்யத்திற்கு செய்யும் சேவைக்கு இந்த வலைத்தளம் ஒரு உதாரணம் ஆகும். ஆன்மீக புத்தகங்களுக்கு அழகிய அட்டை படங்களை வடிவமைப்பதன் மூலம் சிலரும், விரிவுரைகள் நடத்த செல்லும் ஸாதகர்களின் ரயில் பயணச்சீட்டை பெற்று கொடுப்பதன் மூலம் சிலரும் இறைவனுக்கு சேவை செய்கிறார்கள். ஒரு எளிய அர்ப்பண மனம் கொண்ட பெண் ஸாதகரிடம் மேற்கூறிய எந்த திறன்களும் காணப்படவில்லை; ஆனால் அவரால் நன்கு உணவு சமைக்க முடியும். ஆகவே அவர் விரிவுரைகள் நடத்த நகரத்திலிருந்து வெளியே செல்லும் ஸாதகர்களுக்கு மதிய நேர உணவை கட்டி கொடுகிறார். ‘SSRF க்கு எவ்வாறு பங்களிக்க முடியும்?‘ என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
நாம் எதனை சிறப்பாக செய்கின்றோமோ அதனை நம் இருதயத்தில் பக்தியுடன் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். சேவை செய்யும் பணிவு மனப்பான்மை இருக்க வேண்டுமே தவிர, இவ்வளவு நான் செய்கின்றேன் எனும் அகம்பாவம் இருக்கக்கூடாது.