ஆன்மீக நிலைக்கு ஏற்ப குண்டலினி சக்கரங்கள் விழிப்படைகிறது

குண்டலினி விழிப்பு மற்றும் சக்கரங்களின் விழிப்புணர்வு என்பது ஒருவரின் ஆன்மீக நிலையோடு நெருக்கமாக தொடர்புடைய ஒரு செயல்முறையாகும். ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் பெறப்பட்ட பின்வரும் அட்டவணைப்படி எந்தெந்த ஆன்மீக நிலையில் குண்டலினி விழிப்படைந்து, மத்திய நாடிகளை நோக்கி பயணித்து பல்வேறு சக்கரங்களை விழிப்படையச் செய்கிறது என்று விவரிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீக நிலை சக்கரங்களின் விழிப்புணர்வு

65%

மூலாதார சக்கரம் (மூல சக்கரம்)

70%

ஸ்வாதிஷ்டான் சக்கரம் (திருவெலும்பு சக்கரம்)

75%

மணிபூரக சக்கரம் (நாபி சக்கரம்)

80%

அநாஹத சக்கரம் (இதய சக்கரம்)

85%

விஷுத்தி சக்கரம் (தொண்டை சக்கரம்)

90%

ஆக்ஞா சக்கரம் (புருவ மைய சக்கரம்)

95%

ஸஹஸ்ரார சக்கரம் (கிரீட சக்கரம்)

95% மேல்

பிரம்மரந்திரத்தின் விழிப்புணர்வு

தற்போது, குறிப்பாக ஆன்மீக நிவாரணம் மற்றும் புதிய வயது வட்டாரங்களில் உள்ள மக்கள், தங்கள் சக்கரங்களின் நிலை அதாவது அது திறக்கப்பட்டுள்ளதா அல்லது மூடப்பட்டுள்ளதா,சக்கரங்களின் சமநிலை மற்றும் அது எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்தும் அடிக்கடி உரையாடுவதைக் கேட்கிறோம். மேலே உள்ள அட்டவணைப்படி உயர்ந்த ஆன்மீக நிலை வரை சக்கரங்கள் செயல்படுத்தப்படாது என்பதால், மேற்கண்ட உரையாடல் தேவையற்றது மற்றும் பயனற்றதாகும். பெரும்பான்மையான மக்களுக்கு அது செயலற்ற நிலையில் தான் உள்ளன. அவர்கள் உண்மையில் குறிப்பிடுவது நுண்ணிய(அதிநுட்பமான) சேதனா ஆகும், இது பிராண சக்தி என்றும் அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு இதயப் பகுதியிலும் அதைச் சுற்றியும் வலுவாக இருக்கும் பிராண சக்தியை, ஆன்மீக நிவாரண பரிபாஷையில் இதயச் சக்கரம் திறந்திருக்கிறது என்று தவறாகக் குறிப்பிடப்படுகிறது.