சத்சங்கத்தின் அர்த்தமானது பூரண சத்தியமான இறைவனின் சங்கம் என்பதாகும். அதாவது ‘சத்’ என்பது பூரண சத்தியத்தையும் ‘சங்கம்’ என்பது ஸாதகர்கள் அல்லது மகான்களின் சகவாசம் என்பதாகும். சுருக்கமாக சொல்வதெனில் சத்சங்கம் இறைவனின் இருப்பை அனுபவிப்பதற்கு உகந்த சூழலாகும்.
நாமஜபம் செய்ய துவங்கிய பின் ஒருவர் செய்யக்கூடிய அடுத்தகட்ட பயிற்சி இதுவாகும். அதனால் நாமஜபம் செய்வது நிறுத்தப்படும் என்பது பொருளல்ல. இறைவனின் நாமத்தை உச்சரிப்பதோடு சத்சங்கங்களுக்கும் செல்ல வேண்டும். ஒரே எண்ணம் கொண்ட (அதாவது இறைவனை உணர்தல்) நபர்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடல் செய்வதற்கு இது ஏதுவாக அமையும்.
சத்சங்கம் என்பதின் அர்த்தத்தை புரிந்துக்கொள்வதாலும் சத்சங்கத்திற்கு செல்வதாலும் பல நன்மைகளை பெற முடியும்.
ஆன்மீக சாஸ்திரத்தை பற்றிய சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள முடியும். ஆன்மீக பயிற்சி அல்லது ஆன்மீக தத்துவங்கள் தொடர்பாக ஏதேனும் ஐயமிருப்பின் அவை உடனுக்குடன் தெளிவுபடுத்தப்படவேண்டும். இல்லாவிட்டால் மனப்பூர்வமாக ஆன்மீக பயிற்சியை மேற்கொள்ள முடியாது போகும்.
ஒருவர் தன்னுடைய ஆன்மீக அனுபவத்தை பகிர முடிவதோடு அதற்குரிய ஆன்மீக முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. மற்றவரின் நம்பிக்கை பற்றி தெரிந்து கொள்வது நமக்கு ஆன்மீகப்பயிற்சியினை தொடர்ச்சியாக செய்ய ஊக்கம் அளிக்கிறது.
சூட்சும நிலையில் ஒருவர் தெய்வீக உணர்வினை (சைதன்யம்) சத்சங்கம் மூலம் பெறுகிறார். சத்சங்கத்தின் அதிகரிக்கப்பட்ட சாத்வீக தன்மை ஒருவரின் ஆன்மீக பயிற்சிக்கு பெரிதும் உதவுகிறது. சுற்றுச்சூழலில் உள்ள ரஜதம அணுக்களால் ஆன்மீக மாசடைவு ஏற்படுவதால் இறைவனை பற்றி நினைப்பதற்கும் ஆன்மீக பயிற்சி செய்வதற்கும் கடினமாக உள்ளது. இருப்பினும் நாள் முழுவதும் நாமஜபம் செய்பவர்களின் சகவாசத்தில் இருக்கும்போது இதற்கு எதிர்மாறான பலன் கிடைக்கிறது! ஸாதகர்களிடமிருந்து வெளிப்படும் சாத்வீக அதிர்வலைகளால் அல்லது தெய்வீக உணர்வினால் நாம் பயனடைகிறோம். சத்சங்கத்தினுள் நுழையும் போது வாழ்க்கையில் மிகவும் அடிபட்டு வேதனையுடன் சென்றாலும் சத்சங்கம் முடிவடைந்து வெளியேறும்போது உள்ளிருந்து புதுப்பிக்கப்பட்டு முற்றிலும் புதிதாக உணருவோம்.
சத்சங்கத்தின் போது உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை பின்வரும் வரைபடம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இப்போது சத்சங்கம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டீர்கள். இது தொடர்பான பிற கட்டுரைகள்: சத்சங்கத்தின் நன்மைகள், சத்சங்கத்தின் வகைகள் மற்றும் மகான்களின் சத்சங்கம் போன்றவற்றையும் வாசிப்பதற்கு பரிந்துரை செய்கின்றோம்.