பிரார்த்தனையின் பலன்கள் – உயிரியல் பின்னுட்ட இயந்திரத்தைக் கொண்டு நடைபெற்ற ஆன்மீக ஆராய்ச்சி (டி.டி.எஃப்.ஏ.ஓ)
1. அறிமுகம்
அனைவருக்கும் வணக்கம்
25ஆண்டுகளுக்கும் மேலாக, நாங்கள் ஆன்மீக பரிமாணத்தை ஆராய்ச்சி செய்து வருகிறோம். மனம், புத்தி மற்றும் ஐம்புலன்களை பயன்படுத்தி செய்யப்படும் வழக்கமான ஆராய்ச்சியைப் போல் இல்லாமல், ஒருவரின் ஆறாவது அறிவை பயன்படுத்தி செய்யப்படுவதே ஆன்மீக ஆராய்ச்சி ஆகும். ஆன்மீக பயிற்சியால் அடைந்த அதிநுட்பமான ஆறாவது அறிவின் மூலம், ஸாதகர்கள் ஆன்மீக பரிமாணத்தைக் கண்டு அனுபவிப்பதுடன், சாதாரண மனிதரால் கூற முடியாத விஷயங்களைப் பற்றி விளக்கவும் முடியும்.
பல்வேறு தூண்டுதல்களால் ஒருவரது ஒளி மண்டலம் (aura), சக்தி அமைப்புகள் மற்றும் சக்கரங்களில் ஏற்படும் விளைவுகளை, சமீபத்தில் முன்னேற்றம் அடைந்த உயிரியல் பின்னுட்ட இயந்திரங்களின் மூலம் ஆய்வு செய்து வருகிறோம். நாம் ஏற்கனவே ஆன்மீக வழிமுறைகள் மூலம் செய்த ஆராய்ச்சியை ஸ்தூலமாக அங்கீகரிக்கவும், நிரூபிக்கவும் உதவுவதால் இது மிகவும் பயனளிக்கிறது.
அத்தகைய ஒரு இயந்திரம் டி.டி.எஃப்.ஏ.ஓ (DDFAO) ஆகும்.இது கணினி உதவியுடன் செய்யப்படும் மதிப்பாய்வு மற்றும் செயல்பாட்டு கண்டரிதலைக் (Computer-Aided Screening and Functional Diagnosis) குறிக்கும் ஒரு பிரஞ்சு சுருக்கப்பெயர் ஆகும்.
2. டி.டி.எஃப்.ஏ.ஓ எவ்வாறு செயல்படுகிறது?
டி.டி.எஃப்.ஏ.ஓ உடலின் மின் செயல்பாட்டை அளவிடுகிறது, நன்கு அறியப்பட்ட ஈ.ஈ.ஜீ (EEG) மற்றும் ஈ.சீ.ஜீ. (ECG) இயந்திரங்களுக்குப் பின்னால் இருக்கும் அதே கோட்பாடுகளை இது பயன்படுத்துகிறது. ஆனால் மூளை அல்லது இதய செயல்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், டி.டி.எஃப்.ஏ.ஓ முழு உடலுக்குமான உத்தியைப் பயன்படுத்தி, எலக்ட்ரோசோமாட்டோகிராம் (ElectroSomatoGram) அல்லது ஈ.எஸ்.ஜி.-யை (ESG) பதிவு செய்கிறது.
டி.டி.எஃப்.ஏ.ஓ கொண்டிருக்கும் உபகரணங்கள் அடிப்படையில்
- பிளாஸ்டிக் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள ஒரு அளவிடும் சாதனம்
- ஆறு மின்முனைகள் :
- நெற்றியில் வைப்பதற்கு சுயமாக ஓட்டக்கூடிய மின்முனைகள் இரண்டு
- உள்ளங்கைகளுக்கு இரண்டு தகடுகள்
- மற்றும் ஒருவரின் உள்ளங்காலகளுக்கான இரண்டு தகடுகள்
- மற்றும் மென்பொருளை இயக்குவதற்கு ஒரு கணினி
மின்முனைகள் நபரின் கைகள், கால்கள் மற்றும் நெற்றியில் ஒட்டப்படுகிறது. பின்னர், நபரின் உடல் வழியாக மிகக் குறைந்த மின்சாரம் அனுப்பப்பட்டு, உடலின் மின் செயல்பாடு அளவிடப்படுகிறது. பின்னர், பல்வேறு செயல்முறைகள் (algorithms) இயக்கப்பட்டு, அவற்றின் அளவீடுகள் இறுதியாக பட்டை வரைபடமாக கணினியில் காண்பிக்கப்படுகிறது. காண்பிக்கப்பட்டுள்ள வரைபட அம்சத்தில் ஒன்று நமது சக்கரங்களின் நிலையாகும். சிறிது நேரத்திற்கு பிறகு, சக்கரங்கள் என்றால் என்ன என்பதைப் பற்றி கூறுகிறேன்.
3. டி.டி.எஃப்.ஏ.ஓ-வை பயன்படுத்தி நடத்தப்பட்ட பரிசோதனைகள்
தற்போது நாம் டி.டி.எஃப்.ஏ.ஓ-வைப் பயன்படுத்தி நடத்தும் பரிசோதனைகளின் மூலம், நமது பல்வேறு தினசரி நடவடிக்கைகளின் ஆன்மீக தாக்கத்தை புரிந்துகொள்வதோடு, நமது ஆன்மீக பயிற்சி மற்றும் சக்கரங்களில் ஏற்படும் தாக்கத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.
ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறு மக்களைப் பார்க்கிறோம், நண்பர்கள் மற்றும் பிறருடன் தொடர்புகொள்கிறோம், ஆனால் இதனால் நம்மீது ஏற்படும் ஆன்மீக தாக்கத்தை நாம் புரிந்து கொள்வதில்லை. டி.டி.எஃப்.ஏ.ஓ-வின் உதவியுடன், இந்த தாக்கம் நாம் தொடர்பு கொள்ளும் நபரின் ஆன்மீக நிலையைப் பொறுத்தது என்று காட்ட முடிந்தது. சைவ மற்றும் அசைவ உணவின் தாக்கம், துணி வகைகள், நாம் கேட்கும் இசை மற்றும் நாம் குடிக்கும் மது மற்றும் பழச்சாறு ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு ஒப்பீட்டு பரிசோதனைகளையும் நாங்கள் நடத்தி உள்ளோம்.
சூட்சும கேந்திரங்களாகிய குண்டலினி சக்கரங்கள், மனிதனின் பல்வேறு சூட்சும தேஹங்களின் செயல்பாட்டிற்குத் தேவையான சூட்சும சக்தியை சமநிலையில் சிறப்பாக பராமரிக்கின்றன. இந்த சக்கரங்களின் செயல்பாடு, அந்த சக்கரம் தொடர்பான உடல் உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கிறது.
ஏழு முக்கிய சக்கரங்கள் உள்ளன, அவை முதுகெலும்பு நெடுவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
ஏழு முக்கிய சக்கரங்களுடன் தொடர்புடைய மற்றும் வேறுபட்ட குணங்களைக் கொண்ட சக்தி மையங்கள் பின்வருமாறு :
இதயப் பகுதியிலிருந்து தொடங்கி, மேலிருக்கும் நான்கு சக்கரங்கள்
- இதய சக்கரம் (அநாஹத சக்கரம்) : ஆழ்ந்த தாபத் தன்மையுடன் தொடர்புடையது
- தொண்டை சக்கரம் (விஷுத்தி சக்கரம்) : இது உலகிய மற்றும் ஆன்மீக உணர்வுடன் தொடர்புடையது
- புருவ மைய சக்கரம் (ஆக்ஞா சக்கரம்) : இது ஒருமுகத்தன்மையுடன் தொடர்புடையது
- கிரீட சக்கரம் (ஸஹஸ்ரார சக்கரம்) : இது இறை தத்துவ அனுபவத்துடன் தொடர்புடையது
கீழிருக்கும் மூன்று சக்கரங்கள், அதாவது தொப்புள் பகுதியிலிருந்து தொடங்கி முதுகெலும்பு நெடுவரிசையின் இறுதி வரையானது
- நாபி சக்கரம் (மணிப்பூரக சக்கரம்) : இது விருப்பு வெறுப்புகளுடன் தொடர்புடையது
- திருவெலும்பு சக்கரம் (ஸ்வாதிஷ்டான் சக்கரம்) : இது காம இச்சையுடன் தொடர்புடையது
- மூல சக்கரம் (மூலாதார சக்கரம்) : இது கழிவுப்பொருள் வெளியேற்றம் சார்ந்த செயல்பாடுகளுடன் தொடர்புடையது
மேலிருக்கும் நான்கு சக்கரங்கள் ஆன்மீக முன்னேற்றத்துடனும், கீழிருக்கும் மூன்று சக்கரங்கள் உலக விருப்பு வெறுப்புகளுடனும் தொடர்புடையவை.
4. டி.டி.எஃப்.ஏ.ஓ உயிரியல் பின்னுட்ட இயந்திரத்தைப் பயன்படுத்தி பிரார்த்தனைகளின் பலன்களின் ஆய்வுகள்
ஆன்மீக பயிற்சியின் வெவ்வேறு அம்சங்களாகிய நாமஜபம் செய்தல், ஸத்சங்கத்தில் இருத்தல் அல்லது மகான்களின் ஸத்சங்கத்தில் இருந்து அவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டல், ஸத்சேவை செய்தல், பிரார்த்தனை செய்தல் ஆகியவற்றின் பலன்களை டி.டி.எஃப்.ஏ.ஓ நுட்பத்தின் உதவியுடன் ஆய்வு செய்தோம், பல ஸாதகர்களின் குழுக்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
4.1 பிரார்த்தனைகளின் பரிசோதனையின் அமைப்பு
இந்த காணொளியில், டி.டி.எஃப்.ஏ.ஓ-வின் உதவியுடன் எலக்ட்ரோ-சோமாட்டோகிராஃபிக் ஸ்கேனிங் நுட்பத்தைப் பயன்படுத்தி, பிரார்த்தனைகளால் பல்வேறு சக்கரங்களில் ஏற்படும் பலனை நாங்கள் நிரூபிக்கப் போகிறோம். டி.டி.எஃப்.ஏ.ஓ-விலிருந்து பெறப்பட்ட இந்த அளவீடுகள், பட்டை வரைபடங்கள் மற்றும் எண் அளவுகளின் வடிவில் கிடைத்தது. இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, ஸாதகரின் உடலிலுள்ள சக்தி கேந்திரங்களாகிய ஏழு குண்டலினி சக்கரங்களை, அவற்றோடு தொடர்புடைய உயிர்புல சக்தியோடு (bio-field energy) நாங்கள் பொருத்தி, ஸாதகரின் ஏழு சக்கரங்களின் அளவீடுகளை பிரார்த்தனைக்கு முன்பும் பின்பும் பதிவு செய்தோம்.
4.2 பிரார்த்தனையின் பலனை பற்றிய பரிசோதனையும் ஒரு ஸாதகருடைய அனுபவமும்
பரிசோதனையில் பங்கு பெற்ற கோவாவில் உள்ள எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஆசிரமத்தில் இருக்கும் ஸாதகர் திருமதி ஷ்ராவணி பரப் பிரார்த்தனை செய்வதற்கு முன்பு தனது நிலையை விவரித்தார்.
கடந்த 10-12 நாட்களாக நான் கடுமையான கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்தேன். எனது பிராணசக்தி கணிசமாகக் குறைந்துவிட்டது. உடல் வலி, தலைவலி போன்ற உடல்ரீதியான கஷ்டங்கள் எனக்கு இருந்தன. இதை தவிர, எரிச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்கள் போன்ற மனோரீதியான கஷ்டங்களும் இருந்தன. இதனால் நான் மோசமான நிலையில் இருந்ததால், என்னால் ஸத்சேவையை செய்ய முடியவில்லை. இக்காலகட்டத்தில் என் மீது ஸ்கேனிங் செய்யப்பட்டது.
ஸ்கேனிங்கிற்குப் பிறகு, பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களிடம் நான் தீவிரமாக பிரார்த்தனை செய்தேன், “கடவுளே, நான் பிரார்த்தனை, நாமஜபம் அல்லது ஸத்சேவை செய்ய முடியாத நிலையில் உள்ளேன். தயவு கூர்ந்து நீங்களே என் மூலம் அனைத்தையும் செய்யுங்கள்.” பின்னர், நான் சிறிது நேரம் படுத்துக்கொண்டேன். யாரோ என் மூலம் பிரார்த்தனை மற்றும் நாமஜபம் செய்து வருவதை அனுபவித்தேன். அவர் வேறுயாரும் இல்லை, பராத்பர குரு டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களே. இது 3 மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு எனது நிலை மேம்பட்டது. உடல் வலி மற்றும் எரிச்சல் மறைந்து ,பிராணசக்தி 80-90% ஆக அதிகரித்தது. அதன் பிறகு, ஸ்கேனிங் (டி.டி.எஃப்.ஏ.ஓ-வில்) மீண்டும் செய்யப்பட்டது.
அளவியல் பகுப்பாய்வு (quantitative analysis) மற்றும் பட்டை வரைபடம் மூலம், பிரார்த்தனைக்கு முன்னும் பின்னும் ஸ்கேனிங் மூலம் பெறப்பட்ட ஏழு சக்கரங்களின் உயிர்-சக்தி புலங்களை, ஒப்பிடுவதற்காக கொடுத்துள்ளோம்.
பிரார்த்தனைக்கு முன்பு திருமதி ஷ்ராவணி பரப்பின் சக்கரங்களின் நிலை
பிரார்த்தனைக்கு முன் மதியம் 12.33 மணிக்கும் பிரார்த்தனைக்கு பின் மாலை 5.31 மணிக்கும் ஸ்கேனிங் செய்யப்பட்டது. இந்த அளவீடுகளின் பட்டை வரைபடங்கள் பின்வருமாறு :
Y- அச்சில் உள்ள விவரங்கள் எண் அளவுகளைக் குறிக்கின்றன. Y- அச்சில் 0-த்திற்கு கீழே உள்ள விவரங்கள் எதிர்மறையானவை (மைனஸ்) மற்றும் மேலே உள்ள விவரங்கள் நேர்மறையானவை (பிளஸ்). இடமிருந்து வலமாக உள்ள பட்டைகள் 1 முதல் 7 வரையிலான சக்கரங்களை குறிக்கின்றன. அவை இடதுபுறத்தில் மூல சக்கரத்திலிருந்து வலதுபுறம் கிரீட சக்கரம் வரை, 7 சக்கரங்களின் உயிர்சக்தி புலங்களின் நிலையை தொடர்ச்சியாக பிரதிபலிக்கின்றன. பட்டை வரைபடங்களில் கிடைக்கும் தகவல்கள் எண் வடிவிலும் கிடைக்கிறது.
குண்டலினி சக்கரங்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதன் முக்கியத்துவம் என்னவென்றால், இந்த ஏழு சக்கரங்களும் சக்தி கேந்திரங்கள் ஆகும். மேலும் இவை சூட்சும தேஹத்தின் சூட்சும சக்தி ஓட்டத்தை நேர்த்தியான முறையில் சரிசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சூட்சும கருப்பு சக்தி மற்றும் நேர்மறை சக்தி அல்லது தெய்வீக சைதன்யம் போன்றவை வெளியில் இருந்து ஊடுருவி இந்த சக்கரங்கள் மூலம் தேஹம் முழுவதும் பரவுகிறது.
இப்போது பிரார்த்தனை செய்தபின் திருமதி ஷ்ராவணியின் சக்கரங்களின் நிலை குறித்த பட்டை வரைபடத்தைப் பார்ப்போம்.
பிரார்த்தனைக்குப் பின் திருமதி ஷ்ராவணி பரப்பின் சக்கரங்களின் நிலை இப்போது இந்த இயந்திரத்திலிருந்து பெறப்பட்ட அளவீடுகள் மூலம் ஏழு சக்கரங்களின் நிலைமைகளை விளக்க முயற்சிக்கிறேன்.
- நீங்கள் பார்ப்பதுப்போல், மூலாதார சக்கரம் ஆரம்பத்தில் பிரார்த்தனைக்கு முன்பு -1 ஆகவும், பிரார்த்தனைக்குப் பிறகு அது -29 ஆகவும் இருந்தது.
- ஸ்வாதிஷ்டான் சக்கரம் ஆரம்பத்தில் பிரார்த்தனைக்கு முன்பு -2 ஆகவும், பிரார்த்தனைக்குப் பிறகு அது -23 ஆகவும் இருந்தது.
- மணிபூரக சக்கரம் ஆரம்பத்தில் +2 ஆகவும், பின்னர் -21 ஆகவும் இருந்தது.
- அநாஹத சக்கரம் அல்லது இதய சக்கரம் ஆரம்பத்தில் +1 ஆக இருந்தது, அதன் பிறகு +14 வரை சென்றது.
- விஷுத்தி சக்கரம் அல்லது தொண்டை சக்கரம் பிரார்த்தனைக்கு முன்பு -29 ஆகவும் பிரார்த்தனைக்குப் பிறகு -3 ஆகவும் இருந்தது.
- ஆக்ஞா சக்கரம் பிரார்த்தனைக்கு முன்பு -44 ஆகஇருந்தது மற்றும் பிரார்த்தனைக்குப் பிறகு -11 வரை சென்றது.
- ஸஹஸ்ரார சக்கரம் பிரார்த்தனைக்கு முன்பு -19 ஆக இருந்தது மற்றும் பிரார்த்தனைக்குப் பிறகு +6 ஆனது.
மேலே உள்ள அட்டவணை பிரார்த்தனைக்கு முன்னும் பின்னும் ஏழு சக்கரங்களின் வேறுபாட்டைக் காட்டுகிறது.
பிரார்த்தனைக்கு முன்பும் பின்பும் திருமதி பரப்பின் நிலையில் தெளிவான வேறுபாடு இருப்பதை நீங்கள் காணலாம்.
ஒரு நபரின் தீவிர பிரார்த்தனையின் விளைவை எடுத்துக்காட்டும் ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் நாங்கள் இங்கே முன்வைத்துள்ளோம்.
5. இந்த பரிசோதனையின் முக்கிய கண்டுபிடிப்புகள்
- உடலின் மேல் பகுதியில் உள்ள நான்கு சக்கரங்கள் , அதாவது ஸஹஸ்ரார, ஆக்ஞா, விஷுத்தி மற்றும் அநாஹத சக்கரங்கள் பிரார்த்தனை செய்தபின் மேலும் செயல்படுகின்றன என்பது தெளிவாகிறது. இந்த சக்கரங்கள் கற்றல் மற்றும் ஒருமுகத்தன்மையுடன் தொடர்புடையதால், இவற்றின் செயல்பாடு ஆன்மீக பயிற்சிக்கான திறனை மேம்படுத்துகிறது.
- மேலும் உடலின் கீழ் பகுதியில் உள்ள சக்கரங்கள், அதாவது மணிபூரக, ஸ்வாதிஷ்டான் மற்றும் மூலாதார சக்கரங்கள், பிரார்த்தனைக்கு பின் மேலும் செயலற்று போயின.
இங்கு கீழ் சக்கரங்கள் மேலும் செயலற்று போனது ஒரு நேர்மறையான அறிகுறியாகும். இந்த சக்கரங்கள் விருப்பு வெறுப்பு மற்றும் உலகியல் ஆசைகளுடன் தொடர்புடையவை. ஒரு நபர் ஆன்மீக பயிற்சியில் ஈடுபடும்போது, விருப்பு வெறுப்புகள் மற்றும் மனதின் சக்தியை மிகுந்த அளவில் வீணாக்கும் ஆசைகளும் குறைகின்றன.ஒருவர் அவரது ஆன்மீக பயிற்சியில் அதிக கவனம் செலுத்த முடிகிறது மற்றும் சக்கரங்களுடன் தொடர்புடைய உறுப்புகளை இயக்குவதற்கு தேவையானஅளவு சக்தி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பிரார்த்தனைக்கு முன்பும் பின்பும் திருமதி பரப்பின் நிலையில் தெளிவான வேறுபாடு இருப்பதை நீங்கள் காணலாம். மேலே உள்ள சக்கரங்கள் மேலும் செயல்பட்டன, அதே நேரத்தில் கீழ் உள்ள சக்கரங்கள் மேலும் செயலற்றோ அல்லது மந்தமாகவோ மாறிவிட்டன.
5.1 அளவீடுகளின் வேறுபாட்டின் பின்னால் உள்ள ஆன்மீக சாஸ்திரம்
இப்போது அளவீடுகளின் வேறுபாட்டின் பின்னணியில் உள்ள அறிவியலைப் பார்ப்போம். மேலே இருக்கும் நான்கு சக்கரங்களும் ஆன்மீக பயிற்சி மற்றும் ஸாத்வீக தன்மையுடன் தொடர்புடையவை, மறுபுறம் கீழே இருக்கும் மூன்று சக்கரங்களும் மாயையுடன் தொடர்புடையவை மற்றும் ரஜ-தம பிரதானமானவை. ஸத்வ, ரஜ மற்றும் தம பற்றி மேலும் புரிந்து கொள்ள, தயவுசெய்து எங்கள் கட்டுரையைப் பார்க்கவும்.
இது ஆர்வமிக்க பகுதியாகும்.90% விளைவு மனதிலும் 10% விளைவு உடலிலும் சக்கரங்களால் ஏற்படுகின்றன.இங்கே சுவாரசியமானது என்னெவென்றால், சக்கரங்களால் 90% விளைவு மனதிலும் மற்றும் வெறும் 10% விளைவு உடலிலும் ஏற்படுகின்றது. எனவே கீழ் சக்கரங்கள் செயலற்றோ அல்லது மந்தமாகவோ இருந்தாலும், அதன் தாக்கம் மனதளவில் இருப்பதால், ரஜ-தம எண்ணங்கள் மற்றும் ஆசைகள், விருப்பு வெறுப்புகள் ஆகியவை குறைந்து இறுதியாக உயர்ந்த ஆன்மீக நிலையில் நின்றுவிடுகின்றன. அதனால்தான் மேல் சக்கரங்களால் அதிக பணிகள் அல்லது அதிக ஆன்மீக பயிற்சியை சிறந்த முறையில் செய்ய முடிகிறது. ஆன்மீக பயிற்சியால் மேல் சக்கரங்கள் மேலும் செயல்படும்போது, ஸாத்வீக தன்மை மேலும் மேம்படுத்தப்படுகிறது. தீவிர பிரார்த்தனையால் ஒருவர் மீது ஏற்படும் பலனின் ஒரே ஒரு உதாரணத்தை இங்கு எடுத்துக்காட்டியுள்ளோம்.
6. சுருக்கமாக
இந்த பரிசோதனையின் முக்கிய கண்டுபிடிப்புகளைப் பார்ப்போம்
- உடலின் மேல் பகுதியில் உள்ள நான்கு சக்கரங்கள், அதாவது ஸஹஸ்ரார, ஆக்ஞா, விஷுத்தி மற்றும் அநாஹத சக்கரங்கள் பிரார்த்தனை செய்தபின் மேலும் செயல்படுகின்றன என்பது தெளிவாகிறது. இந்த சக்கரங்கள் கற்றல் மற்றும் ஒருமுகத்தன்மையுடன் தொடர்புடையதால், இவற்றின் செயல்பாடு ஆன்மீக பயிற்சிக்கான திறனை மேம்படுத்துகிறது.
- உடலின் கீழ் பகுதியில் உள்ள சக்கரங்கள், அதாவது மணிபூரக, ஸ்வாதிஷ்டான் மற்றும் மூலாதார சக்கரங்கள், பிரார்த்தனைக்கு பின் மேலும் செயலற்று போயின.
ஒருவர் அவரது ஆன்மீக பயிற்சியில் அதிக கவனம் செலுத்த முடிகிறது மற்றும் சக்கரங்களுடன் தொடர்புடைய உறுப்புகளை இயக்குவதற்கு தேவையான சக்தி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
நமது நிலையை மேம்படுத்தவும் வாழ்வின் உண்மையான நோக்கமான இறைவனோடு இரண்டற கலப்பதற்காக நமது ஆன்மீக பயிற்சியை மேம்படுத்தவும் எவ்வாறு நாம் பலவிதமான பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்று இந்த காணொளியிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டீர்கள் என்று நம்புகிறோம்.