திட நம்பிக்கை இன்றி நாமஜபம் செய்தால் நமக்கு ஏதாவது பயன் கிடைக்குமா?
ஆம், ஒருவர் திட நம்பிக்கை இன்றி நாமஜபம் செய்தாலும் பயன் பெறுவார்கள், இருப்பினும் அது உலக நன்மைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.
வைட்டமின் மாத்திரையுடன் ஒப்புமை: இறைவனின் ஒவ்வொரு பெயரும் இறைவனின் குறிப்பிட்டவொரு அம்சத்திற்கு ஒத்திருக்கிறது. குறிப்பிட்ட இறைநாமத்தை கூறுவதால், அந்த குறிப்பிட்ட இறை அம்சத்தின் அல்லது தத்துவத்தின் நன்மைகளை நாம் பெறுகிறோம். இதை வைட்டமின் மாத்திரை உட் கொள்ளும் ஒப்புமை மூலம் புரிந்து கொள்ளலாம். வைட்டமின் மாத்திரையை உட்கொள்வதால், அந்த வைட்டமின் நிலை நம்முள் அதிகரிப்பத்துடன், அதன் நலனையையும் பெறுகிறோம். திட நம்பிக்கை இல்லாமல் மாத்திரையை உட்கொண்டாலும் அதன் நன்மையை பெறுகிறோம். இதேபோல் நாம் இறைவனுடைய நாமத்தை ஜபம் செய்யும்போது, அந்த இறை தத்துவம் நம்முள் உயர்கிறது. இது மதம் அல்லது கலாச்சாரம் எதுவாக இருந்தாலும் மற்றும் திட நம்பிக்கையுடனோ அல்லது திட நம்பிக்கையில்லாமலோ நாமஜபம் செய்தாலும் அவ்வாறு நிகழ்கிறது.
திட நம்பிக்கை மற்றும் திட நம்பிக்கையில்லாமல் நாமஜபம் செய்தல் : பெரும்பாலான மக்களின் ஆன்மீக நிலை 30% ற்கு குறைவாக இருப்பதால், கடவுள் மீதுள்ள அவர்களின் திட நம்பிக்கை 0 – 2% மட்டுமே (கீழே உள்ள வரைபடத்தைப் பார்க்கவும்). அவர்களை பொறுத்தவரையில் திட நம்பிக்கை சிறியளவு அல்லது முற்றிலும் இல்லாமல் நாமஜபம் ஆரம்பமாகிறது. இதுவே அவர்களுக்கு உலக நன்மைகளுடன் பல ஆன்மீக அனுபவங்களையும் பெற்றுத்தர திட நம்பிக்கை மேலும் விருத்தி அடைகிறது. எனினும் திட நம்பிக்கையுடன் ஒருவர் நாமஜபம் செய்தால், கூடுதல் நன்மை கிடைக்கும். பணம் உலக வாழ்க்கையின் நாணயம், திட நம்பிக்கை ஆன்மீக வாழ்வின் நாணயம் என்று ஒரு முதுமொழி உள்ளது. நாம் திட நம்பிக்கையுடன் நாமஜபம் செய்யும் போது:
- எந்த தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்கிறோமோ, அந்த தெய்வத்தின் தத்துவம் மிக விரைவாக செயல்படுத்தபடுகிறது.
- இந்த விளைவு நீண்ட காலத்திற்கு நீடிக்கும் மற்றும்
- மிக முக்கியமாக, திட நம்பிக்கையுடன் நாமஜபம் செய்வதன் மூலம் நாம் ஆன்மீக வளர்ச்சி பெற்று இறைவனோடு ஒன்றாகிறோம்.
திட நம்பிக்கையுடன் நாமஜபம் செய்யும் போது, இறைவனின் இருப்பை அதிகமாக உணர்வதே இதற்கு காரணம் ஆகும். இதன் பொருள் என்னவென்றால், நமது ஆன்மீக உணர்வு அதிகரிப்பதால் நம்மை சுற்றி இறைவனின் இருப்பை நம்மால் உணர முடிகிறது. இறைவனின் இருப்பை உணர்வதால் நம் மீதான கவனம் குறைவதுடன் நமது அகம்பாவமும் குறைகிறது. நமது அகம்பாவம் குறைவதால், நாம் நாமஜபம் செய்யும் தெய்வத்தின் தெய்வீக சக்தியினை சிறப்பாக அணுக முடியும்.
செயல் விதியின் படி, நாம் எதை செய்தாலும் அதற்கான விளைவுகள் எப்போதும் ஏற்படும். சில உலக நலன்களை பெறுவதற்கான வரையறுக்கப்பட்ட நோக்கத்துடன், நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்கு நாமஜபம் செய்தால், நாம் விரும்புகின்ற இவ்வுலக வாழ்விற்குரிய விருப்பங்கள் நிறைவேறுகிறது. எனினும் கடவுளோடு ஒன்றிணைய வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் நாம் திடநம்பிக்கையுடன் நாமஜபம் செய்தால், அது ஆன்மீக வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
திட நம்பிக்கையுடன் மற்றும் திட நம்பிக்கை இல்லாமல் செய்யும் நாமஜபத்தின் பலன்
ஆன்மீக நிலையுடன் நமது நாமஜபம் எவ்வாறு அதிகரிக்கிறது என்பதனை பின்வரும் வரைபடம் காட்டுகின்றது.
இரண்டு நபர்களிடையே, அதாவது ஒருவர் 30% ஆன்மீக நிலையிலும் மற்றொருவர் 70% ஆன்மீக நிலையிலும் அவரவர் திட நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் நாமஜபம் செய்வதால் ஏற்படும் ஆன்மீக சக்தியின் வேறுபாட்டை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.
ஆன்மீக நிலை படி திட நம்பிக்கையுடன் நாமஜபம் செய்வதன் பலன் | ||
---|---|---|
ஆன்மீக நிலை | 30% | 70% |
ஆன்மீக சக்தி உருவாக்கப்படும் அடிப்படையில் அதன் பலன்கள் | 1 | 100,000 |
குறிப்பு: மந்திரங்கள் ஜபிப்பதால் ஏற்படும் பலன்களை பெறுவதற்காக, திட நம்பிக்கை அல்லது திட நம்பிகையில்லாமல் ஜபிப்பது முக்கியம் அல்ல, மாறாக உச்சரிப்பே முக்கியமானது.