மாற்று சிகிச்சை முறைகள் – செயல்பாடு

Alternative medicine landing

1. அறிமுகம்

இந்த கட்டுரையில் பல்வேறு மாற்று சிகிச்சை முறைகளை அவற்றின் உண்மையான செயல்பாடின் நிலையோடு ஒப்பிடுகிறோம். இங்கு செயல்பாடு என்பது ஒரு நபர் நோயிலிருந்து விடுபட சிகிச்சையானது என்ன செய்கிறது என்பதைக் குறிக்கிறது.

இந்தத் தொடரில் உள்ள அனைத்து கட்டுரைகளிலும் உள்ளதைப் போலவே, பல்வேறு மாற்று சிகிச்சை முறைகளையும் மற்றும் அதன் செயல்பாட்டின் ஆழத்தை அடிப்படையாகக் கொண்டு ஏறுவரிசையில் கொடுத்துள்ளோம். அதாவது, ஏறுவரிசையின் முதல் நிலையில் அலோபதி உள்ளது, இது ஸ்தூல தேகத்தில் நோயை உருவாக்கும் கஷ்டம் தரும் சக்திகளின் அதிர்வலைகளை ஸ்தூல நிலையிலேயே அழிப்பதில் செயல்படுகிறது. வரிசையின் நடுநிலையில் உள்ள முத்ரா சிகிச்சையானது, சூட்சும கஷ்டம் தரும் அதிர்வலைகளை ஆவிகள் (எ.கா. பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள், முதலியன) உடலை விட்டு தள்ளுகின்றது. வரிசையின் கடைசி நிலையில், உறுப்புகள் மற்றும் உயிரணுக்களுக்கு இடையில் உள்ள இடைவெளிகளில் தெய்வீக உணர்வை (சைதன்யா) உருவாக்கும் ஆயுர்வேதம் உள்ளது.

 

2. அலோபதி

உடலில் ஏற்படும் எந்தவொரு நோய் அல்லது கோளாறானது, உடலில் பல்வேறு நிலைகளில் கஷ்டம் தரும் அதிர்வலைகளை உருவாக்குகிறது. இந்த மாற்று சிகிச்சை முறையானது ஸ்தூல தேஹத்தில் நோயினால் உருவான கஷ்டம் தரும் சக்திகளின் அதிர்வலைகளை ஸ்தூல நிலையிலேயே அழிப்பதில் செயல்படுகிறது. அலோபதி உடல் நிலையில் மட்டுமே செயல்படுவதால், அனைத்து சிகிச்சை முறைகளிலும் இது மிகவும் தாழ்வானது.

 

 

 

3. யுனானி மருத்துவம்

யுனானி மருந்து உடலில் உள்ள சக்தி ஓட்டத்தில் ஏற்படும் கஷ்டம் தரும் அதிர்வலைகளை எதிர்ப்பதன் மூலம் செயல்படுகிறது. ஏனென்றால், அதன் செயல்பாடு உடலில் உள்ள சக்தி ஓட்டத்தின் அளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் செயல் அலோபதியை விட ஆழமானது என்பதால் இதன் பலனும் ஆழமானது மற்றும் விரிவானதாகும்.

 

 

 

4. அக்குபிரஷர்

எந்தவொரு நோயின் செயல்முறையும் உடலில் உள்ள சக்தி ஓட்டத்திற்கு தடை உண்டாக்குகிறது. அக்குபிரஷர் சிகிச்சையானது சக்தி ஓட்டத்தில் சேதனாவைச் செயல்படுத்தி அதன் மூலம் அந்த நோயின் சக்தி ஓட்டத்திற்கான தடையை எதிர்த்துப் போராடுகிறது (உடல் மற்றும் மனதின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் தெய்வீக உணர்வின் அம்சம் சேதனா ஆகும்). சக்தி ஓட்டம் இயல்பானதாக மாறும்போது, உடல் நோயை எதிர்த்துப் போராடுவதற்கு தயாராகிறது. இம் மருத்துவமுறையானது அலோபதி மற்றும் யுனானி மருத்துவ முறையை விட ஆழமான நிலையில் நோயை குணப்படுத்துவதை நாம் காணலாம்.

 

 

 

5. முத்ராக்கள்

முத்ராக்கள் நோயுற்ற பகுதிகளிலிருந்து வெளிப்புற வளிமண்டலத்திற்கு கஷ்டம் தரும் அதிர்வலைகளை தள்ளுவதன் மூலம் செயல்படுகின்றன. இதனால் நிவாரணமடைதல் விரைவாக நடைபெறுகிறது. இருப்பினும் இந்த மாற்று சிகிச்சை முறையின் குறைபாடு என்னவென்றால், இந்த அதிர்வலைகள் அழிக்கப்படாமல் இருப்பதால், அவை மீண்டும் அதே நபருக்குள் நுழையலாம் அல்லது மற்றொரு நபரைப் பாதிக்கலாம்.

 

 

 

6. ஹோமியோபதி

ஹோமியோபதி உடல் செல்களிலேயே சேதனாவை உருவாக்குவதன் மூலம் செயல்படுகிறது. இதனால் இந்த மாற்று சிகிச்சை முறை மேற்கூறிய மாற்று சிகிச்சை முறைகளை விட இன்னும் ஆழமான நிலையில் செயல்படுகிறது.

 

 

 

7. ஆயுர்வேதம்

ஆயுர்வேதம் செல்களில் உள்ள இடைவெளிகளில் தெய்வீக உணர்வை உருவாக்குவதன் மூலம் செயல்படுகிறது. இதன் காரணமாக அந்த இடத்திலேயே ஆவிகளின் சூட்சும கருப்பு சக்தியின் சிதைவு ஏற்படுகிறது. இது செல்களை விடவும் சூட்சுமமான செல் இடைவெளிகளின் மட்டத்தில் செயல்படுவதாலும், அதுவும் தெய்வீக உணர்வை உருவாக்குவதன் மூலமும், மேற்கூறிய மாற்று சிகிச்சை முறைகள் அனைத்திலும் இதன் செயல்பாடே மிகவும் சூட்சுமமானது மற்றும் மிகவும் விரிவானது.