ஒரு உறவின் இணக்கத்தன்மையை உண்மையில் தீர்மானிப்பது எது?

ஒரு உறவின் இணக்கத்தன்மையை உண்மையில் தீர்மானிப்பது எது?

1. உறவுகளின் இணக்கத்தன்மை எதனால் பாதிக்கிறது என்பதை பற்றிய ஒரு அறிமுகம்.

தோழமை, அன்பு, இணக்கத்தன்மை, பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை ஆகியவை அடிப்படையாகக் கொண்ட ஒரு உறவில் நீடித்து, அதில் முதுமை காலம் வரை இணைந்து இருப்பது பலரின்  கற்பனை அல்லது கனவாகவே இருக்கின்றது. இன்றைய உலகில் இப்படிப்பட்ட உறவு அமைவது ஒரு சவாலாக உள்ளது. சரியாக துவங்கும் பல உறவுகள் எப்படி முடிவடையும் அல்லது நீடிக்கும் என்பது பல காரணிகளைப் பொறுத்தது. அவற்றைப் புரிந்து கொள்வது, உறவுகளை பற்றிய ஒரு உட்பார்வையை நமக்கு வழங்கி ஏன் ஒரு சில உறவுகள் முறிந்து போகிறது மற்றும் நீடித்து இருக்கிறது என்பதை பற்றிய அறிவைப் பெற உதவுகின்றது.

இந்த கட்டுரையில், கணவன்/மனைவி, நண்பர் அல்லது சக ஊழியராக இருக்கும், இரண்டு நபர்களுக்கு இடையிலான எந்தவொரு உறவையும், பாதிக்கக்கூடிய பல்வேறு காரணிகளைப்  பகிர்ந்து உள்ளோம்.

2. உறவுகளில் இணக்கத்தன்மையை பாதிக்கும் முக்கிய காரணிகள்

மனநல நிபுணர் அல்லது இணையதளத்தின் வழி ஒருவர் உறவுகளுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் காரணங்களை பற்றி அறிய முற்பட்டால், புறஅழகு(வெளித்தோற்றம்) தவிர்த்து, பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, கவனிப்பு, ஒத்த ஆர்வங்கள், நகைச்சுவை உணர்வு போன்ற உளவியல் சார்ந்த முக்கியமான காரணிகளை பற்றிய பட்டியலே கிடைக்கும்.

எவ்வாறாயினும், வாழ்க்கையில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால் உள்ள அடிப்படை காரணிகளை ஆராய்வதற்கு அதைப்பற்றி முழுமையான தெளிவுடன் அதாவது ஆன்மீக அம்சங்களையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம், வாழ்க்கையில், உறவில் இணக்கத் தன்மையை பாதிக்கும் காரணிகளை உடல், உளவியல் (அறிவு சார்ந்த நிலையை உள்ளடக்கியது) மற்றும் ஆன்மீகம் ஆகிய 3 வகைகளாக வகைப்படுத்தலாம் என்று கண்டறிந்துள்ளோம். கீழேயுள்ள விளக்கப்படத்தில், இந்த ஒவ்வொரு அம்சமும் ஒரு நபரின் உறவில் ஏற்படுத்தும் தோராயமான பாதிப்பை பற்றி குறிப்பிடுகிறது.

இந்த ஞானம், மேம்பட்ட ஆறாவது அறிவின் அடிப்படையில் ஆன்மீக ஆராய்ச்சி மூலம் பெறப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தின் மூலம் இருவரது வாழ்க்கையில் உள்ள உறவின் தரத்தை நிர்ணையிப்பதில் ஆன்மீகக் காரணிகள் எந்த அளவு முக்கிய பங்காற்றுகின்றன என்பது புலனாகிறது.

3. உறவுகளின் இணக்கத்தன்மையை பாதிக்கும் முக்கிய காரணிகளின் பாகுபாடு

நம்மையும் நம் உறவுகளையும் இந்தளவு (81%) பாதிக்கும் ஆன்மீகக் காரணிகள்  எவை?

கீழே உள்ள அட்டவணையில், உறவுகளின் இணக்கத்தன்மையை பாதிக்கும் பல்வேறு துணை-காரணிகளைப் பற்றி விரிவுபடுத்தியுள்ளோம். உறவால் இணைந்த தம்பதிகள் அல்லது நபர்கள் கடவுளின் ஸாதகர்களா, இல்லையா என்பதைப் பொறுத்து காரணிகளைப் பிரித்துள்ளோம், என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவரின் ஆன்மீக பயிற்சியைப் பொறுத்து ஆன்மீகக் காரணிகளும் மாறும் என்பதால் இவ்வாறு பிரித்து வைத்துள்ளோம்.

உறவுகளை பாதிக்கும் காரணிகளின் பாகுபாடு

பராத்பர் குரு டாக்டர் அடவலே அவர்களின் வழிகாட்டுதலின் படி எஸ்.எஸ்.ஆர்.எஃப் நடத்திய ஆன்மீக ஆராய்ச்சியின் அடிப்படையில்

உறவில் இணக்கத்தன்மையை பாதிக்கும் காரணிகள் ஸாதகர்கள் ஸாதகர்  அல்லாதவர்
உடல்ரீதியாக1 5% 5%
மனோரீதியாக 10% 10%
விருப்பு மற்றும் வெறுப்பு 2% 2%
மனோநிலை பண்புகள் 2% 2%
ஆளுமை குறைபாடுகள் 2% 2%
அகம்பாவம் 2 4% 4%
அறிவு சார்ந்த நிலையில்  4% 4%
ஆன்மீகரீதியாக 81% 81%
ஆன்மீக நிலையில்  வேறுபாடு 4% 0%
ஆன்மீக பயிற்சியின் வழிமுறை 10% 0%
ஒருவர் தனிப்பட்ட ஆன்மீக பயிற்சியிலும்  மற்றவர் சமுதாயத்திற்கான ஆன்மீக பயிற்சியிலும் கவனம் செலுத்துதல் 8% 0%
ஆன்மீக வளர்ச்சியில் ஆர்வம் 2% 0%
தீய சக்திகளின் தாக்குதல் 8% 4%
மறைந்த முன்னோர்கள் (மறுமையில் உள்ளோர்) 8% 8%
விதி மற்றும் கொடுக்கல் வாங்கல் கணக்கு 30% 50%
இதர (இடம், பிராந்தியம், முதலியன) 11% 19%
மொத்தம் 100% 100%

அடிக்குறிப்புகள் (மேலே உள்ள அட்டவணையில் சிவப்பு நிறத்தில் உள்ள எண்களின் அடிப்படையில்):

  1. ‘உடல்’ என்பது தம்பதியர்/நபர்களின் உடல் தோற்றத்தை மட்டுமின்றி உடல்ரீதியான மற்ற பிரச்சனைகளான தம்பதியரை பிரிக்கும் தூரம், நோய்கள், தாம்பத்தியத்தில் உள்ள வேறுபாடுகள் மற்றும் விருப்பம் போன்றவைகளும் இணக்கத்தைப் பாதிக்கின்றது.
  2. அகம்பாவத்தின் பங்கு 4% ஆக மட்டுமே தோன்றினாலும், வேறுபாட்டிற்கான பல காரணங்கள் உண்மையில் அகம்பாவத்தின் வெளிப்பாடுகளே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கவனிக்கப்பட வேண்டிய சில முக்கிய குறிப்புகள்

  • ஒரு திருமணம் வெற்றிகரமானதாகவோ அல்லது மாறாகவோ இருப்பதற்கான காரணங்கள் மேலே உள்ள அட்டவணையின் மூலம் தெளிவாகப் புரிகிறது. இதன் படி, இருவருக்கிடையேயான இணக்கமான உறவிற்கு முதன்மையான  காரணியாக நம் ஐந்து புலன்கள், மனம் மற்றும் புத்தியால் புரிந்துகொள்ள முடியாத அதாவது ஆன்மீகக் காரணிகளான, குறிப்பாக அவர்களுக்கிடையேயான கொடுக்கல் வாங்கல் கணக்கே காரணம் என அறியலாம்.
  • உடல் தோற்றம் மற்றும் உளவியல் ரீதியாக நல்ல பொருத்தம் ஆகியன இருவருக்குமிடையே உள்ள இணக்கத் தன்மைக்கு 15% மட்டுமே காரணமாகும்.
  • இருவரும் ஆன்மீகத்தை கடைப்பிடிப்பவர்களாக இருந்தாலும், அவர்களின் ஆன்மீக நிலைகளில் பெரிய வேறுபாடுகள் இருப்பின் அது அவர்களது உறவை பாதிக்கலாம். ஏனென்றால், ஒருவரது கண்ணோட்டம் ஆன்மீக ரீதியாக வளரும் போது அவர் மேலும் விரிவடைந்து பரந்த மனப்பான்மையுடையவர் ஆகிறார். இதனால் அவ்விரு ஸாதகர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உருவாக்கலாம்.
  • இருவரின் ஆன்மீக பாதையும் அவர்களின் இணக்கத்தன்மையையும் பாதிக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒருவர் பக்தி மார்க்கத்தை விரும்புபவராகவும், மற்றவர் தியானப் பாதையில் அதிக நாட்டம் கொண்டவராகவும் இருந்தால், அது அவர்களின் ஆன்மீக பயிற்சி மற்றும் பொதுவான வாழ்க்கையை எவ்வாறு அணுகுவது என்பதிலும் வேறுபாடுகளை உருவாக்கலாம்.
  • இருவரும் ஆன்மீக பயிற்சி செய்பவர்களாக இருந்தால், அவர்களின் வாழ்க்கையில் கொடுக்கல் வாங்கல் கணக்கின் சக்தி மற்றும் அவர்களின் பாதகமான விதியும் குறைக்கின்றது. உறவுகளின் சிக்கல்களுக்கு முக்கிய காரணமான ஆளுமை குறைபாடுகளைக் குறைப்பதில் தீவிரமாக பயிற்சி செய்யும் ஸாதகர்களுக்கிடையே காணப்படும் உறவுகளே சிறந்த உறவுகளாகும்.
  • தீய சக்திகள் மற்றும் மறைந்த முன்னோர்களால் உறவுகளில் மோசமான பாதிப்பு மற்றும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அவை மக்களின் வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இருவரில் யாரவது ஒருவர் தீய சக்திகளால் பீடிக்கப்பட்டு இருந்தால், அது அவர்களை தகாத முறையில் நடக்க வைக்க செய்யும். (பெரும்பாலும்  அது அவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது). இது அவர்களுடைய உறவில்  பெரும் (தாக்கத்தை) அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏனென்றால், பெரும்பாலான மக்கள் ஒருவரின், மோசமான நடத்தையின் ஆன்மீகக் காரணங்களைப் புரிந்து கொள்ளாமல் அவரையே குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் தீய சக்திகளே அவர்களை அவ்வாறு செய்ய தூண்டுகின்றன. மேலும், மூதாதையர் பிரச்சனைகள் என்றால் என்ன என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
  • ஒருவர் வசிக்கும் வீடு அல்லது இடம் கூட உறவுகளை பாதிக்கலாம். குறிப்பாக ஒருவரது வீடு மயானத்திற்கு அருகில் அமைந்திருக்கும் போது அல்லது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கல்லறையாக இருந்த இடத்தில் தற்போது வீடு கட்டப்பட்டிருந்தால், அந்த வாஸ்துவில் தீய சக்திகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். உங்கள் வீட்டை ஆன்மீக ரீதியில் எவ்வாறு சுத்தம் செய்வது என்ற கட்டுரையில் இந்த பிரச்சனைக்கு நாங்கள் பல்வேறு தீர்வுகளை வழங்கியுள்ளோம்.