சக்கரங்கள் என்பன குண்டலினி அமைப்பில் உள்ள சுஷும்னா நாடியுடன் ஒருங்கிணைந்த சூட்சும சக்தி கேந்திரங்கள் ஆகும். சுஷும்னா நாடியில் ஏழு முக்கிய குண்டலினி சக்கரங்கள் பரவி உள்ளன. இந்த சக்கரங்கள் நம் உடல் உறுப்புகள், மனம் மற்றும் புத்தியின் செயல்பாட்டிற்கு தேவையான சூட்சும சக்தியை அளிக்கின்றன. எனினும் இந்த குண்டலினி என்பது ஒரு மனிதனின் சூட்சும உடலுடன் மட்டுமே தொடர்பு உடையது. அவற்றின் பெயர்கள் மேலிருந்து கீழ் என்ற வரிசைகிரமத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
எண் | குண்டலினியின் சமஸ்கிருத வார்த்தை | குண்டலினியின் மேற்கத்திய வார்த்தை |
---|---|---|
7 | சஹஸ்ரார சக்கரம் | கிரீட சக்கரம் |
6 | ஆக்ஞா சக்கரம் | புருவமத்திய சக்கரம் |
5 | விஷுத்தி சக்கரம் | தொண்டை சக்கரம் |
4 | அநாஹத சக்கரம் | ஹ்ருதய சக்கரம் |
3 | மணிப்பூரக சக்கரம் | நாபி சக்கரம் |
2 | ஸ்வாதிஷ்டான் சக்கரம் | திருவெலும்பு சக்கரம் |
1 | மூலாதார சக்கரம் | மூல சக்கரம் |
குண்டலினி சக்கரங்களின் அமைப்பு கீழுள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரம்மரந்திரம் என்பது சஹஸ்ரார சக்கரத்தின் மேலேயுள்ள சூட்சும நுழைவாயில்; அதன் வழியே தெய்வீக சக்தி உள்வாங்கப்படுகிறது. பிரம்மரந்திரம் வழியாக குண்டலினி சக்தி வெளியேறுவது என்பது கடவுளிடம் ஐக்கியமான நிலையைக் குறிக்கிறது. ஆன்மீகத்தில் முதிர்ந்தவர், தங்கள் இறப்பின்போது உடலை விட்டு வெளியேறுவதும் இதன் வழியாகத்தான்