ஆன்மீக சாஸ்திரத்தின் படி, ஒருவர் பிறந்த மதத்தின் படி இறைவனது நாமஜபம் செய்வதே இந்த தற்போதைய யுகமான கலியுகத்தில் பரிந்துரைக்கப்பட்ட ஆன்மீக பயிற்சியாகும். ஒருவரின் ஆன்மீக பயணம் முழுவதும் இது செய்யப்பட வேண்டிய ஒன்றாக பரிந்துரைக்கப்படுகின்றது. இறைவனது நாமஜபத்தை எங்கும், எந்த நேரத்திலும் செய்யலாம். மற்றும் இன்றைய உலகிற்கு இதுவே மிகவும் வசதியான ஆன்மீக பயிற்சியின் வடிவமாகும்.
இந்த ஆன்மீக பயிற்சியானது வசதியானதாக மட்டுமில்லாமல் முன்பு கூறிய 6 ஆன்மீகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுடன் ஒத்துப்போகின்றது.
ஆன்மீக கோட்பாடு | நாமஜபம் எவ்வாறு ஆன்மீகத்தின் அடிப்படை கோட்பாடுகளுடன் ஒத்துப்போகின்றது |
---|---|
எத்தனை மனிதர்கள் உள்ளனரோ, இறைவனை அடைய அத்தனை பாதைகள் உள்ளன | அனைவரும் இறைவனது ஒரே நாமத்தை ஜபிக்க வேண்டும் என்பதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் பிறந்த மதத்தின் படி இறைவனது நாமத்தை ஜபிக்கிறார்கள். ஹிந்துக்கள் அவர்களது குலதெய்வத்தின் நாமத்தை ஜபிக்கிறார்கள் |
பலவற்றிலிருந்து ஒன்றுக்கு செல்வது | பிரார்த்தனையிலிருக்கும் பல வார்த்தைகளிலிருந்து நாம் ஓரு வார்த்தைக்கு போகிறோம் – அதாவது இறைவனது நாமம். இந்த ஒரு வார்த்தையே இறைவனது சக்தி குவிக்கப்பட்ட வடிவமாக அமைகிறது. |
ஸ்தூல (உருவம்) நிலையிலிருந்து சூக்ஷ்ம (அருவம்) நிலைக்கு செல்வது | கட்டமைக்கபட்ட மத வழிபாடுகளான உருவ மற்றும் சடங்கு வழிபாடுகளிலிருந்து ஒருவர் அருவ வழிபாட்டிருக்கு செல்கிறார். அதாவது இறைவனது நாமஜபத்தை எங்கு வேண்டுமானானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் தடைகள் இன்றி செய்ய இயலும். |
ஆன்மீக நிலை அல்லது திறனுக்கு ஏற்றவாறு ஆன்மீக பயிற்சியை மேற்கொள்ளுதல் | நாமஜபமே ஒருவரது ஆன்மீக பயிற்சியின் அடிப்படை அடித்தளமாக அமைகிறது. ஒருவர் ஆன்மீக பயிற்சியின் உயர் படிகளை அடையும் போது, படிப்படியாக உயர் நிலை நாமஜபத்தை செய்ய முற்படுகிறார். அதாவது வாயசைவின்றியும், மனதளவிலும், பின் எப்போதும் நாமஜபம் செய்ய முனைகிறார். |
காலத்திற்கேற்ப ஆன்மிக பயிற்சி | ஆன்மீக சாஸ்திரத்தின்படி இறைவனது நாமஜபமே இந்த கலியுகத்தில் மனிதர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆன்மீக பயிற்சியாகும். இதையே மகான்களும், ஆன்மீக வழிகாட்டிகளும், குருமார்களும் வழிமொழிந்துள்ளார்கள். |
ஒருவரின் ஆற்றல் அல்லது திறமைக்கு ஏற்றவாறு கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் | நாம் இறைவனது நாமஜபத்தை செய்யும் போது அவரை தொடர்ந்து நினைவு கூர்கிறோம். இதனால் தேவையற்ற எண்ணங்களிலிலும், உலக எண்ணங்களிலிலும் மாட்டிக்கொள்ளாமல் மனதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது சாத்தியமாகின்றது. |