வசை சொற்களின் ஆன்மீக விளைவுகள் மற்றும் ஏன் சத்தமாக பேசுவதற்கு பதிலாக மெதுவாக பேசவேண்டும்
இந்த கட்டுரையை நன்கு புரிந்து கொள்ள, பின்வரும் கட்டுரைகளை நன்கு தெரிந்து கொள்ளுமாறு, நாங்கள் பரிந்துரைக்கிறோம்:
- சத்வ, ரஜ மற்றும் தம படைப்பின் மூன்று சூட்சும அடிப்படை கூறுகள்
- ஸாத்வீகமான வாழ்க்கைக்கான எண்ணக்கருவை பற்றிய அறிமுகம் (தினசரி வாழ்க்கையில் ஆன்மீகம்)
1. அறிமுகம்
மனிதர்களை வேறுபடுத்தும் ஒரு விஷயம் என்னவென்றால், நாங்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ள, பேசுகிறோம். நம்மில் பெரும்பாலோர் தவறாமல் தொடர்ந்தும் நாள் முழுவதும் பேசுகிறோம். காலப்போக்கில், மக்கள் உரையாடும் முறை மாறிவிட்டது. சிலர் விரோதமாகவும், மிகைப்படுத்தியும் பேசுகிறார்கள். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவும், தங்கள் எண்ணங்களை முன் நிறுத்தவும், இப்போதெல்லாம் பலர் சத்தமாக உரையாடுகிறார்கள். சமூக தொடர்புகளில் வசை சொற்களையும் பழி சொற்களையும் பயன்படுத்துவதும் வழக்கமாகிவிட்டது.
எங்களது ஆன்மீக ஆராய்ச்சியில் நாம் பேசும் விதமானது, தனக்கே உரிய ஆன்மீக அதிர்வுகளை கொண்டுள்ளது என்றும், இது நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கிறது என்பதையும் காட்டுகிறது. இக்கட்டுரையில் மெதுவாக அல்லது சத்தமாக பேசுவதால் ஏற்படும் ஆன்மீக விளைவுகளையும், முறையற்ற சொற்களை பயன்படுத்துவதன் விளைவுகளையும் ஆராய்வோம்.
2. பழி சொற்கள் அல்லது வசை சொற்கள் பயன்படுத்துதலால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆன்மீக ஆராய்ச்சி
பெரும்பாலான மொழிகளில் பொருத்தமற்றதாகக் கருதப்படும் சில சொற்கள் உள்ளன. இச்சொற்களை வசை சொற்கள் அல்லது தகுதியற்ற பேச்சு என்றும் கூறுவார்கள். பெரும்பாலும் மக்கள் இச்சொற்களை கோபம், எரிச்சல் அல்லது ஆச்சரியம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தவும், அவமதிப்பு, துன்புறுத்தல் அல்லது நகைச்சுவை போன்ற சமூக விளைவுகளை ஏற்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள். பதிவு செய்யப்பட்ட உரையாடல்களில், ஒவ்வொரு நாளும் பேசப்படும் சுமார் 80-90 சொற்களில் 0.5% முதல் 0.7% வரை வசைசொற்கள் என்றும், இதன் பயன்பாடு 0% முதல் 3.4% வரை வேறுபடுகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கிறது (தகவல்: ஜே டி. (2009): எங்கும் பயன்படுத்தப்படும் விலக்கப்பட்ட வார்த்தைகள்.
ஆன்மீக கண்ணோட்டத்தில், பிறர் கவனத்தை ஈர்ப்பதும் அல்லது எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்துவது போன்றவை, வசை சொற்களின் பயன்பாட்டிற்கு பின்னால் உள்ள பொதுவான நோக்கங்கள். இவை நம்மை கடவுளிடமிருந்து விலக்கி மாயை (மாயா) நோக்கி இழுக்கிறது. மேலும், எங்களது ஆன்மீக ஆராய்ச்சி மூலம் வசை சொற்கள், கஷ்டம் தரும் சக்தியை ஈர்க்கின்றன என்பதைக் காட்டுகின்றது. கடவுளின் நாமம் தெய்வீக அதிர்வலைகளை ஈர்ப்பது போல, தகாத சொற்கள் ஆன்மீக ரீதியாக எதிர்மறை அதிர்வலைகளை ஈர்க்கின்றன. எந்தவொரு அடிப்படை நோக்கமும் இல்லாமல் இச்சொற்களை பயன்படுத்தும்போதும் எதிர்மறையான ஆன்மீக விளைவுகளை கொடுக்கிறது.
வசை சொற்களால் ஏற்படும் சூட்சும விளைவுகளைப் பற்றி தனது அதிநுட்பமான ஆறாவது அறிவின் மூலம் திருமதி பூஜ்ய யோயா வாலே வரைந்த சூட்சும வரைபடத்தை கீழே பகிர்கிறோம். யோயாவின் சூட்சும அறிவை கொண்டு வரையப்பட்ட வரைபடங்கள் அனைத்தும் வெளியிடப்படுவதற்கு முன்பு பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களால் சரிபார்க்கப்படுகின்றன.
வசை சொற்களால் ஏற்படும் சூட்சும விளைவுகளை விளக்கும், திருமதி யோயா வாலே அவர்களால் சூட்சும ஞானத்தின் மூலம் வரையப்பட்ட இப்படத்தின் துல்லியமானது 80% ஆகும். இது சராசரி சூட்சும அல்லது ஞானதிருஷ்டி கொண்டு வரையும் கலைஞரின் திறனை விட மிக அதிகமாக உள்ளது.
சூட்சும ஞானத்தின் அடிப்படையில் வரையப்பட்ட படத்திற்கும் மற்றும் யோயாவின் அனுபவத்திற்கான விளக்கமும் பின்வருமாறு.
- வசை சொற்களின் பயன்பாட்டால் அஹம்பாவம் செயல்படுத்தப்படுதல்
- வசைசொற்களின் அதிர்வுகளும் ஈர்ப்பு சக்தியும் (ஆகர்ஷன்-சக்தி) சுற்றுச்சூழலிலிருந்து கஷ்டம் தரும் சக்தியை ஈர்க்கின்றன
- கஷ்டம் தரும் சக்தியின் வளையம் ஆழ் மனதில் (சித்தம்) செயல்படுத்தப்படுதல்
- அஹம்பாவம் மற்றும் குறைபாடுகளின் காரணத்தினால் இதய சக்கரத்திற்கும் (அநாஹத சக்கரம்), எண்ணங்களின் காரணத்தினால் புருவ மைய சக்கரத்திற்கும் (ஆக்ஞா சக்கரம்) கஷ்டம் தரும் சக்தியின் ஓட்டம்
- கஷ்டம் தரும் சக்தி அந்நபரிடமிருந்து சுற்றுச்சூழலுக்குள் பாய்ந்து ஆன்மீக ரீதியாக சுற்றுச்சூழலை மாசுபடுத்தல்.
ஆன்மீக நிலையில் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தால் மனோரீதியாக அல்லது உடல் ரீதியாகவும் நாம் பாதிப்பு அடையலாம். உதாரணத்திற்கு ஒருவர் அதிக எதிர்மறை எண்ணங்களை பெறலாம் அல்லது அவருக்கு குமட்டல் உண்டாகலாம்.
யோயா அவர்கள் கண்டறிந்த மற்றொரு விஷயம் என்னவென்றால், சுயநலம், மற்றவர்களை குற்றம் காணும் மனப்பான்மை, மரியாதை இல்லாமை, பகட்டு போன்ற குறைபாடுகள் காரணமாக வசை சொற்களை பயன்படுத்தும் போது கடவுளுடனான தொடர்பு ஏற்படவில்லை. இதனால் தகாத வார்த்தைகளை பேசுபவர் பாவங்களுக்கு ஆளாகிறார். மேலும், அவரின் அஹம்பாவமும் அதிகரிக்கிறது.
எனவே தகாத சொற்களை முற்றிலும் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
3. ஊடகங்கள் மற்றும் கலைப்படைப்புகளில் வசைமொழி பயன்பாட்டை தடை செய்தல் பற்றிய செய்தி
திரைப்படங்கள், இசை மற்றும் பொது நிகழ்ச்சிகளில் வசை சொற்களின் பயன்பாட்டை தடை செய்யும் சட்டம் ஒன்று ரஷ்யாவில் 2014 மே 5, திங்கள் அன்று கையெழுத்தானது. ஆபாச புகைப்படங்கள் மற்றும் வரிகளை வெளிப்படையாக கொண்ட புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகள் (சி.டி.) “ஆபாசமான மொழியைக் கொண்டுள்ளது” என்ற எச்சரிக்கையுடன் சீல் செய்யப்பட்ட தொகுப்புகளில் விற்கப்பட வேண்டும் என CNN செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. இச்சட்டமானது, நிறுவனங்களுக்கு அபராதமாக $1,400ம், மற்றும் தனிப்பட்ட குற்றவாளிகளுக்கு $70யும் விதிக்கும். மீண்டும் மீண்டும் இக்குற்றத்தை புரிபவர் கடுமையான அபராதம் மற்றும் 3 மாத வணிகத் தடையையும் எதிர்கொள்ளக்கூடும். ஆபாசம் எது என்பதை நிர்ணயிக்க நிபுணர்களின் குழு, நேர்த்தியான முறையில் சட்டத்தின் நுணுக்கமான குறிப்புகளை வரையறுத்து, கிரெம்ளினின் “மொழி கலாச்சாரத்தை பாதுகாத்தல் மற்றும் வளர்ப்பது” என்ற குறிக்கோளை சேதப்படுத்தும் சொற்கள் எவை என்பதை தீர்மானிக்கும். – Time.com மற்றும் CNN
4. சத்தமாக பேசுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆன்மீக ஆராய்ச்சி
மற்றவர்களின் கவனத்தை கவர முயற்சிப்பது அல்லது வாதிட முயற்சிப்பது போன்ற காரணங்களால், ஒருவர் சத்தமாக பேசலாம். மற்றவர்களின் கவனத்தை கவர முயற்சிப்பது அஹம்பாவத்தின் அறிகுறியாகும். மேலும், வாதிடுவது மனதில் எதிர்மறையான எதிரெண்ணங்களை தூண்டி விடுகிறது. அஹம்பாவம் மற்றும் எதிர்மறை எதிரெண்ணங்கள் ஆகிய இரண்டும் கடவுளிடமிருந்து நம்மை விலக்கி மாயை நோக்கி இழுக்கின்றன. அவை ஆன்மீக ரீதியாக எதிர்மறையான அதிர்வுகளையும் உருவாக்குகின்றன.
இவ்வாறு நாம் சத்தமாக பேசுவதால் எதிர்மறை சக்திகள் (ஆவிகள், பேய்கள், பிசாசுகள் போன்றவை) நம்மை பாதிப்பது. எளிதாகிறது. சத்தமாக பேசுவதை பழக்கமாக கொண்ட ஒருவர் ஆன்மீக கஷ்டங்களை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சத்தமாக பேசுவதன் சூட்சும விளைவுகளைப் பற்றி திருமதி யோயா வாலே அவர்கள் தனது சூட்சும ஞானத்தின் மூலம் கண்டறிந்ததை கீழே பகிர்ந்துள்ளோம்.
- உணர்வு வளையம் ஒன்று அநாஹத சக்கரத்தில் உருவாக்கப்படுகிறது. சத்தமாக பேசுவது அஹம்பாவத்தின் அறிகுறியாக இருப்பதால், அந்நபரைச் சுற்றி கருப்பு சக்தி உறை உருவாகுதல்
- அந்நபரின் வாயை சுற்றி கருப்பு சக்தியின் வளையம் உருவாகி, அநாஹத சக்கரத்திலிருந்து வாய்க்கு கருப்பு சக்தியின் ஓட்டம் ஏற்படுகிறது.
- கருப்பு சக்தி மற்றும் அதன் நுண்ணிய துகள்கள், அந்நபரின் வாயிலிருந்து சுற்றுசூழலிலும் உமிழப்படுகிறது. மற்றவர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்ப்பதின் காரணமாக அந்நபரிடமிருந்து அஹம்பாவ அலைகள் உமிழப்படுகின்றன.
சுருக்கமாக கூற வேண்டும் என்றால், சத்தமாக பேசுவதால் ஆன்மீக ரீதியாக தீங்கு விளைகிறது. எனவே சத்தமாக பேச வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. கேட்கும் திறன் குறைபாடு உள்ளவர்கள் இயல்பாகவே அதிக சத்தமாக பேசுவார்கள். அவர்களுடன் பேசுபவர்களும் கேட்கும் திறன் குறைபாடுள்ளவர்க்கு எளிதாக கேட்க வேண்டும் என மேலும் சத்தமாக பேசக்கூடும். இது போன்ற சந்தர்ப்பங்களில், ஆன்மீக ரீதியாக தீங்கான விளைவு எதுவும் இல்லை.
5. மெதுவாக பேசுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆன்மீக ஆராய்ச்சி
மெதுவாக பேசுவதனால் ஆன்மீகத்திற்கு உகந்த குணங்களாகிய கேட்கும் மனப்பான்மை, பணிவு மற்றும் உள்முக பார்வை போன்ற குணங்களை பெறுவதற்கு உறுதுணையாக உள்ளது. உள்முக பார்வை என்றால் உள்முக சிந்தனை, அதாவது கடவுளுடன் ஒன்றி இருப்பது என்ற நோக்கத்தை மனதில் கொண்டு நம்முடைய எல்லா செயல்களையும் செயல்படுத்துவது ஆகும். இந்த குணங்கள் நம்மை கடவுளின் அருகே ஈர்த்து ஆன்மீக பயிற்சி தடையின்றி நடக்க உதவுகிறது. எனவே, அவை நேர்மறையான ஆன்மீக அதிர்வுகளை உருவாக்குகின்றன.
மெதுவாக பேசுவது நமது இயல்பாக மாறும் போது ஆன்மீக பயிற்சியின் வளர்ச்சிக்கு, உதவுவதுடன் எதிர்மறை சக்திகளின் தாக்குதல்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது. மேலும் இவ்வாறு பேசுவது கேட்பவர்களுக்கும் இனிமையாக உள்ளது.
மெதுவாக பேசுவதால் ஏற்படும் சூட்சும விளைவுகளை குறித்து, திருமதி யோயா வாலே அவர்களின் சூட்சும ஞானத்தின் மூலம் வரைந்த படத்தை கீழே பகிர்கிறோம். சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வரைபடத்தின் துல்லியம் 80% ஆகும்.
சூட்சும ஞானத்தின் அடிப்படையில் வரையப்பட்ட படத்திற்கும் மற்றும் யோயாவின் அனுபவத்திற்கான விளக்கமும் பின்வருமாறு.
- மற்றவர்களைப் பற்றி சிந்திப்பதாலும் மற்றும் அவர்களை மதிப்பதாலும் மெதுவாக பேசுவதால் அஹம்பாவம் குறைவாக இருக்கும்.
- உணர்வுகளின் அதிர்வுகள் ஆக்ஞா சக்கரத்தின் மையத்தில் சிறிய அளவில் உருவாக்கப்படுகின்றன மற்றும் இயல்பாக பேசும் நபரிடமிருந்து சக்தியின் அதிர்வலைகளும் துகள்களும் வெளிப்படுத்தப்படுகின்றன.
- முதன்மையான சக்தி தெய்வீக சைதன்யம் ஆகும். தெய்வீக சைதன்யத்தின் அலைகள் வாயிலிருந்து சுற்றுச்சூழலுக்குள் வெளியேற்றப்படுகின்றன.
- அந்நபரைச் சுற்றி தெய்வீக சைதன்யத்தின் பாதுகாப்பு வளையம் உருவாகிறது. ஆக்ஞா சக்கரத்தின் மையத்தில் தெய்வீக சைதன்யம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
ஆகவே நாம் பெறும் ஆன்மீக பயன்கள் காரணமாக மெதுவாக பேசுவது பரிந்துரைக்கப்படுகிறது.
6. ஏன் மெதுவாக பேச வேண்டும் – ஆன்மீக பரிமாணத்தின் பரிசோதனை
மெதுவாக பேசுவதன் நன்மைகளை நேரடியாக நீங்கள் அனுபவிக்க ஒரு சூட்சும பரிசோதனை செய்ய உங்கள் அனைவரையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். தயவுகூர்ந்து சில நிமிடங்கள் கடவுளின் நாமஜபம் செய்துவிட்டு, பின்னர் சிறிது நேரம் மெதுவாக பேசுங்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை கவனியுங்கள், பின்னர் 1-2 நிமிடங்கள் கடவுளின் நாமஜபம் செய்யவும். பின்னர் சிறிது நேரம் சத்தமாக பேசிவிட்டு, நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை கவனியுங்கள். இந்த செயல்முறையை செய்வதன் மூலம், சத்தமாக பேசுவதற்குப் பதிலாக மெதுவாக பேசும்போது சூட்சும பரிமாணத்தில் என்ன நடக்கிறது என்பதை ஒருவர் அனுபவிக்க முடியும்.
7. வசை சொற்கள், சத்தமாக பேசுவது மற்றும் மெதுவாக பேசுவது ஆகியவற்றின் சூட்சும விளைவுகளின் ஒப்பீடு
வசைசொற்கள், சத்தமாக மற்றும் மெதுவாக பேசுவதால் ஏற்படும் விளைவுகளுக்கு இடையிலான ஒப்பீட்டு அட்டவணை கீழே உள்ளது.
வசை சொற்கள் அல்லது தகாத சொற்களின் பயன்பாடு | சத்தமாக பேசுவது | மெதுவாக பேசுவது | ||
---|---|---|---|---|
1. நல்ல சக்தி | 1அ. தெய்வீக சைதன்யம் (சைதன்யா) | – | – | 2.3 |
1ஆ. சக்தி (சக்தி) | – | 3 | 2 | |
2. தீய சக்திகள் | 2அ. அஹம்பாவம் | 3 | 3 | 2 |
2ஆ. உணர்வு | – | 2.5 | 1.2 | |
2இ. ஈர்ப்பு சக்தி | 2 | 1 | – | |
2ஈ. கஷ்டங்கள் | 4 | 2.8 | – | |
3. இயல்பு(விருத்தி) | வெளிமுக பார்வை | வெளிமுக பார்வை | உள்முக பார்வை | |
4. விளைவு | 4அ. தன் மீது | உணர்ச்சிவசப்படுல் மற்றும் அஹம்பாவம் இரண்டிலும் அதிகரிப்பு | மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தல் மற்றும் எதிர்பார்ப்புகள் இரண்டிலும் அதிகரிப்பு | உடல் (குறிப்பு 1) மற்றும் உளவியல் ரீதியாக அமைதியாக உணர்தல் |
4ஆ. மற்றவர்கள் மீது | மனம் காயமுற்றதால் ஸ்திரமற்ற நிலை | அமைதியின்மை மற்றும் மனதின் உறுதியற்ற தன்மை அதிகரித்தல் | எதிர்மறை விளைவுகள் இல்லை | |
4இ. சுற்றுசூழலில் | ரஜ-தம மற்றும் எதிர்மறை கூறுகளில் அதிகரிப்பு | – | – | |
5. இதனால் பாவம் உண்டாகுமா? | ஆம் | ஆம் | இல்லை |
குறிப்பு 1 – மெதுவாகவும் அமைதியாகவும் பேசுவதால், உடலின் ஒவ்வொரு செயலும், உதாரணத்திற்கு உடல் அசைவுகள், முகத்தின் வெளிப்பாடுகள் சாந்தமாக வெளிப்படல் (ஸ்திரத்தன்மை).
8. முடிவுரை:
ஒருவர் மென்மையாக பேசுவதாலும், தகாத சொற்களை தவிர்ப்பதாலும், அது நாமும், நம்மைச் சுற்றியுள்ளவர்களும் அதிக சாத்வீகமாக இருக்க உதவுகிறது.
நாமஜபம் போன்ற வழக்கமான ஆன்மீக பயிற்சியால், பாதுகாப்பான ஆன்மீக வளையம் நம்மை சுற்றி உருவாகி, மற்றவர்கள் சத்தமாக பேசுவதாலும் அல்லது தகாத சொற்களை பயன்படுத்துவதாலும் ஆன்மீக பரிமாணத்தில் உருவாகும் தீங்கு விளைவிக்கும் கூறுகளிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன.
வழக்கமான ஆன்மீக பயிற்சியை மேற்கொள்வதால் நமது ஆறாவது அறிவு மேம்பட்டு ஸாத்வீகம் மற்றும் தாமஸீகம் என்றால் என்ன என்பது பற்றிய உள்புரிதலை பெறுகிறோம். உள்ளார்ந்த முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்வதால் மென்மையாக பேசுவது போன்ற ஸாத்வீகமான தெரிவுகளை இது எளிதாக்குகிறது.