நல்ல உறக்கத்திற்கான திசை (கிழக்கு – மேற்கு)
1. பாதங்களை மேற்கு நோக்கி வைத்து உறங்குதல் – ஒரு அறிமுகம்
இந்த கட்டுரையில் நன்றாக உறங்குவது எப்படி மற்றும் மேற்கு (திசையை) நோக்கி பாதங்களை வைத்து உறங்குவதால் ஏற்படும் பலன்களை பற்றி அறிய உள்ளோம். முற்றிலும் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் செய்யப்பட்ட இந்த ஆய்வானது, உறங்கும் போது எந்த திசைநோக்கி பாதங்கள் இருக்கவேண்டும் என்பதை பற்றி அறிந்து முடிவெடுக்க உதவுகிறது.
1.1 நன்றாக உறங்குவது எப்படி என்பது பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி – நம் பாதங்களை மேற்கு நோக்கி வைத்து உறங்குவததால் ஏற்படும் விளைவு
மேம்பட்ட ஆறாவது அறிவு அல்லது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வினை அறியும் திறன் கொண்ட எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் ஸாதகர்கள், வெவ்வேறு உறக்க நிலைகளை பற்றி ஆன்மீக ஆராய்ச்சி செய்தனர். இவர்கள் பாதங்களை மேற்கு நோக்கி வைத்து உறங்குவதால் ஏற்படும் பலன்களை பற்றியும், மேலும் உறங்குவதற்கான சிறந்த திசையை பற்றியும் அறிய முற்பட்டனர். இந்த ஆன்மீக ஆராய்ச்சியில் இவர்கள் பெற்ற தெய்வீக ஞானம், பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களால் சரிபார்க்கப்பட்டது.
2. மேற்கு நோக்கி பாதங்களை வைத்து உறங்குவதால் ஏற்படும் ஆன்மீக விளைவு
2.1 இறைவனின் க்ரியா சக்தி அதிர்வலைகளால் ஏற்படும் நன்மைகள்
இறைவனின் க்ரியா சக்தி அதிர்வலைகள் (க்ரியா-லஹரி) கிழக்கு -மேற்கு திசையில் நிர்மானிக்கப்பட்டுள்ளதால், இறைவனின் க்ரியா சக்தி இந்த இரண்டு திசைகளுக்கும் இடையே சுற்றி கொண்டிருக்கும். எனவே நமது பாதங்களை மேற்கு நோக்கி வைத்து உறங்குவதன் மூலம் இந்த அதிர்வலைகளின் அதிக பலன்களை பெறுகிறோம். மேலும் அவை நமது செயல்களைச் செய்வதற்கு நமக்கு வலிமை தருகின்றன.
2.2 உடலில் உள்ள ஐந்து பிராண சக்திகளை செயல்படுத்துதல்
க்ரியா அதிர்வலைகளின் பரிமாற்றத்தின் காரணமாக, நாபி பகுதியிலுள்ள பஞ்ச பிராணன் செயல்பட ஆரம்பிக்கிறது. இந்த பஞ்ச பிராணன், உப-பிராணனின் உதவியோடு தேவையற்ற வாயுக்களை தேஹத்திலிருந்து வெளியேற்றுகிறது. இதனால் பிராண தேஹமும் பிராணமயகோசமும் தூய்மையாகின்றன. இது ஒருவரை பலப்படுத்துகிறது.
2.3 ஸாத்வீக அதிர்வலைகளின் பலன்கள்
அதிகாலையில் ஸாத்வீக அதிர்வலைகள் (மேலே குறிப்பிட்டவை தவிர) கிழக்கு திசையிலிருந்து வெளிப்படுகின்றன. நம் கால்களை மேற்கு நோக்கி வைத்து உறங்கும் போது, வளிமண்டலத்தில் இருந்து வரும் இந்த ஸாத்வீக அதிர்வலைகள், கிழக்கு நோக்கி உள்ள நம் தலை வழியாக அதாவது பிரம்மரந்திராவின் வழியாக (7வது குண்டலினி சக்கரத்தில் வழியாக உடலுக்குள் எளிதில் நுழைகிறது. 7வது குண்டலினி சக்கரத்தின் மேலுள்ள திறப்பு ஸஹஸ்ரார சக்கரம் ஆகும். இந்த ஸாத்வீக அதிர்வலைகளை கிரஹிப்பதன் மூலம் நாமும் ஸாத்வீகமாகி அந்த நாளை உயர்ந்த ஸாத்வீகத்துடன் தொடங்குகிறோம். எனவே, அதிக நேர்மறைத்தன்மையுடன் ஒரு நாளைத் தொடங்க, நம் பாதங்ளை மேற்கு நோக்கி வைத்து உறங்க வேண்டும்.
2.4 வலஞ்சுழியாக உடலின் சுழற்சி ஏற்படுதல்
இறைவனின் க்ரியா சக்தி அதிர்வலைகள் மற்றும் அதிகாலையில் உள்ள ஸாத்வீக அதிர்வலைகளைத் தவிர, இனிமையான சப்தஸ்வர (ஏழு-சிற்றலை) அதிர்வலைகள் கிழக்கு திசையில் இருந்து வருகின்றன. கிழக்குத் திசையில் தலை வைத்து உறங்கும்போது, இந்த அதிர்வலைகளிலிருந்து அதிகபட்ச பலனைப் பெறுகிறோம். அதன் விளைவாக நமது உடல் சுழற்சி வலஞ்சுழியாக /கடிகார திசையில் அதாவது உகந்த திசையில் இயங்குகிறது. இம்முறையானது உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் உகந்ததாக இருக்கும். உடல் சுழற்சி என்பது அனைத்து ஸ்தூல மற்றும் சூட்சும உடல் செயல்பாடுகளின் சூட்சுமமான அமைப்பாகும்.
2.5 உறக்கத்துடன் தொடர்புடைய ரஜ-தம கூறுகளிலிருந்து நிவாரணம்
நாம் பாதங்களை மேற்கு நோக்கி வைத்து உறங்கும்போது, தலை கிழக்கு நோக்கியிருப்பதால், ஏழு குண்டலினி சக்கரங்களால்( 10% அதிகமான சப்தஸ்வர அதிர்வலைகள் உள்வாங்கப்படுகின்றன. இதன் விளைவாக (சப்தஸ்வர அதிர்வலைகளின் தாக்கத்தால்) சக்கரங்கள் கடிகார திசையில் நகரும் போது, ஒருவர் ஆன்மீக நிலையில் பலனைப் பெறுகிறார்.எனவே உறக்க நிலையில் ஒருவரது உடலில் உருவாகும் சூட்சும அடிப்படை ரஜ-தம கூறுகளால் கஷ்டத்தை அனுபவிப்பதில்லை. இதனால் ஒருவரால் நன்றாக உறங்கமுடியும்.
3. முடிவுரை
மேற்கூறிய விளக்கங்களிலிருந்து, எப்படி நன்றாக உறங்குவது என்ற பார்வையில், மேற்கு நோக்கி பாதங்களை வைத்து கிழக்கு – மேற்காக உறங்குவதே சிறந்தது என்பதை அறியலாம்.