1. ஆவிகளால் பாதிக்கபடுதலின் வரையறை
ஆவிகளால் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) பாதிக்கப்படுதல் என்றால் அவற்றின் கருப்பு சக்தி மூலமாக ஒருவரின் உடல், மனம், புத்தி மற்றும் ஆன்மீக செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு மாறுதல் ஏற்படுகின்றது என்று அர்த்தம். பாதிக்கப்பட்ட ஒருவரின் மனம் மற்றும் புத்தி ஆகியவை ஆவிகளின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லை. ஒருவரின் வெளி மனத்துடன் எந்த விதத்திலும் இணையும் முயற்சியில் அந்த ஆவி வெற்றி அடையவில்லை.
- ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) தங்களின் கருப்பு சக்தியால் பாதிக்கப்பட்ட நபரின் மனம் மற்றும் உணர்வுகளை தூண்ட அல்லது குழப்பக்கூடும்.
- கருப்பு சக்தியால் அவை ஒருவரை, ஒன்றும் காரணமில்லாமல் தோலில் கீறல்கள் விழுவது, வேண்டாத எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவது, மனதில் குழப்பங்கள் உருவாவது போன்ற பல விதங்களில் பாதிக்கின்றன. ஒரு விதத்தில் இது அந்த நபரை மறைமுகமாக கட்டுப்படுத்துவதாகும். உதாரணத்திற்கு, உடலில் கீறல்கள் ஏற்பட்ட ஒருவரால் அவர் விரும்பிய நாட்டிய நிகழ்ச்சிக்கு சென்று பங்கெடுக்க முடிவதில்லை. இதன் மூலம் அந்த ஆவி, பாதிக்கப்பட்ட நபரை அவர் விரும்பிய நாட்டிய நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் சோகத்தில் ஆழ்த்துகிறது.
- கருப்பு சக்தியால் பாதிப்பு ஏற்படுவது என்பது விஷ புகை சூழ்ந்த ஒரு அறையில் ஏற்படும் பாதிப்பைப் போன்றது. அது பல நிலைகளில் ஒருவரை பாதிக்கக்கூடும். எனினும், ஒரு ஆவி, தன் குறிக்கோளுக்கு சாதகமாக எது உள்ளதோ அந்த விஷயத்தில் (தொல்லைக்குள்ளாக்குவது, தன் ஆசையை பூர்த்தி செய்து கொள்வது,ஆன்மீக பயிற்சி செய்ய விடாமல் தடுப்பது போன்றவை) பாதிப்பை ஏற்படுத்துகின்றது. தீவிர நச்சுத் தன்மை கொண்ட விஷ வாயுவைக் காட்டிலும், இலக்கில், தீவிரத்தில், பரிமாணத்தில் மற்றும் கால அளவில் அந்த ஆவியின் கருப்பு சக்தி அதிக பயங்கரமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
2. பேய்களால் பீடிக்கப்படுதலின் வரையறை
பேய்களால் பீடிக்கப்படுவது என்பது ஒரு ஆவி, ஒருவரின் வெளி மனதோடு ஒன்றி அவரின் மனதை (உணர்வுகள் அல்லது எண்ணங்கள்) மற்றும் புத்தியை (முடிவெடுக்கும் திறன்) தன் ஆளுகைக்குள் கொண்டு வருவதாகும். அதன் மூலம் அவரின் செயல்களையும் அது கட்டுப்படுத்துகிறது.
- பீடிக்கப்பட்ட ஒருவரின் செயல்களை, முழுவதுமாக அல்லது பகுதியாக, பீடித்த ஆவி கட்டுப்படுத்துகிறது.
- பீடித்த ஆவிகள், பீடிக்கப்பட்ட நபரின் உடலுக்குள் தங்கியிருக்கலாம் அல்லது வெளியே இருந்தபடி அவரை கட்டுப்படுத்தலாம்.
- ஒருவரை பீடித்த பின் அந்த ஆவி உள்ளே தங்கியுள்ளதா அல்லது வெளியே தங்கியுள்ளதா என்பது பீடித்தலின் தீவிரத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவது இல்லை.
- மகான்களுடன் அவர்களின் சைதன்ய சக்தி எப்படி இணைந்தே உள்ளதோ அப்படியே ஒரு ஆவியுடன் அதன் கருப்பு சக்தியும் இணைந்தே உள்ளது. அதனால் ஆவியின் பீடித்தலிலும் கருப்பு சக்தியின் தொடர்பு உள்ளது. ஆனால் பீடிப்பதில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இதில் ஆவி, பாதிக்கப்பட்ட நபருக்கு துன்பம் தருவதற்காக தீவிரமாக செயல்பட்டு நேரிடையாக அவரின் மனம் மற்றும் புத்தியை ஆக்கிரமிக்கின்றது.
- பெரும்பாலும், பீடிக்கப்பட்டிருக்கும் நபருக்கு தான் பீடிக்கப்பட்டிருக்கிறோம் என்பதே தெரிவதில்லை. ‘தி எக்சார்சிசம் ஆப் எமிலி ரோஸ்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் பயங்கரமாக வெளிப்பட்டதைப் போன்று வெளிப்படும் போதுதான் தெரிய வருகிறது.