எனக்கு குரு உபதேசித்த குரு மந்திரத்தை மட்டுமே ஜபித்தால் போதுமா அல்லது நான் சார்ந்துள்ள எனது மதத்தை சேர்ந்த இறைவனது நாமத்தையும் ஜபிக்க வேண்டுமா?
1. குருமந்திரத்தின் வரைவிலக்கணம்
தனது ஆன்மீக வளர்ச்சியின் மூலமாக ஒரு சிஷ்யன் இறைவனை உணர்வதற்கு அனுகூலமாக ஒரு குரு அவனுக்கு இறைவனின் நாமம், மந்திரம், எண் அல்லது ஒரு வார்த்தை இவைகளில் ஏதாவது ஒன்றை உபதேசிப்பதே குருமந்திரம் எனப்படுகிறது. பெரும்பாலும் சிஷ்யனது ஆன்மீக வளர்ச்சிக்கு அனுகூலமான இறைவனது நாமத்தை குரு சிஷ்யனுக்கு உபதேசிப்பதே வழக்கமாக உள்ளது.
இறைவனை உணர்தல் என்பது ஒரு மனிதன் அடையக் கூடிய மிக உன்னதமான ஆன்மீக அனுபவமாகும். அதாவது ஒருவர் இடை-விடாது தொடர்ச்சியாக இறை தத்துவத்துடன் ஒன்றியிருக்கும் அனுபவம் அல்லது தொடர்ச்சியாக ஆனந்த நிலையில் இருக்கும் அனுபவமாகும்.
55% ஆன்மீக நிலையில் உள்ள ஒருவரே சிஷ்யனாக கருதப்-படுகிறார். இதன் பொருள் என்னவென்றால் ஒரு ஸாதகன் எப்போது தனது ஆன்மீக வளர்ச்சியில் அதீத ஈடுபாடு கொண்டு அதற்காக தன் உடல், மனம், செல்வம் எல்லாவற்றையும் 55% ற்கு மேல் தியாகம் செய்ய தயாராக உள்ளானோ அப்போதே அவன் சிஷ்யனாகும் தகுதியுள்ளவன் ஆகிறான். ஆன்மீக பயிற்சியின் 6-வது அடிப்படை கோட்பாடு என்ற கட்டுரையை பார்க்கவும்.
2. குருமந்திரத்தின் ஆன்மீக பலம்
குருமந்திரத்தின் பலாபலன் அதை உபதேசிப்பவரின் ஆன்மீக நிலையைப் பொருத்து இருக்கிறது.
குருமந்திரத்தின் ஆன்மீக பலம்
நாமத்தை அளிப்பவரின் ஆன்மீக நிலை (%) | அளித்த நாமத்திலுள்ள சைதன்யத்தின் அளவு (%) |
---|---|
50% | 2% |
60% | 10% |
70% | 80% |
80% | 90% |
90% | 100% |
100% | 100% |
மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டபடி ஒரு குரு அல்லது மகான் 70% ஆன்மீக முன்னேற்றம் அடைந்த நிலையில் இருந்தாலே அவர் உபதேசிக்கும் குருமந்திரம் உண்மையான ஆன்மீக பலம் அல்லது சக்தி பொருந்தியதாக இருக்கும். பெரும்பாலான மக்கள் அறியாமையினால் மகான்கள் அல்லாதவர்களின் ஆன்மீக வழி-காட்டுதலை பின்பற்றுகிறார்கள். இது தவறில்லை. ஏனெனில் சாதாரண நடைமுறைப்படி ஒரு மனிதன் தன்னை விட 20% அதிக ஆன்மீக நிலை உள்ள ஒருவர் சொல்வதையே புரிந்து கொண்டு கடைபிடிக்க முடியும். உதாரணமாக 30% ஆன்மீக நிலை உள்ள ஒரு மனிதனுக்கு 50% ஆன்மீக நிலையில் உள்ள ஒருவரின் ஆன்மீக வழிகாட்டுதலே பொருத்தமாக இருக்கும். ஒரு மனிதன் உண்மை-யான ஈடுபாட்டுடன் ஆன்மீக பயிற்சி செய்வதுடன் ஆன்மீகத்தில் உன்னத நிலை அடைய வேண்டும் என்னும் தீவிர ஈடுபாடும் உடையவராக இருந்தால் அப்போது வெளிப்படாத குருதத்துவம் அந்த ஸாதகரின் வாழ்க்கையில் அவரது ஆன்மீக வளர்ச்சிக்கு அனுகூலமான சந்தர்ப்பங்களை (ஆன்மீக வழிகாட்டிகள் அடிப்-படையில்) ஏற்படுத்திக் கொடுக்கும்.
3. குரு எனக்கு உபதேசித்த குருமந்திரத்தை மட்டுமே ஜபித்தால் போதுமா அல்லது நான் சார்ந்துள்ள எனது மதத்தை சேர்ந்த இறைவனது நாமத்தையும் ஜபிக்க வேண்டுமா?
மேலே குறிப்பிட்ட கேள்விக்கு பதில் குருமந்திரம் கொடுக்கப்பட்ட சூழ்நிலையை பொருத்தே அமையும்.
1.மந்திரம் கொடுத்த குரு 70% -க்கு மேற்பட்ட ஆன்மீக நிலையிலும் சிஷ்யன் 55% ஆன்மீக நிலைக்கு மேற்பட்டும் இருத்தல் வேண்டும்.
- இந்த நிலையில் குருவின் ஸங்கல்பத்தினால் அந்த மந்திரத்தில் ஆன்மீக பலம் நிறைந்திருப்பதால் அந்த சிஷ்யன் அந்த குருமந்திரத்தை தொடர்ந்து ஜபம் செய்வது மிகவும் நன்மை பயக்கும்.
2.உபதேசம் செய்யும் குரு 70% ஆன்மீக நிலையிலும் சிஷ்யன் 30% – 40% ஆன்மீக நிலையில் இருந்தால் –
- மேலே குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒருவருக்கு குருமந்திரத்திலோ அல்லது அவர் பிறந்த மதத்திற்குரிய கடவுளின் பெயரையோ, எதில் அவருக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதோ அந்த நாமஜபத்தை மேற்கொள்ளலாம்.
- 50% ஆன்மீக நிலை அடைந்த ஒருவர் உபதேசிக்கும் நாமஜபத்தை ஒருவர் செய்தாலும் அதுவும் ஒரு விதத்தில் அவருக்கு நன்மை பயக்கும். எவ்வாறெனில் மற்றவர் உபதேசித்த மந்திரத்தை ஜபிப்பதன் மூலம் அவர் சுய இச்சையிலிருந்து மற்றவரின் இச்சை என்ற நிலைக்கு உயர்கிறார். அதாவது தனது சுய விருப்பத்தை விட்டுக் கொடுத்து மற்றவரது விருப்பத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் அவரது அஹம்பாவம் அந்த அளவிற்கு குறைகிறது. ஆன்மீக வளர்ச்சியில் உன்னத நிலை எட்ட வேண்டும் என்ற தீவிர ஈடுபாடு உடைய ஒரு ஸாதகர் குருமந்திரத்தை முழு நம்பிக்கையுடன் தொடர்ந்து ஜபித்து வருவாராயின் அவரது வாழ்க்கையில் வெளிப்படாத நிலையில் உள்ள குரு தத்துவமே ஒரு உண்மையான குருவிடம் அவரை கொண்டு சேர்க்கும்.
சுய விருப்பம், மற்றவரது விருப்பம் மற்றும் இறைவனது விருப்பம். என்ற கட்டுரையைப் பார்க்க்கவும்.
4. குருமந்திரத்துடன் தொடர்புடைய சில குறிப்புகள்
- சிலரது வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சனைகளின் மூல காரணம் ஆன்மீக சம்பந்தப்பட்டதாக இருந்தால் அந்த சமயங்களில் அதிலிருந்து விடுபட அதாவது அந்த ஸாதகர் தனது ஆன்மீக பயிற்சிகளுக்கு ஏற்படும் இடையூறுகளில் இருந்து விடுபட சில மகான்கள் சில மந்திரங்களை உபதேசிக்கக் கூடும். இது அந்த பிரச்சனைக்கு நிவாரணமே தவிர அதையே குருமந்திரமாக நினைக்கக் கூடாது. குருமந்திரம் என்பது ஆன்மீக முன்னேற்றத்தில் உன்னத நிலையை அடைந்து இறை தத்துவத்தை முற்றிலுமாக உணர்ந்து கொள்ள மட்டுமே உதவும் என்பதை ஸாதகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
- சிலர் குருமந்திரம் கொடுக்கும்படி குருவை வற்புறுத்தலாம். குரு ஸ்தானத்தில் உள்ள ஒரு சிலர் சிஷ்யனின் வற்புறுத்தலுக்காக குருமந்திரமும் கொடுத்து விடலாம். ஆனால் ஸாதகர்களது தியாக உணர்வும் இறை தத்துவத்தை உணர்வதில் அவர்களுக்கு உள்ள ஆர்வமும் 55% இருந்தாலே குருமந்திரம் அவர்களுக்கு பயன்படும். இல்லையென்றால் குருமந்திரம் பெயரளவில் மட்டுமே இருக்கும். அதே போன்று ஆர்வமோ ச்ரத்தையோ இன்றி பணத்தைக் கொடுத்து பெற்றுக் கொள்ளும் குருமந்திரமும் பெயரளவிலேயே இருக்கும்.
- ஒருவரது ஆன்மீக முன்னேற்றத்திற்காக குரு அவருக்கு குருமந்திரம் கொடுத்தாலும் அந்த ஸாதகர் ஸத்சேவை, தியாகம், எதிர்பார்ப்பில்லாத அன்பு ஆகிய தன்மைகளை கொண்டிருந்தாலே அவரது குருமந்திர ஜபம் முழு பயனை அளிக்கும்.