யாகங்கள் (புனித நெருப்பு) செய்வதால் ஆன்மீக ரீதியாக சுற்றுச்சூழல் தூய்மையடைகிறதா? அப்படியெனில் எவ்வளவு தூரம்?சுருக்கம் : இந்தியாவில் கோவாவில் உள்ள மஹரிஷி அத்யாத்ம விஷ்வவித்யாலயாவின் (மஹரிஷி ஆன்மீக பல்கலைக்கழகம் என்றும் அழைக்கப்படுகிறது) ஆன்மீக ஆராய்ச்சிக்குழு சுற்றுச்சூழலில், யாகங்களின் சூட்சும விளைவை பகுப்பாய்வு செய்ய ஒரு ஆய்வு நடத்தியது. உடல் மற்றும் உளவியல் விளைவுகளுக்கு இந்த சூட்சும விளைவு உண்மையில் ஒரு ஊக்கியாக உள்ளது என்பதை எங்களின் ஆராய்ச்சி காட்டுகிறது. இந்த நேர்மறை சூட்சும விளைவால் சுற்றுச்சூழலில் ஒரு நேர்மறை மாற்றத்தினை அதாவது தீவிர வானிலை நிகழ்வுகளை குறைத்தல், மண், நீர் மற்றும் காற்று மட்டத்தில் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துதல் மற்றும் சமூக நல்வாழ்வு போன்றவற்றை கொண்டுவருகிறது. யாகங்கள் செய்வதற்கு முன்பும், பின்பும் ஒளிமண்டலத்தை ஆய்வு செய்ததில், ஒளி மண்டலத்தில் குறிப்பிடத்தக்க நேர்மறை மாற்றம் உண்டாவது கவனிக்கப்பட்டது. சராசரியாக மாதிரிகளை பரிசோத்ததில் நேர்மறை ஒளிமண்டலம் 301% அதிகரித்துள்ளது. யாகங்களின் தொலைவு (அ) தூரம், சுற்றுச்சூழலுக்கு எந்தவொரு தாக்கத்தையோ அல்லது விளைவையோ ஏற்படுத்துவதில்லை. யாகங்கள் முடிந்தவுடன் அந்த இடத்திலிருந்து 6500கிமீ வரையிலான தொலைவில் உள்ள இடங்களில் கூட யாகங்களால் ஏற்பட்ட நேர்மறை விளைவு கவனிக்கப்பட்டது.

அட்டவணை

1. சுற்றுச்சூழலில் யாகங்கள் செய்வதால் ஏற்படும் விளைவு குறித்த ஆய்வுக்கான முன்னுரை

Figure 1 : A yadnya (yajna)
படம் – 1 : யாகங்கள் (புனித நெருப்பு)

யாகம் (யக்ஞம்,யக்ஞியம் அல்லது யாகா என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக நடத்தப்படும் ஒரு புனிதமான நெருப்பு சடங்கு ஆகும்.சமஸ்கிருதத்தில் ஓதப்படும் மந்திரங்களுடன் யாகங்கள் நடத்தப்படுகின்றன. அவை சிறிய அல்லது விரிவான முறையிலோ நடத்தப்படலாம். நல்ல ஆரோக்கியத்தைப் பெறுதல், சுற்றுச்சூழலில் நல்லிணக்கம் மற்றும் சமநிலையைக் கொண்டுவருதல், தீயசக்திகளிலிருந்து பாதுகாத்தல் மற்றும் ஸாதகர்களின் ஆன்மீகப் பயிற்சியில் உள்ள தடைகளை நீக்க உதவுதல் போன்ற பல காரணங்களுக்காக யாகங்கள் (யாகம்) நடத்தப்படுகின்றன. யாகங்கள் என்பது மிகப் பெரிய அளவிலான ஆன்மீக நேர்மறை ஆற்றலை உருவாக்கும் ஆற்றல்மிக்க ஆன்மீகக் கருவிகளாகும், இவை இறுதியில் சமூகத்தின் நல்வாழ்வை அதிகரிக்கிறது

யாகங்களின் விளைவு குறித்து பல வெளிப்புற சுயாதீன ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அத்தகைய சில ஆய்வுகளை நாங்கள் கீழே பட்டியலிட்டுள்ளோம்:

எண் யாகங்கள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு
1. வாஜபேய சோம யாகம் பற்றிய ஆராய்ச்சி மற்றும் ஆய்வு வளிமண்டலத்தை சுத்தம் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
2. சோமயக் யாகங்கள் பற்றிய அறிவியல் ஆய்வு இந்த யாகம் செய்வதன் மூலம் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தலாம்
3. நுண்துகள்கள் மீது யாகத்தின் தாக்கம் யாகங்கள் என்பது உட்புற காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான ஒரு தீர்வாகும், குறிப்பாக நுண்துகள்கள் மற்றும் கார்பன்-டை -ஆக்சைட்
4. சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு மற்றும் மனித ஆரோக்கியத்தில் யாகத்தின் விளைவுகள்: ஒரு ஆய்வு வளிமண்டலம் குணமாக்கப்படுகிறது மற்றும் குணப்படுத்தப்பட்ட வளிமண்டலம் மூலம் நம்மை குணப்படுத்துகிறது.
5. யாகங்களில் ஒருங்கிணைந்த அறிவியல் யாகங்களின் பலன் குறித்த பல்வேறு ஆய்வுகளின் தொகுப்பு
6. அக்னிஹோத்ரா – காற்று மாசுபாட்டிற்கு ஒரு மரபுசாரா தீர்வு NO2, CO, SPM (தடைவிதிக்கப்பட்ட நுண்துகள்கள்) மற்றும் RSPM (சுவாசிப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட நுண் துகள்கள்) போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களைக் குறைக்கிறது.

அட்டவணை 1 : யாகங்களின் விளைவு பற்றிய பல்வேறு சுயாதீன ஆராய்ச்சி ஆய்வுகளின் பட்டியல்

யாகங்களினால் உடல் மற்றும் மனதளவில் ஏற்படும் விளைவுகள்/நன்மைகள் குறித்து நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் இங்கு சில மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, ஒரு யாகங்கள் மூலம் உருவாக்கப்படும் ஆன்மீக ஆற்றல் மற்றும் அதன் ஆன்மீக விளைவுகள் பற்றி கூறும் ஆய்வுகள் மிகக் குறைவு. உண்மையில், யாகங்களின் ஆன்மீக ஆற்றல்தான் சுற்றுச்சூழலில் (தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உட்பட) உடல்,உளவியல் மற்றும் ஆன்மீக ரீதியாக சமூகத்தில் பெரிய அளவிலான நேர்மறையான விளைவு ஏற்படுவதற்கு முதன்மை காரணம் என்று எங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது.

படம்- 2: பராத்பர குரு டாக்டர் ஆடவலே

எந்த ஒரு யாகங்களின் பலன்களும் பல்வேறு காரணிகளைச் சார்ந்தது, அவற்றில் ஒன்று தலைமை பொறுப்பை வகிக்கும் மஹான்களின் தீர்மானம் (சங்கல்பம்) ஆகும். தலைமை பொறுப்பை வகிக்கும் மஹான்களின் உயர்ஆன்மீக நிலைக்குகேற்ப, யாகங்களின் ஆன்மீக விளைவு அதிகமாகும். ஜனவரி 2022ல், இந்தியாவின் கோவாவில் உள்ள ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தில் ஆறு யாகங்கள் நடத்தப்பட்டன. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் தீர்மானத்தின்படி (சங்கல்பத்தின்படி) அவரின் ஆதரவுடன் மஹான்கள் மற்றும் ஆச்சாரியர்களால் யாகங்கள் நடத்தப்பட்டன. பராத்பர குரு என்பவர் 90% ஆன்மீக நிலைக்கு மேல் உள்ள ஒரு மஹான் ஆவார். பூமியில் இவ்வளவு உயர்ந்த நிலையில் உள்ள துறவியைக் காண்பது மிகவும் அரிதானது, இத்தகைய அரிதான உயர்ந்த நிலையில் உள்ள ஒரு மஹானின் கீழ் பல்வேறு நிலைகளில் உள்ள 6 யாகங்களின் ஆன்மீக விளைவை அறிய ஒரு இணையற்ற வாய்ப்பை ஆன்மீக ஆராய்ச்சிக் குழு பெற்றது.

ஆன்மீக அளவில் சுற்றுச்சூழலில் யாகங்களின் விளைவைக் குறித்த ஆய்வுகளில் கிடைத்த எங்களின் சில முக்கிய கண்டுபிடிப்புகளைப் இந்த கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறோம்.

நிகழ்த்தப்பட்ட ஆறு யாகங்கள் :

நாட்கள் நிகழ்த்தப்பட்ட யாகம்
14 ஜனவரி 2022 ராஜமாதங்கி யாகம்
15 ஜனவரி 2022 ப்ரத்யங்கிரா தேவி யாகம்
16 ஜனவரி 2022 பகளாமுகி யாகம்
21 ஜனவரி 2022 தன்வந்திரி யாகம்
22 ஜனவரி 2022 மஹாம்ருத்யுஞ்ஜய யாகம்
23 ஜனவரி 2022 கருட யாகம்.

 

அட்டவணை 2 : ஜனவரி 2022 இல் கோவாவில் உள்ள ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தில் நடைபெற்ற யாகங்கள்.

2. சுற்றுச்சூழலில் யாகங்களின் விளைவை அறிய ஆய்வு செய்யும் பரிசோதனைகளை வடிவமைத்தல்.

படம் 3: யுனிவர்சல் ஆரா ஸ்கேனர் (பிரபஞ்சத்தில் ஒளிமண்டலத்தை காட்டும் கருவி )

சுற்றுச்சூழலில் யாகங்களின் சூட்சும விளைவை அறிய ஆராய்ச்சிக் குழுவில் உள்ளவர்களின் ஆறாவது அறிவுடன் ஒளிமண்டலம் (aura) மற்றும் ஆற்றல் ஸ்கேனர் எனப்படும் யுனிவர்சல் ஆரா ஸ்கேனரை (யுஏஎஸ்) பயன்படுத்தினோம். இந்த கருவி டாக்டர். மன்னெம் மூர்த்தி (இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் அணு விஞ்ஞானி) என்பவரால் உருவாக்கப்பட்டது, யுஏஎஸ் (UAS) கருவியைக் கொண்டு எந்த ஒரு பொருளின் ஓளிமண்டலத்தின் நீளத்தை (அல்லது அளவை ) அறிவதுடன் அதன் எதிர்மறை மற்றும்/அல்லது நேர்மறைத் தன்மையையும் கண்டறிய முடியும்.

யுஏஎஸ் (UAS) கருவியைப் பயன்படுத்தி யாகங்களுக்கு முன்னும் பின்னும் உள்ள நிலையை அளவிட பல்வேறு இடங்களிலிருந்து பல்வேறு மாதிரிகள் எடுக்கப்பட்டன. யாகங்களினால் ஒளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் அதன் அளவு எந்த அளவிற்கு பாதிப்படைந்தன என்பதை அறிவதே இதன் நோக்கமாகும்.

1. கோவா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மண், நீர் மற்றும் காற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மாதிரிகள் சேகரிக்கப்பட்ட இடங்கள் பின்வருமாறு :

      • 6 யாகங்கள் நடைபெற்ற இடமான கோவாவில் உள்ள ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமம்
      • யாகங்கள் நடந்த இடத்திலிருந்து சுமார் 1.5கிமீ. முதல் 16கிமீ. தூரத்திற்குள் உள்ள 2 ஸாதகர்களின் வீடுகள் மற்றும் அவர்களின் அண்டை வீடுகள் (மொத்தம் 4 தனித்தனி வளாகங்கள்)
      • யாகங்கள் நடைபெறும் இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள் உள்ள 2 மதத் தலங்கள்.

2. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு நகரங்களில் அமைந்துள்ள 3 ஆன்மீக மையங்களின் புகைப்படங்களின் ஆய்வு. இந்த ஆன்மீக மையங்கள் பின்வரும் நகரங்களில் அமைந்ததுள்ளன.

ஆன்மீக மையம் உள்ள இடம் கோவாவில் யாகங்கள் நடந்த இடத்திலிருந்து தோராயமான தூரம் கிலோமீட்டர்களில் (கிமீ)
இந்தியாவில் மும்பைக்கு அருகில் 500 கிமீக்கு மேல்
வாரணாசி, இந்தியா 1700 கிமீக்கு மேல்
தாலே, ஜெர்மனி 6800 கிமீக்கு மேல்

அட்டவணை 3: இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள நகரங்களில் யாகங்களின் விளைவு குறித்த ஆய்வு செய்யப்பட்டன

யாகங்களுக்கு முன்னும் பின்னும் 3 ஆன்மீக மையங்களிலும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஒவ்வொரு புகைப்படத்தின் சூட்சும அதிர்வுகளை யுஏஎஸ் (UAS) உதவியுடன் அளவிடப்பட்டன. காணொளி ஆலோசனை (videoconference call) கூட்டம் (மாநாடு) இணைப்பைப் பயன்படுத்தி, இந்த இடங்களிலிருந்து மண், நீர் மற்றும் காற்று மாதிரிகளின் நேரடி படங்களை யுஏஎஸ் (UAS) ஐக் கொண்டு அளவிடப்பட்டன. இந்த மாதிரிகள் யாகங்களுக்கு முன்னும் பின்னும் சேகரிக்கப்பட்டன. ஜெர்மனியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்/நேரடிப் படங்கள் இந்தியாவில் யாகங்கள் நடைபெற்ற அதே நேரத்தில் எடுக்கப்பட்டவை.

3. ஆறாவது அறிவைப் பயன்படுத்துதல்

ஒரு யாகத்தின் சூட்சும விளைவை திறம்பட ஆய்வு செய்ய, மேம்பட்ட நிலையின் ஆறாவது அறிவு தேவைப்படுகிறது. சூட்சும அறிவின் அடிப்படையில் படங்களை வரையும் ஸாதகர்கள் உதவியுடன் ஆன்மீக ஆராய்ச்சி குழு யாகங்களின் விளைவை ஆய்வு செய்தது.

3. சுற்றுச்சூழலில் யாகங்கள் ஏற்படுத்தும் விளைவு பற்றிய முக்கிய கண்டுபிடிப்புகள்

யாகங்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக நாம் கவனித்த சில முக்கிய கண்டுபிடிப்புகளின் சுருக்கம் பின்வருமாறு :

  1. ஆன்மீகப் பயிற்சி செய்வது வீட்டிற்குள் நேர்மறைத் தன்மைக்கு வழிவகுக்கிறது மற்றும் யாகங்கள் மூலம் வெளிப்படும் நேர்மறை அதிர்வுகளை உள்வாங்கும் திறனையும் அதிகரிக்கிறது.
  2. யாகம் முடிந்த பிறகு சுற்றுச்சூழலில் நேர்மறை அதிகரிக்கிறது மற்றும் குறைவான எதிர்மறை தன்மைகளின் எஞ்சிய விளைவு இருப்பது கவனிக்கப்பட்டது.
  3. மூலக்கூறுகளான மண் (பூமி) மற்றும் நீர் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, யாகங்களால் காற்றானது மிகவும் சாதகமான முறையில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
  4. யாகங்கள் நடக்கும் இடத்தின் தூரமானது யாகத்தினால் பலனடையும் இடத்திற்கு ஒரு தடையாக இருப்பதில்லை.
  5. ஒரு யாகமானது வலுவான தீயசக்திகளின் தாக்குதல்களை கடந்துவரும் திறனைக் கொண்டுள்ளது.

3.1 ஆன்மீகப் பயிற்சி செய்வது வீட்டிற்குள் நேர்மறைத் தன்மைக்கு வழிவகுக்கிறது மற்றும் யாகங்கள் மூலம் வெளிப்படும் நேர்மறை அதிர்வுகளை உள்வாங்கும் திறனையும் அதிகரிக்கிறது

3.1.1 யாகங்கள் துவங்குவதற்கு முன்பே ஸாதகர்களின் வீடுகள் அதிகரித்த நேர்மறைத் தன்மையுடன் காணப்படுகின்றன

வீட்டில் ஆன்மீக அதிர்வுகளும் அவற்றின் விளைவுகளும்’, என்ற எங்கள் கட்டுரையில், எந்த ஒரு வளாகத்தில் உள்ள குடியிருப்பாளர்களும் அந்த வளாகத்திற்குள் காணப்படும் சூட்சும அதிர்வுகளின் வகைக்கு மிக முக்கியமான பங்களிப்பு காரணியாக உள்ளனர் என்பதை நாங்கள் விளக்கியுள்ளோம். அவர்களின் எண்ணங்கள், அணுகுமுறைகள், நோக்கங்கள் மற்றும் செயல்களைப் பொறுத்து அவர்கள் சூட்சும அளவில் வளாகத்தில் உள்ள நேர்மறை அல்லது எதிர்மறையை அதிகரிக்கலாம். இதே குடியிருப்பாளர்களின் முடிவுகளே அவர்களின் வளாகம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது மற்றும் அலங்கரிக்கப்படுகிறது என்பதை தீர்மானிக்கின்றன. இந்த இரண்டு காரணிகளும் (அதாவது, குடியிருப்பாளர்களின் இயல்பு மற்றும் அவர்களால் அந்த வளாகம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது) குறிப்பிட்ட வளாகத்தில் வெளிப்படும் ஆன்மீக அதிர்வுகளின் தன்மையை தீர்மானிப்பதில் ஒரு ஒருங்கிணைந்த பங்கை வகுக்கின்றன. உலகளாவிய தத்துவத்தின்படி ஆன்மீகத்தை தவறாமல் கடைப்பிடிப்பவர்கள் நேர்மறை அதிர்வுகளை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று எங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது, எனவே அவர்கள் வசிக்கும் வளாகத்தில் அவர்கள் சாதகமான விளைவையே ஏற்படுத்துகிறார்கள். மேலும் அவர்களுக்கு கடவுளிடமிருந்து தெய்வீக பாதுகாப்பு ஆற்றலை ஈர்க்கும் தன்மையும் அதிகம்.

ஒரு ஸாதகர் என்பவர் ஆன்மீகத்தில் முன்னேற தினசரி அடிப்படையில் உண்மையான மற்றும் நேர்மையான முயற்சிகளை மேற்கொள்பவர். ஆன்மீகப் பயிற்சி செய்யும் ஒரு ஸாதகரின் உள்ளுணர்வானது ஆன்மீகப் பயிற்சியின் 6 அடிப்படைக் கொள்கையுடன் ஒத்துப்போகும். ஆன்மீக வளர்ச்சியில் தீவிர ஆசை கொண்ட ஒரு ஸாதகர், தனது ஆன்மீக பயிற்சியை அளவிலும், தரத்திலும் தொடர்ந்து மேம்படுத்த முயற்சி செய்கிறார்.

உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழலில் எதிர்மறையான அதிர்வுகள் 2019 க்கு முன்பு இருந்ததை விட தற்போது மிக அதிக அளவில் இருப்பதை சமீப காலங்களில் கண்டறிந்துள்ளோம். இதன் விளைவாக, ஸாதகர்கள் மற்றும் பிற நபர்களின் குடியிருப்புகள் அவர்களுடன் தொடர்புடைய எதிர்மறை அதிர்வுகளின் அளவை அதிகரித்துள்ளன. ஏனென்றால், இரண்டு வகையான குடியிருப்புகளும் சுற்றுச்சூழலின் ஒட்டுமொத்த எதிர்மறையால் பாதிக்கப்பட்டுள்ளன. ஸாதகர்கள் வசிப்பிடங்களில் உள்ள எதிர்மறை அதிர்வுகளை மற்றவர்களின் குடியிருப்புகளுடன் (அல்லது அவர்களது அண்டை வீட்டாரின் குடியிருப்புகளுடன்) ஒப்பிடும்போது ஸாதகர்களின் குடியிருப்புகளில் காணப்படும் எதிர்மறை அதிர்வுகள் மிகக் குறைவாகவே இருக்கின்றது. அதே நேரத்தில், ஆன்மீகத்தை கடைபிடிக்காத அண்டை வீட்டாரின் வசிப்பிடங்களுக்கு மாறாக ஸாதகர்கள் குடியிருப்புகளில் நேர்மறை அதிர்வுகள் அதிகமாக காணப்படுகின்றன.

இந்த கருத்தை விளக்குவதற்காக, முதல் யாகம் தொடங்குவதற்கு முன் ஒரு ஸாதகரின் வீடு மற்றும் அவரது அண்டை வீட்டார் வசிப்பிடங்களிருந்து எடுக்கப்பட்ட ஒளி மண்டல அளவீடுகளின் உதாரணத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். யுனிவர்சல் ஆரா ஸ்கேனரை (யுஏஎஸ்) பயன்படுத்தி இந்த ஒளிமண்டல அளவீடுகள் எடுக்கப்பட்டுள்ளன.

எதிர்மறை அதிர்வுகளின் ஒப்பீடு அட்டவணை 4 : ஒரு ஸாதகரின் வசிப்பிடம் மற்றும் அவரது அண்டை வீட்டாரின் குடியிருப்பில் காணப்படும் எதிர்மறை அதிர்வுகளின் ஒப்பீடு

இரண்டு வீடுகளின் அளவீடுகளை மேலே கொடுக்கப்பட்ட அட்டவணையில் உங்களால் காண முடியும், ஸாதகர்களின் வசிப்பிடங்களில் பெறப்பட்ட மண் மற்றும் நீர் மாதிரிகளில் உள்ள எதிர்மறைத்தன்மை, ஆன்மீகப்பயிற்சியை கடைப்பிடிக்காத அவரது அண்டை வீட்டாரின் குடியிருப்புகளை விட தோராயமாக 40% குறைவாகவே உள்ளது. காற்றின் மாதிரிகளைப் பொறுத்தவரை, ஸாதகர்கள் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரி அவரது அண்டை வீட்டாரின் குடியிருப்புகளை விட 25% குறைவான எதிர்மறைத்தன்மை கொண்டுள்ளது. காற்று மாதிரி அளவீடுகளில் குறைவான வித்தியாசத்திற்கான காரணம், காற்றானது வளாகங்களுக்கு இடையே அதிக சுதந்திரமாக நகரும் தன்மையுடையதாகும்.

ஸாதகரின் குடியிருப்பு மற்றும் அண்டை வீட்டாரின் குடியிருப்புஅட்டவணை 5 : ஒரு ஸாதகரின் இருப்பிடம் மற்றும் அவரது அண்டை வீட்டாரின் குடியிருப்பில் காணப்படும் நேர்மறை அதிர்வுகளின் ஒப்பீடு

அண்டை வீட்டாரின் குடியிருப்புகளில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் எதிலும் நேர்மறைத் தன்மை கண்டறியப்படவில்லை என்பதை மேலே உள்ள அளவீடுகளிலிருந்து நீங்கள் பார்க்க முடியும். ஒப்பிட்டுப்பார்க்கையில், ஸாதகர்களின் வீட்டிலிருந்து வரும் அனைத்து மாதிரிகளும் ஆரம்பத்தில் நேர்மறையான ஒளிமண்டலத்தை கொண்டுள்ளன. ஸாதகர்களின் வீடுகள் மற்றும் அவர்களது அண்டைவீட்டாரின் வீடுகளுக்கும் இடையே உள்ள மண், நீர் மற்றும் காற்று மாதிரிகளை ஒப்பிடும்போது அளவீடுகளில் இத்தகைய வேறுபாடுகள் தொடர்ந்து காணப்படுகின்றன, அண்டை வீடுகளில் உள்ளவர்கள் பொதுவாக எந்த ஒரு ஆன்மீக பயிற்சியும் செய்வதில்லை

3.1.2 உள்நாட்டில் சேகரிக்கப்பட்ட அனைத்து மண், நீர் மற்றும் காற்று மாதிரிகளில் யாகங்கள்(யக்ஞங்கள்) சாதகமான விளைவை ஏற்படுத்துகிறது

6 யக்ஞங்களின் (யாகங்கள்) போது நடத்தப்பட்ட சோதனைகளில் ஒரு முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், இந்த புனித சடங்கு, நடத்தப்பட்ட இடத்திலிருந்து பல மைல்களுக்கு அப்பால் உள்ள பகுதிகளில் உள்ள மண், நீர் மற்றும் காற்று ஆகியவற்றில் நேர்மறை அதிர்வுகள் அதிகரித்து உள்ளதை அதன் மாதிரிகளில் காண முடிந்தது. அந்த உள்ளூர் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட மண், நீர் மற்றும் காற்று மாதிரிகளில் உள்ள நேர்மறை ஒளிமண்டலமானது யாகங்களுக்கு பின் சராசரியாக, 302% அதிகரித்துள்ளது.

இருப்பினும், இந்த நிகழ்வில் கவனிக்கப்பட்ட விஷயம் என்னவென்றால், ஸாதகர்களின் வீடு(யாகங்கள் நடந்த இடத்திலிருந்து சுமார் 16 கிமீ தொலைவில்) அவர்களது அண்டை வீட்டாரோடு (அவர்களுடைய வீட்டிற்கு அருகில்) ஒப்பிடும்போது அதிக அளவில் நேர்மறை தன்மையை உள்வாங்கியுள்ளது என்பதாகும். (கவனிக்கவும்: அண்டை வீட்டார் ஆன்மீகத்தை கடைப்பிடிக்கவில்லை.)

கீழே காண்பிக்கப்பட்டுள்ள வரைப்படத்தில், மண் மாதிரிகளில் உள்ள நேர்மறை தன்மையானது ஒவ்வொரு யாகங்களுக்கு முன்னும் பின்னும் எவ்வாறு படிப்படியாக அதிகரித்தது என்பதை காணலாம்.இந்த யாகங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றன. ஒவ்வொரு தொடர்ச்சியான யாகங்களின் மூலம், ஸாதகர்களின் வீட்டில் நேர்மறை தன்மை அதிகரிப்பின் போக்கு (கீழே உள்ள வரைபடத்தில் சிவப்பு கோடு) அண்டை வீட்டோடு ஒப்பிடும்போது (கீழே உள்ள வரைபடத்தில் உள்ள சாம்பல் கோடு) மிகவும் செங்குத்தாக இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். ஸாதகர்கள் வீடு யாகங்களிலிருந்து அதிக அளவில் நேர்மறை தன்மையை உள்வாங்க முடிந்தது என்பதை இது குறிக்கிறது.

மூன்று தொடர்ச்சியான நாட்களில் நடத்தப்பட்ட யாகங்களால் மண் மாதிரிகள் எவ்வாறு சாதகமாக பாதிப்பை அடைந்தன என்பதற்கான ஒப்பீடுவரைப்படம் 1 : மூன்று தொடர்ச்சியான நாட்களில் நடத்தப்பட்ட யாகங்களால் மண் மாதிரிகள் எவ்வாறு சாதகமாக பாதிப்பை அடைந்தன என்பதற்கான ஒப்பீடு

3.2 அதிகரித்த நேர்மறை மற்றும் குறைக்கப்பட்ட எதிர்மறையின் எஞ்சிய விளைவு

வரைப்படம் 1ல் இருந்து, ஒவ்வொரு நாளும் செய்யப்படும் யாகத்தின் எஞ்சிய நேர்மறையான விளைவை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். உதாரணத்திற்கு, ஸாதகரின் வீட்டின் மண் மாதிரியானது முதல் யாகத்திற்கு முன்பு 1.35 மீட்டர்வரை நேர்மறை ஒளிமண்டலத்தையும், யாகத்திற்கு பிறகு 3.78 மீட்டர் அளவு வரை நேர்மறை ஒளிமண்டலத்தை வெளிப்படுத்தியுள்ளது. அடுத்த நாள், 2வது யாகத்திற்கு முன், ஸாதகரின் வீட்டு வளாகத்தில் இருந்து மண் மாதிரியின் நேர்மறை ஒளிமண்டல அளவை சரிபார்க்க மற்றொரு அளவீடு எடுத்தபோது, அது 3.20 மீட்டர் வரை இருந்தது. இது முந்தைய நாள் பதிவு செய்யப்பட்ட 1.35-மீட்டர் நேர்மறை ஒளிமண்டல அளவை விட கணிசமாக அதிகமாகும், மேலும் முந்தைய நாள் மாலை நடைபெற்ற யாகம் மூலம் மண் நேர்மறைத் தன்மையை தக்கவைத்துக் கொண்டுள்ளது என்பதை இது காட்டுகிறது.

3.3 யாகங்களால் ஏற்படும் விளைவு மண் மற்றும் நீரைக் காட்டிலும் காற்றில் அதிகம் காணப்படுகிறது

மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பு, மண் மற்றும் நீர் மாதிரிகளுடன் ஒப்பிடும்போது காற்று மாதிரிகள் யாகங்களின் நேர்மறையை உள்வாங்குவதற்கு அதிக நாட்டம் காட்டுகின்றன. ஸாதகர்களின் வீட்டில் எடுக்கப்பட்ட காற்று மாதிரியில் கண்டறியப்பட்ட நேர்மறை ஒளிமண்டலமானது 3 யாகங்களுக்கு பிறகு 0.54 மீட்டரிலிருந்து 15.06 மீட்டராக (2688%) அதிகரித்து உள்ளதை கீழே உள்ள வரைபடத்தில் இருந்து நீங்கள் காண முடியும். 3 யாகங்களுக்கு பிறகு, ஸாதகரின் வீட்டில் எடுக்கப்பட்ட காற்று மாதிரியுடன் ஒப்பிடுகையில் மண் மாதிரியின் நேர்மறை ஒளிமண்டல அளவு 1.35 மீட்டரிலிருந்து 8.58 மீட்டராக (535%) குறைந்த அளவு அதிகரித்துள்ளதை – கீழே உள்ள வரைபடத்தில் காணலாம்.

மண்,நீர் மற்றும் காற்று மாதிரிகளில் யாகங்களின் ஒரு ஒப்பீட்டு விளைவுவரைப்படம் 2 : யாகங்களுக்கு முன்னும் பின்னும் மண், நீர் மற்றும் காற்று மாதிரிகளில் காணப்படும் நேர்மறைத்தன்மையின் அதிகரிப்புக்கு இடையிலான ஒப்பீடு

சில இடங்களில்,யாகத்தின் புகை சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்ற தவறான கருத்து உள்ளது. இருப்பினும், இது உண்மைக்கு புறம்பாகவே உள்ளது. ஏனென்றால் முதலில்,புனித நெருப்பால் வெளிப்படும் புகை ஆன்மீக நிவாரணமளிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இரண்டாவதாக,யாககுண்டத்திலிருந்து (புனித நெருப்புக் குழி) வெளிப்படும் ஆன்மீக ஆற்றல், உடல், உளவியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்துகிறது. பல அறிவியல் ஆய்வுகள் யாகம் செய்த பிறகு சுற்றுச்சூழலில் தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் மாசுக்கள் எவ்வாறு குறைகின்றன என்பதைக் காட்டுகின்றன. அட்டவணை -1 ஐப் பார்க்கவும்.

3.4 யாகத்தினால் பலனைப் பெறும் இடங்களுக்கு தூரம் ஒரு தடையாக இருப்பதில்லை

முந்தைய பதிவுகளில், யாகம் நடைபெற்ற நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் (அதாவது 16 கிலோமீட்டர் தூரம் வரை) எவ்வாறு யாகத்தினால் சாதகமாக விளைவுகள் உண்டாயிற்று என்பதைப் பற்றிய எங்கள் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொண்டோம். அளவிடப்பட்ட மண், நீர் மற்றும் காற்று மாதிரிகளில் நேர்மறையின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மற்றும் எதிர்மறையின் குறைந்தளவை காட்டியது.

ஆனால் மற்ற நகரங்கள் அல்லது பிற நாடுகளின் நிலை என்ன? ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் யாகம் பிற நகரங்கள் மற்றும் நாடுகளின் சுற்றுச்சூழலில் சாதகமாக விளைவை ஏற்படுத்துமா?

இந்த நிகழ்வை ஆய்வு செய்ய, கோவாவில் (இந்தியா) உள்ள ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் கோவா ஆசிரமத்தில் நடத்தப்பட்ட ஒரு யாகத்தினால் பல நூறு மற்றும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள 3 வெவ்வேறு நகரங்களில் உள்ள ஆன்மீக மையங்களில் ஏற்பட்ட விளைவை, ஆய்வு செய்ய மற்றொரு பரிசோதனையை நடத்தினோம். நகரங்களில் ஒன்று வேற்று நாடான ஜெர்மனியில் இருந்தது.

எந்த ஒரு பொருளின்(உயிருள்ள அல்லது உயிரற்ற) சூட்சும அதிர்வுகளை புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன என்பது எங்கள் அனுபவத்தால் உணரமுடிந்தது. இது ஆன்மீகக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது :

“சொல் (ஏதாவது ஒரு பெயர்), தொடுதல், வடிவம், சுவை, வாசனை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆற்றல் ஆகியவை அனைத்தும் இணைந்து செயல்படுகின்றன.”

அதாவது, எந்த ஒரு பொருளுடன் தொடர்புடைய ஆன்மீக அதிர்வுகளில் மாற்றம் ஏற்பட்டால், அந்த வேறுபாடுகளை புகைப்படங்கள் நமக்கு எடுத்து காட்டுகின்றன. ஏனென்றால், புகைப்படங்கள் என்பது எந்தவொரு நபர், இடம் அல்லது பொருளின் வடிவத்தின் சரியான பிரதி (நொடி நிழற்படம்) ஆகும். எனவே புகைப்படத்தை யு.ஏ.ஏஸ் கருவியைக் கொண்டு அளவிடுவதன் மூலம் (ஆன்மீக மையத்தின் இந்த விஷயத்தில்), அந்த புகைப்படத்தில் உள்ள இடத்தின் ஒளிமண்டல அளவை (அந்த இடத்துடன் தொடர்புடைய சூட்சும ஆற்றல்) பற்றியும் நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்தக் கோட்பாட்டின் படி, மும்பை (இந்தியா), வாரணாசி (இந்தியா) மற்றும் ஜெர்மனி ஆகிய இடங்களில் உள்ள ஆன்மீக மையங்களின் புகைப்படங்களை யாகத்திற்கு முன்னும் பின்னும் எடுக்குமாறு அங்குள்ளவர்களிடம் கேட்டுக் கொண்டோம். புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடத்தின் நேரமும், இந்திய நேரப்படி யாகம் நடத்தப்பட்ட நேரமும் பொருந்தியது. யுஎஏஸ் கருவியைப் பயன்படுத்தி இந்தப் புகைப்படங்களுடன் தொடர்புடைய சூட்சும அதிர்வுகளில் மாற்றம் உள்ளதா என்பதைப் பார்க்க விரும்பினோம்

கீழேயுள்ள வரைப்படத்தில், இந்த ஆன்மீக மையங்களின் புகைப்படங்கள் ராஜமாதங்கி யாகத்தின்போது எவ்வாறு பாதிக்கப்பட்டன என்பதற்கு ஒரு உதாரணத்தை காட்டியுள்ளோம். இதுவே நடத்தப்பட்ட முதல் யாகம் ஆகும்.

ஒரு யாகம் நடத்தப்பட்ட தொலைவை (அ) தூரத்தை பொறுத்து அதன் விளைவுஅட்டவணை 6 : ஆன்மீக மையங்களின் புகைப்படங்களை யுஎஎஸ் கருவியை கொண்டு யாகங்களின் சூட்சும விளைவின் தூரத்தை பற்றிய ஆய்வு

மேலே கொடுப்பட்டுள்ள அட்டவணை 6ல் இருந்து , ராஜமாதங்கி யாகத்திற்கு முன்பும் பின்பும் ஆன்மீக மையங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் ஆன்மீக அதிர்வுகளில் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை நீங்கள் என்பதை காண முடியும். யாகம் நடைபெற்ற உண்மையான இடத்திலிருந்து இந்த ஆன்மீக மையங்களின் தூரம் அட்டவணையில் 2வது வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்மீக மையங்களின் அனைத்து புகைப்படங்களும் நேர்மறைத் தன்மை அதிகரித்து,எதிர்மறைத் தன்மை குறைந்துள்ளதை அட்டவணை காட்டுகிறது. ஒவ்வொரு தொடர்ச்சியான யாகத்தின் பின்பு புகைப்படங்களின் நேர்மறை ஒளிமண்டல அளவு அதிகரித்துக் கொண்டே இருந்தது மற்றும் எதிர்மறை ஒளிமண்டல அளவு குறைந்து கொண்டே சென்றது

இது போன்றே மண், நீர் மற்றும் காற்று மாதிரிகளிலும் நேர்மறை தன்மையின் அதிகரிப்பை காணமுடிகிறது. கீழே உள்ள அட்டவணையில், கருட யாகத்திற்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட காற்று மாதிரிகளின் யுஎஎஸ் அளவீடுகளின் ஒரு உதாரணத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். இது ஜனவரி 2022 இல் ஆன்மீக ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற 6வது மற்றும் கடைசி யாகம் ஆகும்

பல்வேறு தொலைவில் உள்ள காற்று மாதிரிகளில் ஒரு யாகத்தின் சூட்சும விளைவுஅட்டவணை 7 : கருட யாகத்திற்கு பிறகு காற்று மாதிரிகளின் அதிகரித்த நேர்மறைத் தன்மை மற்றும் குறைந்த எதிர்மறைத் தன்மை

அனைத்து காற்று மாதிரிகளின் ஒளிமண்டல அளவில் உள்ள எதிர்மறையானது நீக்கப்பட்டதை, மேலே உள்ள அட்டவணையில் இருந்து நீங்கள் பார்க்க முடியும். அனைத்து காற்று மாதிரிகளிலும் நேர்மறை தன்மை அதிகரித்தது. மிகத் தொலைவில் உள்ள ஆன்மீக மையத்தின் (ஜெர்மனி) காற்று மாதிரிகளில் மிக உயர்வான நேர்மறைத்தன்மை பதிவு செய்யப்பட்டுள்ளது, அதாவது 1330% . தூரம் அதிகரித்தாலும் ஆன்மீக ஆற்றல் விரயம் ஆகாது என்பதை இது காட்டுகிறது. யாகத்துடன் ஒன்றிணைந்த தீர்மானத்தின் (சங்கல்ப) ஆற்றலானதை யாகம் நடைபெறும் தொலைவினால் பாதிக்க இயலாது. யாகத்தின் ஆன்மீக ஆற்றல், உலகில் ஆன்மீக நேர்மறைதன்மையை அதிகரிக்கக்கூடிய ஒரு சக்திவாய்ந்த கருவி என்பதையும் இது காட்டுகிறது

3.5 சூட்சும தீயசக்திகளின் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு.

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளடங்கிய சமூகம் மற்றும் சுற்றுச்சூழலில் மகத்தான நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த ஆன்மீகக் கருவியாக யாகங்கள் உள்ளன. அவற்றின் ஆற்றல் பல காரணிகளைச் சார்ந்துள்ளது, அவற்றில் ஒன்று தலைமை தாங்கும் மகானின் தீர்மானம், அவருடைய தீர்மானம் அந்த யாகத்திற்கு அடிக்கோலுகிறது. யக்ஞங்கள் (யாகங்கள்) ஆன்மீக ரீதியில் சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தி, தீயசக்திகளுக்கு எதிராகப் போராடும்போது, தீயசக்திகள் பதிலுக்குப் போராட முயற்சிப்பதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். உதாரணமாக, இந்தியாவின் கோவாவில் உள்ள ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தில் யாகங்கள் நடத்தப்படுவதற்கு முன்னும் பின்னும் சேகரிக்கப்பட்ட காற்றின் மாதிரிகள் மீது யாகங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை கீழே உள்ள அட்டவணை காட்டுகிறது.

சூட்சும தீயசக்திகளின் தாக்குதல்களுக்கு எதிராக யாகங்கள் எவ்வாறு பாதுகாக்கிறதுஅட்டவணை 8 : சூட்சும தீயசக்திகளின் தாக்குதல்களுக்கு எதிராக யாகங்கள் எவ்வாறு பாதுகாக்கின்றன.

அடிக்குறிப்புகள் :

  1. முதல் மூன்று யாகங்களில் ஒவ்வொரு யாகத்திற்கும் முன்னும் பின்னும் உள்ள காற்று மாதிரிகள் எதிலும் எதிர்மறை ஒளிமண்டல அளவு எதுவும் கண்டறியப்படவில்லை என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
  2. அத்துடன், முதல் மூன்று யாகங்களில், காற்று மாதிரிகளின் நேர்மறை ஒளிமண்டல அளவு 95% முதல் 147% மற்றும் 208% வரை அதிகரித்துக்கொண்டே இருந்தது.
  3. 4, 5 மற்றும் 6 ஆம் யாகங்களுக்கு முன்பு, கோவாவில் உள்ள ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தில் உள்ள காற்று மாதிரிகளில் எதிர்மறையான ஒளிமண்டல அளவு கண்டறியப்பட்டது. ஆன்மீக ஆராய்ச்சி மையத்தில் இந்த திடீர் எதிர்மறைத் தன்மை அதிகரிப்பு வழக்கத்திற்கு மாறானது.
  4. எதிர்மறை ஒளிமண்டலத்துடன் ஒப்பிடும் (யாகத்திற்கு முந்தைய நாளுடன்) போது மாதிரிகளின் நேர்மறை ஒளிமண்டல அளவானது முதல் மூன்று யாகங்களை விட அடுத்த 4,5 மற்றும் 6 வது யாகங்களில் மிகவும் குறைந்தே காணப்படுகிறது.எடுத்துக்காட்டாக, முதல் யாகங்களில் நேர்மறை ஒளிமண்டல அளவு 7.24 மீட்டரிலிருந்து 14.10 மீட்டர் வரை அதிகரித்தது.அடுத்த நாளில், நேர்மறை ஒளிமண்டல அளவு 10.65 மீட்டராகக் குறைந்தது. 5 வது யாகத்துடன் ஒப்பிடுகையில், நேர்மறை ஒளிமண்டல அளவானது 11.62 மீட்டரிலிருந்து 37.5 மீட்டராக உயர்ந்தது. அடுத்த நாள் அது 5.93 மீட்டராகக் கணிசமாகக் குறைந்தது.
  5. ஆறாவது அறிவின் மூலம், இவை தீயசக்திகளின் தாக்குதலால் ஏற்பட்டவை என்பதைக் கண்டறிந்தோம். தீயசக்திகள் ஒவ்வொரு யாகங்களை சுற்றியுள்ள பகுதியில் கருப்புசக்தியை அதிகரிப்பதன் மூலம் யாகங்களின் செயல்திறனைக் குறைக்க முயன்றன. மேலும் கவனிக்கப்பட்டது என்னவென்றால், 4, 5 மற்றும் 6 வது நாட்களில் நடத்தப்பட்ட ஒவ்வொரு யாகத்தின் போதும், தாக்குதல்கள் வலுப்பெற்றன, மேலும் இந்த யாகங்களுக்கு முன் மண், நீர் மற்றும் காற்று மாதிரிகளில் படிப்படியாக அதிகரித்த எதிர்மறைத் தன்மையிலிருந்து இது பிரதிபலித்தது. இப்படி இருந்தபோதிலும், 4, 5 மற்றும் 6 வது யாகங்களுக்கு பிறகு, மாதிரிகளின் எதிர்மறை ஒளிமண்டலம் அகற்றப்பட்டன. தீயசக்திகளின் விளைவை நீக்குவதில் யாகங்களின் ஆன்மீக சக்தியின் பங்கை இது காட்டுகிறது.
  6. இருப்பினும், ஒவ்வொரு தொடர்ச்சியான யாகத்தின் மூலம், ஒவ்வொரு மாதிரியின் நேர்மறை ஒளிமண்டல அளவின் சதவீத உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதும் கவனிக்கப்பட்டது.

4. ஒரு யாகத்தின் நேர்மறைத் தன்மையின் சூட்சும விளைவு

படம் 4. பூஜ்ய (திருமதி) யோயா வாலே

ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தில் (இந்தியாவிலுள்ள கோவாவில்) மேம்பட்ட நிலையின் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி ஆன்மீக பரிமாணத்தைப் பற்றிய விரிவான ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. ஆன்மீக ஆராய்ச்சிக் குழுவில் உள்ள ஸாதகர்களால் பெறப்பட்ட சூட்சும அறிவை, மிக உயர்ந்த வரிசையில் உள்ள மஹான்களால் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. தெய்வீக ஞானத்தை பெறுவதற்கான ஒரு ஊடகம் காட்சி வடிவத்தில் உள்ளது. அவ்வாறு ஞானத்தை பெறும் ஸாதகர்கள் சூட்சுமமாக வரையும் திறன் கொண்ட கலைஞர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் ஒரு சோதனை அல்லது சூழ்நிலையின் போது சூட்சுமமான செயல்முறையை பார்வைக்கு உணர முடியும் மற்றும் அவர்கள் உணர்ந்ததையும், உணருவதையும் வரைய முடியும். இந்த வரைபடங்கள் ஆன்மீக X-கதிர்களை ஒத்தவை மற்றும் சராசரி மனிதனுக்கு ஆன்மீக பரிமாணத்தில் இணையற்ற காட்சிப் பார்வையை வழங்குகின்றன. பூஜ்ய (திருமதி) யோயா வாலே (எஸ்எஸ்ஆர்எப் லிருந்து ஒரு மஹான்) அவர்கள் உணர்ந்தபடி, ஒரு யாகத்தின் நேர்மறையான சூட்சும விளைவை,கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் சித்தரிக்கிறது

எவ்வாறு ஒரு யாகம் ஆன்மீக அளவில் சுற்றுச்சூழலை சாதகமாக பாதிக்கிறதுசூட்சும திறன் கொண்ட கலைஞரால் உணரப்பட்ட சில சூட்சும செயல்முறைகள் பின்வருமாறு.

  1. தெய்வீக ஆற்றல் (சக்தி), தெய்வீக உணர்வு (சைதன்யா), மற்றும் தெய்வீக தத்துவம் போன்ற பல்வேறு வகையான நல்லசக்திகள் வளையங்கள் உருவாகுவதை அந்த கலைஞரால் பார்க்கமுடிந்தது.
  2. தெய்வீக சக்தி துகள் வடிவில் தெய்வத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இது தெய்வ தத்துவத்தின் ஆற்றலைத் தூண்டுவதாகும்.
  3. இதன் விளைவாக, கடவுளின் ஆற்றல் செயல்படுத்தப்பட்டது.
  4. கடவுளின் ஆற்றல் பின்னர் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டது. இந்த ஆற்றல் விதை வடிவில் அங்கேயே தங்கி, அந்த இடங்களில் வாழும் ஸாதகர்களை வரவிருக்கும் பாதகமான காலங்களில் (மூன்றாம் உலகப் போர் மற்றும் காலநிலை மாற்றம்) இருந்து பாதுகாக்க செயல்படுத்தப்படும்.
  5. தெய்வீக சைத்தன்யம் கொண்ட தெய்வ சக்தி துகள்கள் சுற்றுச்சூழலுக்குள் வெளியேற்றப்படுவது யாகம் நடந்த இடத்திலிருந்து உணரப்பட்டது. இதனுடன் தெய்வீக உணர்வின் (சைதன்யா) ஒட்டமும் சேர்ந்து இருந்தது. இந்த இரண்டு நேர்மறை சூட்சும ஆற்றல்களும் இந்தியாவிலும், உலகெங்கிலும் சுற்றுச்சூழலில் பரவியது.

5. முடிவுரை

பிப்ரவரி 2022 இல், உலகளாவிய CO2 அளவுகள் 418 ppm (ஒரு மில்லியனுக்கு சில பகுதிகள்) என அளவிடப்பட்டது. இந்த எதிர்பாரத, உயர்ந்த CO2 அளவுகள் காலநிலை மாற்றத்தின் அளவையும் தீவிரத்தையும் அதிகரிக்கும் என்று காலநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இருப்பினும், தற்போதைய காலங்களில் கொடிய மற்றும் மோசமான மாசுக்களின் அளவுரு முன் எப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. இந்த அளவுரு உலகில் ‘ஆன்மீக மாசுபாடு’ என்று அழைக்கப்படுகிறது. இது உலகில் உள்ள ரஜ மற்றும் தம நுண்ணிய கூறுகளின் விகிதத்தில் உயர்வு என அளவிடப்படுகிறது. காலநிலை மற்றும் சமீபத்திய தகவல் -காரணங்களும்,தீர்வுகளும் என்ற எங்கள் கட்டுரையில் அது உலகை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி விரிவாக விளக்கியுள்ளோம். இத்தகைய உயர்ந்த அளவிலான ஆன்மீக மாசுபாடு உலக அளவில் பரவி, உள்நாட்டு அமைதியின்மை, போர், தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது. சக்திவாய்ந்த தீயசக்திகள் ஆன்மீக மாசுபாட்டின் அதிகரிப்பைப் பயன்படுத்தி தெய்வீக சக்திகளுக்கு எதிராக ஒரு சூட்சும போரை நடத்துகின்றன. இத்தகைய சூட்சும போர் உலகில் முரண்பாடுகளை அதிகரிக்கும் முக்கிய வினையூக்கிகளில் ஒன்றாகும், இது இறுதியில் நாடுகளுக்கு இடையே போருக்கு வழிவகுக்கும்.

ஆன்மீக மாசுபாட்டின் அளவைக் குறைக்க மனிதகுலம் பயன்படுத்தக்கூடிய ஒரு தனித்துவமான ஆன்மீகக் கருவி, யாகங்கள் என்பதை இந்த சோதனை காட்டுகிறது. ஆயினும், ஒரு யாகத்தின் வழியாக நேர்மறைத்தன்மையை உள்வாங்கவும், அதை பராமரிக்கவும், சமூகம் ஒரு சாத்வீக அல்லது ஆன்மீக ரீதியில் தூய்மையான வாழ்க்கை முறையை வாழ்வதும் மற்றும் உலகளாவிய தத்துவத்தின்படி ஆன்மீக பயிற்சியை மேற்கொள்வதும் முக்கியம். அதிகரித்துவரும் ஆன்மீக மாசுபாட்டின் போக்கை மாற்றியமைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் உலகம் தற்போது எதிர்கொண்டிருக்கும் மற்றும் விரைவில் எதிர்கொள்ள இருக்கும் பிரச்சினைகளைத் தணிக்கக்கூடியதாக இருக்கும்.

சூட்சும அளவில் போரில் வெற்றி பெற, யாகங்கள் செய்ய வேண்டியது அவசியம். சூட்சும போர்களில், ஸ்தூலமான அணு குண்டுகள் போன்ற பேரழிவு ஆயுதங்களால் எந்தப் பயனும் இல்லை. அதனால்தான் பண்டைய காலங்களில் முனிவர்கள் யாகங்களை நடத்தினர், இது போர் போன்ற பிற ஆபத்துகளைத் தடுக்கும்.
-பராத்பர குரு டாக்டர் ஆடவலே