சுருக்கம் :
நமக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய உலகத்துடன் ஒப்பிடுகையில் எல்லையற்ற பரந்த தெளிவாகத் தொட்டுணர முடியாத சூட்சும உலகம் ஒன்று உள்ளது. இந்த சூட்சும உலகம் நம் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றது. எனவே, அதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த உலகம் சூட்சும பரிமாணத்தில் இருப்பதால், அதை நமது ஸ்தூல ஞானேந்த்ரியங்கள், மனம் மற்றும் புத்தியால் உணர முடியாது. மேலும் அதை ஆறாவது அறிவின் மூலமாக மட்டுமே உணர முடியும். இந்த கட்டுரை வாசகர்களுக்கு அவர்களின் ஆறாவது அறிவை பயிற்சி செய்து பரிசோதிக்கவும், மற்றும் அதன் வளர்ச்சியை கண்காணிக்கவும் அர்ப்பணிக்கப்படுகிறது.
அட்டவணை
1. நமது ஆறாவது அறிவை (புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு) பரிசோதிக்க உதவும் சூட்சும பரிசோதனை என்ன?
நமது ஆறாவது அறிவு (புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு) என்பது சூட்சும பரிமாணம் அல்லது சூட்சும உலகத்தை உணரும் திறன் ஆகும். சூட்சும பரிசோதனை என்பது நமது ஆறாவது அறிவை(இ.எஸ்.பி) பயன்படுத்த நம்மை நாமே சோதித்து பயிற்சி பெறுவதற்கான ஒரு வழியாகும்.
நாங்கள் சூட்சும பரிமாணம் அல்லது சூட்சும உலகம் என்பதை ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் புரிதலுக்கு அப்பாற்பட்ட உலகம் என்று வரையறுக்கிறோம். சூட்சும உலகம் என்பது தேவதைகள், பேய்கள் , சுவர்க்கம் போன்ற புலப்படாத உலகத்தைக் குறிக்கிறது, இதை நமது ஆறாவது அறிவின் (இ.எஸ்.பி) மூலம் மட்டுமே உணர முடியும்.
2. இணையதளத்தின் இந்தப் பகுதியின் நோக்கம் என்ன?
நாம் அனைவரும், நமது ஐம்புலன்கள், மனம் மற்றும் அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி உந்துதல்களை பகுப்பாய்வு செய்வதற்கும் உணருவதற்கும் நன்கு பழகிவிட்டோம். ஐம்புலன்கள், புத்தி மற்றும் மனம் ஆகியவற்றை பயன்படுத்தி ஒரு சூழ்நிலையை பகுத்தாய்ந்து அதிலுள்ள சிக்கலைத் தீர்ப்பதற்கு மட்டுமே நமது கல்வி முறை நமக்கு சொல்லிக்கொடுக்கிறது. பொதுவாகவே சூட்சும பரிமாணத்தை நவீன அறிவியல் புறக்கணிக்கிறது, ஏனெனில் பாரம்பரிய, மற்றும் பகுப்பாய்வு முறைகளைப் பயன்படுத்தி அதன் இருப்பை நிரூபிக்க முடியாது.
இதன் விளைவாக :
-
சூட்சும பரிமாணம் அல்லது சூட்சும உலகம் இருப்பதை அறியாமல் வளர்கிறோம்.
-
நாம் பார்த்த உலகத்திற்கு அப்பாற்பட்ட உலகத்தை உணர நமது ஆறாவது அறிவைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவர்களாக வளர்கிறோம்.
இந்தப் பகுதியின் மூலம் சமூகத்தில் ஆறாவது அறிவைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். அதை மீண்டும் பயன்படுத்த கற்றுக்கொள்வதன் மூலம், மக்கள் சூட்சும பரிமாணம் அல்லது சூட்சும உலகத்தை உணர முடியும்.
3. சூட்சும பரிசோதனையின் நோக்கம் என்ன?
ஒரு கேள்விக்குரிய விஷயத்தின் உடல்ரீதியான மற்றும் மனோரீதியான அம்சத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற நவீன அறிவியலின்படி இப்பரிசோதனை நடத்தப்படுகிறது.
ஒரு சூட்சும பரிசோதனை என்பது அவ்விஷயத்தில் உள்ள சூட்சும அம்ச விவரங்களை ஆழமாகப் புரிந்துகொள்வதாகும். அவற்றில் பின்வருவன அடங்கும் :
-
பரிசோதனைக்குரிய பொருளின் முதன்மையான அடிப்படை சூட்சும கூறு (அதாவது ஸத்வ, ரஜ, தம கூறுகள்).
-
சூட்சும பரிமாணம் அல்லது சூட்சும உலகில் இருந்து நல்ல மற்றும் தீய சக்திகளின் தாக்கம்
-
பரிசோதனைக்குரிய பொருளில் உள்ள தெய்வீக அல்லது தீய சக்திகளை வசீகரிக்கும் அல்லது வெளியிடும் திறன் போன்றவை.
இந்த அம்சங்கள் எந்தவொரு கலாச்சார தாக்கத்திற்கும் அல்லது கலாச்சார சார்புக்கும் அப்பாற்பட்டவை. இதைப் பற்றி அறிந்து கொள்ள மூன்று சூட்சும அடிப்படைக் கூறுகள் பற்றிய கட்டுரையைப் படிக்கவும்.
ஒரு மெழுகுவர்த்தியின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம், நாம் அதை உணர எந்த ஊடகத்தைப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து நமது கண்ணோட்டம் மாறுவதை நாம் உணரலாம்.
4. சூட்சும பரிமாணத்தைப் பற்றி தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்?
மனிதகுலத்தில் பெரும்பாலோர் அறியாத, நமது ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு பரந்த சூட்சும மற்றும் தொட்டுணர முடியாத உலகம் உள்ளது. இது, சூட்சும உலகம், சூட்சும பரிமாணம், மூதாதையர் உலகம், ஆன்மீக உலகம் அல்லது ஆன்மீக பரிமாணம் என்றும் அழைக்கப்படுகிறது. இது தேவதைகள், பேய்கள், சுவர்க்கம், நரகம் போன்ற உலகத்தை உள்ளடக்கியது. நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கும் உறுதியான அல்லது அறியப்பட்ட உலகமான சூட்சும மற்றும் தொட்டுணரக்கூடிய உலகத்துடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியது. உண்மையில் சூட்சும உலகத்துடன் ஒப்பிடும் போது அறியப்பட்ட உலகின் அளவு முடிவிலிக்கு ஒன்று என்ற விகிதத்தில் உள்ளது.
நம் வாழ்க்கையை இந்த சூட்சும உலகம் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பெரிதும் பாதிக்கின்றது. நம் வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகள் மற்றும் சிரமங்களுக்கான காரணம் இந்த சூட்சும உலகின் தீங்கு விளைவிக்கும் பாதிப்பினாலேயே ஆகும். நமது அறியாமை மற்றும் சூட்சும உலகத்தை உணர்ந்து, செல்வாக்கு செலுத்த இயலாமை, ஆகியவை அதன் பாதிப்பிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியாமல் ஆக்குகின்றன. இது நம் வாழ்க்கையை ஆன்மீக ரீதியில் மேம்படுத்துவதற்கான வாய்ப்பையும் இழக்க செய்கிறது. சூட்சும உலகம் நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் மற்றும் படிகளையும் பாதிக்கிறது என்பதால், அதைப் பற்றிய அறிவு சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது, இது மகிழ்ச்சி, மனநிறைவு, வெற்றி போன்றவற்றை மேம்படுத்தவும் அதன் பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் உதவும்.
5. சூட்சும பரிசோதனையில் பங்கேற்பது எப்படி நமக்கு உதவுகிறது?
சூட்சும பரிசோதனையில் பங்கேற்பதன் மூலம் :
-
சூட்சும பரிமாணத்தின் இருப்பைப் பற்றிய முதல் அனுபவத்தை நாம் பெறுகிறோம். நமது ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்று உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறோம்.
-
சூட்சும பரிமாணத்தை உணரும் நமது திறனைப் பற்றிய ஒரு யோசனையைப் பெறுகிறோம்.
-
நமது ஆறாவது அறிவைப் பயன்படுத்த நம்மை நாமே பயிற்றுவிக்கிறோம்.
-
நாம் சூட்சும பரிமாணத்தைப் பற்றி மேலும் மேலும் அறிய ஆரம்பிக்கிறோம்.
-
நாம் ஆன்மீக பயிற்சியைத் தொடங்கியிருந்தால், நமது முன்னேற்றத்தை சரிபார்க்க இந்த சோதனைகளை அளவீடுகளாகப் பயன்படுத்தலாம். ஆன்மீக பயிற்சியின் விளைவில் ஒன்று நமது ஆறாவது அறிவை செயல்படுத்துவதாகும். ஆன்மீக வளர்ச்சி அல்லது ஆன்மீக நிலை எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு சூட்சும பரிமாணத்தை உணரும் திறன் அதிகமாகும்.
6. சூட்சும பரிசோதனையை எப்படி நடத்துவது?
நாம், பஞ்ச இந்த்ரியங்களான பார்வை, செவிப்புலன், சுவை, தொடுதல் மற்றும் வாசனை நமது மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் உதவியுடன் உலகை உணர பயிற்சி பெற்றுள்ளோம். மனிதர்கள், சூழ்நிலைகள் மற்றும் விஷயங்களை பற்றி நாம் உணரும் வடிப்பான்கள் பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டவை. பின்வருவன அவற்றில் அடங்கும் :
-
கலாச்சார இயல்பு
-
கடந்த கால அனுபவங்கள்
-
வாழ்க்கையின் நிலை, உதாரணமாக, ஒரு சூழ்நிலையை ஒரு நபர் தாய் ஸ்தானத்திலிருந்து பார்க்கும் விதம், இளம் வயதினராக அவர் அதைப் பார்த்தவிதத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கும்.
நமது சிந்தனை மற்றும் முடிவுகளை பாதிக்கின்ற இந்த வடிகட்டுகள், இடம், நேரம் போன்றவற்றுடன் தொடர்புடையவை. மேலே உள்ள மெழுகுவர்த்தியின் எடுத்துக்காட்டில், பிரார்த்தனைக்கு கலாச்சார ரீதியாக மெழுகுவர்த்தியே உகந்தது என்று ஒருவர் தூண்டப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். நாம் அதிக விழிப்படைந்த ஆறாவது அறிவைப் பெற்றிருந்தால், மெழுகுவர்த்தியின் சூட்சும பார்வையில் இருந்து வெளிப்படையான இன்னும் பல காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்வோம். ஒரு விஷயத்தை மதிப்பீடு செய்ய நமது ஆறாவது அறிவைப் பயன்படுத்தும்போது, தவறுகளைச் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. இது எப்படி நிகழ்கிறது என்பதற்கு ஓரிரு உதாரணங்களைப் பார்ப்போம்.
எடுத்துக்காட்டு 1 :
தேவ் மற்றும் ஜான் இருவரும் சேர்ந்து ஒரு தொழிலில் ஈடுபடுவது பற்றி விவாதிக்கின்றனர். ஜானைப் பற்றி தேவ் அதிகமாக அறிந்திருக்கவில்லை. ஜானைப் பார்த்த நிமிடத்தில் அவர் ஒரு சிறந்த தொழில்வல்லுநர் மற்றும் விஷயங்களை நன்கு அறிந்தவர் என்றும் மேலும் தனது முயற்சிக்கு மிகவும் பக்க பலமாக இருப்பார் என்றும் தேவ் எண்ணுகிறார். இருப்பினும், தேவ், அவரது ஆறாவது அறிவை (இ.எஸ்.பி) செயல்படுத்தி, சத்வ, ரஜ மற்றும் தாமஸீக முக்கூறுகளில், ஜான் எந்த கூற்றின் ஆதிக்கமுடையவர் என கண்டறிந்து, அவர் தம குணமுடையவர் என உணர்ந்து இருந்தால், நல்ல காலத்தில் உதவும் ஜானின் தொழில் நிபுணத்துவம், பாதகமான காலத்தில் மிகவும் தாழ்ந்த நிலைக்கு தள்ளிவிடும் என்ற உண்மையை உணர்ந்து, ஜானின் மேலோட்டமான அம்சங்களான மென்மையான பேச்சு, அறிவாற்றல் போன்றவற்றால் ஈர்க்கப்படாமல் அவருடன் ஒப்பந்தம் செய்யாமல் தன்னை காத்துக்கொண்டிருப்பார்.
எடுத்துக்காட்டு 2 :
சேகர் தனது வருங்கால மனைவியான லதாவிற்கு அவருடைய காலமான முப்பாட்டி (பெரிய பாட்டி) அணிந்து இருந்த தனது குடும்ப பாரம்பரியமான தங்க அட்டிகையை(நெக்ல்ஸ்) கொடுக்கிறார். லதா மகிழ்வுடன் அதை தங்கள் அன்பின் அடையாளமாக அணிவதாக உறுதிமொழிகிறாள்.
சேகரின் முப்பாட்டி அட்டிகையின்(நெக்ல்ஸ்) மேல் மிகவும் பிரியமாக இருந்ததும் அதை இன்னும் ஆட்கொண்டிருக்கிறார் என்பதும் லதாவிற்கு தெரியாது. மேலும் அவர் லதாவை ஏற்கவுமில்லை. இதன் விளைவாக, அட்டிகையிலிருந்து வரும் கஷ்டம் தரும் அதிர்வலைகளால் லதா பாதிக்கப்படுகிறாள். தனது வாழ்வில் ஏற்படும் தொடர்ச்சியான பிரச்சனைகளுக்கு உண்மையில் அந்த அட்டிகை(நெக்ல்ஸ்) தான் காரணம் என்று அவளுக்குத் தெரியாது. லதாவின் ஆறாவது அறிவு (இ.எஸ்.பி) செயல்படுத்தப்பட்டிருந்தால், அட்டிகையின்(நெக்ல்ஸ்) கஷ்டம் தரும் அதிர்வலைகளை உடனடியாக உணர்ந்து அதை அணியாமல் இருந்திருக்க முடியும்.
அதே போல், நமது ஆறாவது அறிவை பற்றி அறிய ஒரு சூட்சும பரிசோதனையை செய்யும்போது, உடல், உளவியல் மற்றும் அறிவுசார் தாக்கங்களை நாம் புறக்கணிப்பது முக்கியம். அதற்கு பதிலாக அந்த பொருளில் இருந்து வெளிப்படும் சூட்சுமமான தெளிவாகத் தெரியாத அதிர்வலைகளை உணர முயற்சிக்க வேண்டும். ஒரு சூட்சும பரிசோதனையை மேற்கொள்வதில் பின்வரும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
-
நீங்கள் பிறந்த மதத்தின்படி கடவுளின் நாமத்தை ஜபிப்பது அல்லது உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். ஒருமுகத்தன்மை அடைய 2-3 நிமிடங்கள் இதைச் செய்யுங்கள்.
-
உங்கள் கவனத்தை அந்த பொருளின் மீது செலுத்தி, அந்த உருவம் அல்லது பொருள் தெளிவாக உணரமுடியாத நிலையில் சூட்சுமமாக உங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை கவனியுங்கள்.
-
பொருள் பற்றிய உங்கள் அளவீடுகள் மற்றும் உங்கள் அனுபவத்தில் கிடைத்த அனைத்து நுணுக்கங்களையும் கவனியுங்கள். உதாரணமாக, முதலில் ஒருவர் அமைதியின்மையை அனுபவிக்கலாம், இது தலையின் பின்பகுதியில் கஷ்டம் ஏற்படுத்தக்கூடிய ஒரு நுண்ணலை தலைவலிக்கு வழிவகுக்கலாம்.
-
உங்கள் அளவீடுகள் நேர்மறை, எதிர்மறை அல்லது நடுநிலையாக இருக்கலாம்.
-
மனதிற்கு உகந்த உணர்வு அல்லது அதிர்வலைகள் என்பது சுவாச ஓட்டத்தின் வேகம் குறைதல், மனதிற்கு உகந்த குளிர்ச்சி, இதமான உணர்வு, இனிமையான அழுத்தம், எண்ணங்கள் குறைதல், நாமஜபத்தின் தரம் அதிகரித்தல், அமைதி, மனநிறைவு அல்லது மகிழ்ச்சி,வெண்மையான ஒளி அல்லது மனத்திரையில் வெண்மையான ஒளியைப் பார்ப்பது போன்றவையாகும். குறிப்பிட்ட அனுபவம் எதுவாக இருந்தாலும், அடிப்படை உணர்வு மனதிற்கு உகந்ததாகவோ, நேர்மறையாகவோ இருக்க வேண்டும். இந்த அனுபவம் தொடர வேண்டும் என்ற உணர்வு ஏற்படவேண்டும்.
-
மனதிற்கு ஒவ்வாத உணர்வு என்பது சுவாசிப்பதில் சிரமம், தலைவலி, வலி, குமட்டல், கஷ்டம் தரும் குளிர்ச்சி, வெப்பம், இறுக்கம் அல்லது கஷ்டம் தரும் அழுத்தம், எதிர்மறை எண்ணங்கள், இருள் நிறைந்த மற்றும் கருப்பு நிறத்தில் பொருளைப் பார்ப்பது, விசித்திரமான அல்லது பயமுறுத்தும் உருவங்களைப் பார்ப்பது போன்றவை. இங்கே அடிப்படை உணர்வு மனதிற்கு ஒவ்வாதது அல்லது எதிர்மறையானது. அந்த அனுபவத்தைத் தொடர விரும்பாத உணர்வு.
-
நடுநிலை அனுபவம் படத்தைப் பார்க்கும்போது ஒருவரின் உணர்வில் எந்த மாற்றத்தையும் அனுபவிக்காமலிருப்பது.
-
7. சூட்சும பரிசோதனையில் எடுக்கப்பட்ட அளவீடுகளை பாதிக்கும் காரணிகள்
நமது ஆறாவது அறிவை அடிக்கடி சோதித்து அதன் மூலம் பகுத்தறியும் திறனை வளர்துக்கொள்ளும் வரை நமது அளவீடுகள் தவறாக இருக்கலாம். பின்வரும் காரணங்கள் ஒரு சூட்சும பரிசோதனையை மேற்கொள்ளும்போது நமது அளவீடுகளை பாதிக்கக்கூடும்.
-
சூட்சும பரிமாணத்தை உணரும் ஒருவரின் ஆறாவது அறிவு (இ.எஸ்.பி) திறன் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளது
-
ஒருவரின் ஆன்மீக நிலை
-
பரிசோதனையின் போது ஒருவரின் ஆன்மீக ஸ்திதி
-
பரிசோதனை நடத்தும் நபர் மீது தீய சக்திகளின் தாக்கம். உதாரணமாக, ஒருவரை ஆவி(பேய்) பிடித்து இருந்தால் அவர் அந்த பொருளைப் பார்க்கும் போது கஷ்டம் தரும் சக்தியை உணரலாம். ஒரு ஆவிக்கு எதிர்மறை அதிர்வலைகள் இனிமையானதாகவும், நேர்மறை அதிர்வலைகள் விரும்பத்தகாததாகவும் இருக்கும். ஆவி பிடித்தவரால் உண்மையில் அவருக்கு தோன்றும் எண்ணங்களும் உணர்வுகளும் உண்மையில் அவருடையதா அல்லது அவரை பிடித்த ஆவியினுடையதா என்பதை அறிந்து கொள்ள முடியாது. முறையான தொடர் ஆன்மீகப் பயிற்சியின் மூலம் மட்டுமே, அவர்கள் தங்கள் எண்ணங்களை ஆவிகளின் எண்ணங்களிலிருந்து வேறுபடுத்தி புரிந்துகொள்ள முடியும் என்பது கவனிக்கத்தக்கது. பிடித்திருக்கும் ஆவியின் சக்தியை பொறுத்து அதன் பிடியிலிருக்கும் நபரின் உணர்வை பிரிக்க அதிக நேரம் கூட எடுக்கலாம்.
-
ஒரு நபர் அல்லது பொருளின் மீதுள்ள மனோரீதியான பற்று சூட்சும அளவீட்டை எடுப்பதற்குரிய தெளிவை மழுங்கடித்து, அது சரியா தவறா என்பதைப் பொருட்படுத்தாமல் அந்த அளவீட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கண்களை மூடி பரிசோதனை செய்யும் போது அளவீடுகளை சரியாகப் பெறுகிறார்கள் என்பது அடிக்கடி கவனிக்கப்படுகிறது.அதே சமயம் கண்களை திறந்து செய்யும் போது தவறாக கணிக்கிறார்கள். இது நமது ஆறாவது அறிவின் அளவீட்டின் மேல் மனோரீதியான மற்றும் அறிவுசார்ந்த, தாக்கங்கள் கொண்டிருக்கும் சக்தியை காட்டுகிறது.
முதல் முயற்சியின் போது பரிசோதனையின் அளவீடுகளை சரியாகப் பெறவில்லை என்றால் சோர்ந்து போகாதீர்கள். காலப்போக்கில் முறையான ஆன்மீக பயிற்சியின் மூலம் உங்கள் ஆறாவது அறிவு வளர ஆரம்பிக்கும்.
‘உங்கள் ஆன்மீகப் பயணத்தைத் தொடங்குங்கள்’ என்ற கட்டுரையைப் படியுங்கள்.
8. விடை அல்லது பலனுணர்வு( அனுபூதி)
- குறைந்தளவு செயல்படுத்தப்பட்ட ஆறாவது அறிவு கொண்டவர் – அந்த சம்பந்தப்பட்ட நபர் அல்லது பொருளுடன் தொடர்புடைய சூட்சும சக்தி நேர்மறையானதா அல்லது எதிர்மறையானதா என்பதைக் கண்டறிய முடியும்.
- மத்யமமாக செயல்படுத்தப்பட்ட ஆறாவது அறிவு கொண்ட நபர் – அந்த சம்பந்தப்பட்ட நபர் அல்லது பொருளுடன் தொடர்புடைய அதிர்வலைகள், வண்ணங்கள், சக்தி வகைகளின் சூட்சும அம்சம் பற்றி கொஞ்சம் அதிகமாக உணர முடிகிறது.
- அதிகமாக செயல்படுத்தப்பட்ட ஆறாவது அறிவை உடைய நபர் – ஆற்றலின் வகை, ஆற்றலின் வலிமை, அந்த ஆற்றலை இணைக்கும் நேரக் காரணி போன்றவற்றின் பல்வேறு சூட்சும அம்சங்களைப் பற்றிய திட்டவட்டமான தகவலை வழங்க முடியும்.
ஒரு நபர் மேம்பட்ட ஆறாவது அறிவு (இ.எஸ்.பி) திறனைப் பெற்றிருந்தால், அவர் ஒரு விஷயத்தின் சூட்சும அம்சத்தைப் பற்றி மேலும் மேலும் பல விவரங்களைக் குறிப்பிட முடியும். பின்வரும் கட்டுரைகளில் கூடுதல் தகவல்களை வழங்கியுள்ளோம்
- நமது ஆறாவது அறிவை கொண்டுநம் மனதால் நாம் எவ்வளவு உணர முடியும்
- ஆன்மீக ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட வரைபடங்கள்
9. நமது ஆறாவது அறிவை (இ. எஸ். பி) எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
முந்தய பிறவியின் ஆன்மீக பயிற்சியின் காரணமாக ஒரு சிலருக்கு செயல்படுத்தப்பட்ட ஆறாவது அறிவுடன் பிறக்கும் பாக்கியம் இப்பிறவியில் கிடைக்கிறது. ஒருவருக்கு அந்த திறன் இருந்தால் அதை ஆன்மீக பயிற்சிக்கான ஒரு வழிமுறையாக பயன்படுத்துவதே மிகச்சிறந்தது. இது ஆன்மீக வளர்ச்சியின் இறுதி நிலையான கடவுளோடு ஒன்றிணைவதை எளிதாக்குகிறது.மேலும் ஆன்மீக வழியில் உயர்ந்த நிலையிலுள்ள குருவின் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே இதைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
உதாரணமாக, ஒரு சோபா(இருக்கை) வாங்கும்போது நமது ஆறாவது அறிவைப் பயன்படுத்தலாம். இதன் நோக்கம் நேர்மறையான அல்லது ஸத்வ குணம் மேலோங்கிய அதிர்வலைகளை வெளியிடும் ஒரு இருக்கையைப் பெறுவதே ஆகும். இது வீட்டில் ஆன்மீக ரீதியாக மிகவும் சாதகமான சூழ்நிலை ஏற்பட வழிவகுத்து, ஆன்மீக பயிற்சி செய்வதை எளிதாக்கும். பொதுவாக இருண்ட நிறத்தில் இருக்கும் சோபாக்கள், வெளிர் வண்ண இருக்கைகளுடன் ஒப்பிடும்போது கஷ்டம் தரும் அதிர்வலைகளை வெளியிடுகின்றன.
எனவே ஆறாவது அறிவைப் பயன்படுத்தி :
- ஒரு பொருளின் ஆற்றல் ஒருவரின் ஆன்மீக பயிற்சிக்கு உகந்ததா அல்லது
- பொருட்கள் வெளியிடும் தீயசக்திகளின் பாதகமான விளைவுகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலுமா என்பனவற்றை ஆன்மீக ரீதியில் தீர்மானிப்பது சரியான முயற்சிக்கு வழிவகுக்கும்
நாம் பல்வேறு உலகப் பிரச்சினைகளில் மக்களை வழிநடத்த தங்கள் ஆறாவது அறிவைப் பயன்படுத்தும் பல உளவியலாளர்களை காண்கிறோம். அவர்கள், ‘எனக்கு எப்போது வரன் கிடைக்கும்’ என்பது முதல் ‘இந்தத் தொழிலை நான் தொடங்கலாமா’ என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வார்கள். தூய்மையான ஆன்மீகக் கண்ணோட்டத்தில், ஆறாவது அறிவை முற்றிலும் உலக விஷயங்களுக்குப் பயன்படுத்தும்போது அது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
10. ஒரு உளவியலாளர் தனது ஆறாவது அறிவை(இ.எஸ்.பி)தவறாகப் பயன்படுத்தினால் என்ன நடக்கும்?
-
சூட்சுமத் திறனில் படிப்படியான சரிவு ஏற்பட்டு, அந்த நபர் காலப்போக்கில் தனது திறனை முழுவதுமாக இழக்க நேரிடும். இது பொதுவாக 30 வருட காலத்திற்குள் நடக்கும்.
-
உளவியலாளர் உயர்ந்த ஆன்மீக வலிமை கொண்ட சூட்சும மாந்த்ரீகர்களின் இலக்காகிறார். சூட்சும மாந்த்ரீகர்கள் ஆரம்பத்தில் எதிர்காலத்தைப் பற்றிய சில உண்மையான தகவல்களைத் தருகிறார்கள், இது அந்நபரின் நம்பிக்கையைப் பெற போதுமானது. இருப்பினும், அவர்கள் பின்னர் படிப்படியாக உளவியலாளர்களையும் அவர்கள் வழிநடத்தும் நபர்களையும் தவறாக வழிநடத்துகிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்களின் சூட்சும திறன் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் மற்றும் உண்மையில் சீராக மேம்பட்டதாகத் தோன்றலாம். ஆனால் இந்த சூட்சும திறன் அந்த நபரின் நற்பண்புகளால் அல்ல, அவரை கட்டுப்படுத்தும் சூட்சும மாந்த்ரீகர்களால் கிடைத்ததாகும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அரிய பொக்கிஷமான சூட்சும திறன் மோக்ஷத்தை அடைய உபயோகிக்கப்படாமல் தாழ்ந்த விஷயங்களில் வீணாகி விடுகிறது. காலப்போக்கில், உளவியலாளர்கள் பெரும்பாலும் சூட்சும மாந்த்ரீகர்களின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகின்றனர். பெரும்பாலான உளவியலாளர்கள் சூட்சும தேஹங்களுடன் தொடர்பில் உள்ளனர், அவை பலசமயங்களில் பதிலை வழங்கும்போது தவறாகவே வழிநடத்துகின்றன.
11. சூட்சும பரிசோதனைகளின் விபரம்
சூட்சும பரிசோதனைகளின் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.