பிராண சக்தி என்பது தனி ஒருவரின் ஸ்தூல தேஹம் மற்றும் பிரபஞ்சம் ஆகிய இரண்டின் உயிர் தாங்கும் ஜீவன சக்தியாகும்.
ஒரு நபருக்கு ஏற்ற ஐந்து வகை சக்திகள் இதில் உள்ளன. அவை :
- சுவாசத்தை உள்ளிழுக்கும் செயல்பாட்டிற்கான சக்தி(பிராண).
- சுவாசத்தை வெளியே விடுவதற்கும்,பேச்சின் (உதான) செயல்பாட்டிற்கான சக்தி.
- வயிறு மற்றும் குடல்களின் செயல்பாட்டிற்கான சக்தி(சமான).
- உடலின் தன்னிச்சையான மற்றும் தன்னிச்சையில்லாத செயல்பாட்டிற்கான சக்தி(வியான).
- மலம், சிறுநீர் கழித்தல், விந்து வெளியேற்றுதல் மற்றும் குழந்தைப் பிறப்பு ஆகியவற்றின் செயல்பாட்டிற்கான சக்தி(அபான).