நவீன அறிவியலுக்கும், ஆன்மீக அறிவியலுக்கும் உள்ள வேறுபாடுகள்

நவீன அறிவியலுக்கும், ஆன்மீக அறிவியலுக்கும் உள்ள வேறுபாடுகள்

1. நவீன அறிவியலுக்கும், ஆன்மீக அறிவியலுக்கும் உள்ள வேறுபாடுகள்

ஆய்வு முறைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை ஆராய்வதற்கு முன், நவீன அறிவியலுக்கும், ஆன்மீக அறிவியலுக்கும் உள்ள வேறுபாடுகளை முதலில் ஆராய்வோம்.

நவீன அறிவியலையும் ஆன்மீக அறிவியலையும் ஒப்பீடு செய்தல்

நவீன அறிவியல் ஆன்மீக அறிவியல்
1.எந்த ஊடகத்தின் மூலம் நாம் ஞானத்தைப் பெறுகிறோம்? நவீன அறிவியல் மூலம் பெறப்படும் அறிவு நமது புறத்திலுள்ள ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி மூலம் பெறப்படுகிறது. உதாரணமாக,  ஒரு புத்தகத்தை நமது பார்வை மற்றும் நமது அறிவாற்றலைப் பயன்படுத்தியே  படிக்கிறோம். நமது சூட்சும ஞானேந்த்ரியங்கள்   சூட்சும மனம் மற்றும் சூட்சும புத்தி மூலம் ஆன்மீக பரிமாணத்தில் ஞானம் பெறப்படுகிறது. (ஆன்மீக பரிமாணம் அல்லது  சூட்சும உலகத்தை உணரும் திறன் அதற்கு இணையான ஆன்மீக பயிற்சி மூலம் அதிகரிக்கிறது.)
2. அறிவியலின் கவனம் படைப்பைப் புரிந்துகொள்வது படைப்பாளியைப் புரிந்துகொள்வது
3. முழுமையானது/முழுமையற்றது மற்றும் உண்மை/உண்மையற்றது புதிய விஷயங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு உருவாக்கப்படுவதால் தொடர் மாற்றங்கள் நவீன அறிவியலில்  நிகழ்கிறது.எனவே தான்,புத்தகங்களின் பதிப்புகள் மேம்படுத்தப்பட்டும், உள்ளடகங்கள் மற்றும் அர்த்தம் திருத்தப்பட்டும் இருப்பது இன்றியமையாதது ஆகிறது. ஆன்மீகத்தின் வழி அறியப்படும் உண்மை முழுமையானது, நிலையானது மற்றும் காலத்திற்கும் அப்பாற்பட்டது. இந்த காரணத்திற்காகவே வேதங்கள் போன்ற புனித நூல்கள் மறுபதிப்புகளைக் கொண்டுள்ளன, ஆனால் திருத்தப்படுவதில்லை2. ஆன்மீக ஆராய்ச்சியின் கோட்பாடுகள்

பின்வருபவை ஆன்மீக ஆராய்ச்சியின் கோட்பாடுகள். அவை ஒவ்வொன்றையும் கீழே விரிவாக விளக்கியுள்ளோம்:

1. மரபு சாரா அளவீடு மற்றும் பரிசீலனை(ஆய்வு) கருவிகளைப் பயன்படுத்த முடியாது

2. ஆறாவது அறிவு அல்லது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு (ESP) மூலம் நடத்தப்படுகிறது

3.ஆன்மீக பரிமாணமானது ஸ்தூல உலகத்தைப் போலவே முறையானது மற்றும்  தர்க்கரீதியானது

4. விச்வமனம் மற்றும் விச்வபுத்திலிருந்து ஆயத்த வடிவத்தில் பெறப்பட்ட ஞானம்

5. ஆன்மீக ஆராய்ச்சி நேரத்தையோ இடத்தையோ சார்ந்து இருப்பதில்லை

6. உன்னத ஆன்மீக நிலையில் இருப்பவரின் வழிகாட்டுதலின் கீழ் இருக்க வேண்டும்

2.1 மரபு சாரா அளவீடு மற்றும் பரிசீலனை(ஆய்வு) கருவிகளைப் பயன்படுத்த முடியாது

 ஒருவர் சூட்சும உலகத்தை ஆய்வு செய்ய விரும்பினால், மரபு சாரா அளவீடு மற்றும் பரிசீலனை(ஆய்வு) கருவிகளைப்  பயன்படுத்த முடியாது. ஒருவரின் அறிவுத்திறனை அளவிடுவதற்கு அளவுநாடாவைப் பயன்படுத்துவதைப் போல, ஆன்மீக உலகத்தைப் புரிந்துகொள்ள அல்லது ஆராய ஸ்தூல, மனோரீதியான அல்லது அறிவு சார்ந்த முறைகளைப் பயன்படுத்த முடியாது. இந்த எளிய காரணம் என்னவென்றால், வரையறையின்படி ஆன்மீக பரிமாணம் என்பது ஐந்து புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் புரிதலுக்கு அப்பாற்பட்டது.

2.2 ஆறாவது அறிவு அல்லது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு (ESP) மூலம் நடத்தப்படுகிறது

 ஆன்மீக ஆராய்ச்சியை மேம்பட்ட  ஆறாவது அறிவின்  மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும்.

ஐம்புலன்கள் (கண், காது, மூக்கு, தோல் மற்றும் நாக்கு), மனம் மற்றும் புத்தியின் மூலம் அறிவைப் பெறுவது நமக்குத் தெரிந்த ஒன்று.இதுவே நவீன அறிவியலில் நாம் மேற்கொள்ளும் பாரம்பரிய ஆராய்ச்சிக்கு முதன்மை காரணமாக விளங்குகிறது. இருப்பினும், ஆன்மீக பரிமாணத்தில் சுமார் 2% மட்டுமே ஐம்புலன்கள் (கண்கள், காதுகள், மூக்கு, தோல் மற்றும் நாக்கு), மனம் மற்றும் புத்தி ஆகியவற்றால் அறியப்படுகிறது. ஆனால் 98% அறிவை நமது சூட்சும ஞானேந்த்ரியங்கள் கொண்டு உணர முடியும். பொதுவாக நமது சூட்சும புலன்கள்  மேம்பட்ட ஆறாவது அறிவு அல்லது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட அறிவு என்று அழைக்கப்படுகிறது. ஆன்மீக ஆராய்ச்சியை இந்த மேம்பட்ட ஆறாவது அறிவின் உதவியோடு மட்டுமே நடத்த முடியும். ஆன்மீகத்தை உள்ளடக்கிய அனைத்து  உலகத்தை அனுபவிக்க, நாம் நமது சூட்சும ஞானேந்த்ரியங்கள்,சூட்சும மனம் மற்றும் சூட்சும புத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும்

எவற்றை ஆன்மீக ஆராய்ச்சியாக கருதப்படக்கூடாது:

பின்வருவனவற்றிலிருந்து ஆன்மீக ஆராய்ச்சியாக இவை ஏன் கருதப்படுவதில்லை  என்பதை  உங்களால் உணர முடியும்:

  • கரிமக் கால(கார்பன் டேட்டிங்) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரு மதக் கலைப்பொருளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முயற்சித்தல்.
  • நவீன அறிவியல் ஆராய்ச்சி முறைகள் மூலம் மத நடைமுறை மற்றும் சில சமூகவியல் அல்லது மனோரீதியான மாற்றங்களுக்கு இடையே உள்ள தொடர்பை கண்டறிதல்.
  • மேம்பட்ட தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் ஒரு இடத்தில் அமானுஷ்ய நிகழ்வுகள் ஏற்படுகிறதா என்பதைச் சரிபார்க்க முயற்சி செய்வது

இந்த எல்லா நிகழ்வுகளும், ஆன்மீக உலகத்தை நவீன அறிவியல் மூலம் ஒருவர் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார் என்பதை காட்டுகிறது. ஆராய்ச்சி என்று அறியப்படும் இதுபோன்ற நிகழ்வுகள் ஒருபோதும் ஆன்மீக ஆராய்ச்சி ஆகாது. ஆய்வின்(பரிசீலனை) துல்லியம்  மற்றும் செயல்திறனில் சமரசம் ஏற்படுவதால்  நவீன அறிவியல் மூலம் ஆன்மீக உலகத்தை  அளவீடு செய்து, புரிந்து கொள்ளும் திறன் மிகவும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

2.3 ஆன்மீக பரிமாணமானது ஸ்தூல உலகத்தைப் போலவே முறையானது மற்றும் தர்க்கரீதியானது

 உதாரணமாக, நவீன விஞ்ஞானத்தின் மூலம் மஞ்சள் காமாலைக்கான காரணத்தை ஆராய்ந்தபோது, ​​முதலில் தொற்றின் மூலம் இது உண்டாகிறது என்ற முடிவு செய்தார்கள், மேலும் தொடர்ந்து ஆராய்ந்தபோது ஹெபடைடிஸ் வைரஸ் கிருமியால் தொற்று ஏற்பட்டு உள்ளது என்று தெரியவந்தது. மேலும், ஹெபடைடிஸ் ஏ, ஹெபடைடிஸ் பி போன்ற பல்வேறு வகையான ஹெபடைடிஸ் வைரஸ்கள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இந்த வழியில், நோய்கள் மற்றும் பிரச்சனைகளுக்கான காரணங்கள் பற்றிய நுணுக்கமான பகுப்பாய்வு ஆராயப்படுகிறது. ஆனால் தீர்க்கமான மற்றும் ஆழமான காரணங்கள் ஆன்மீக சாஸ்திரத்தின் மூலமே அதாவது ஆன்மீக ஆராய்ச்சி மூலம் மட்டுமே அறியப்படுகின்றன.

நமது ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம், ஒரு பிரச்சனையின் மூல காரணம் உடல்ரீதியாக(ஸ்தூல), மனோரீதியாக  அல்லது ஆன்மீக உலகத்தை சார்ந்து உள்ளது என்று கண்டறிந்துள்ளோம். நம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளில் 80% ஆன்மீக ரீதியானதாகும். ஓர் இடர்பாடு அல்லது பெருவிபத்து நிகழ்வதைப் பார்க்கும் போது, ​​’அது கடவுளின் சித்தம்’ என்ற சொற்றொடரை அடிக்கடி கேட்கிறோம். எவ்வாறாயினும், இயற்கை பேரழிவுகள் அல்லது விமான விபத்துக்கள் போன்ற  பெருவிபத்துப் பின்னால் உள்ள முதன்மையான மூலக் காரணம் ஆன்மீக ரீதியானது,  ஆனால் நாம் நமது அறியாமையால் இது  ‘கடவுளின் சித்தம்’ என்று கூறுகிறோம்.  ‘வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களுக்கான ஆன்மீக மூலக் காரணங்கள்’ என்ற கட்டுரையில் இந்த ஆன்மீகக் காரணங்களை பற்றி விரிவரித்துள்ளோம்.

2.4 விச்வபுத்தி மற்றும் விச்வமனம் மூலம் ஆயத்த வடிவத்தில் பெறப்பட்ட ஞானம்

மிகவும் புத்திசாலியான ஓருவரின் அறிவுக்கு வரம்புகள் உள்ளன. ஆனால் எங்கும் நிறைந்தவர், சர்வ வியாபியான இறைவன் எல்லாம் அறிந்தவர், ஆவார். இதனால் தான் எந்தவொரு வாழ்க்கை நிலையில் இருந்தாலும், எந்தவொரு  நாட்டினராக இருந்தாலும், சிந்தனை அல்லது பரிசீலனை தடங்கல் அல்லது பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது பிரார்த்தனை செய்த பிறகு உத்வேகத்தை அனுபவிக்கிறார்கள். பிரார்த்தனைக்குப் பின் ஆபத்தான அல்லது உயிரிழக்கும் விபத்திலிருந்து அதிசயமாக காப்பாற்றப்பட்டதை பலர் அனுபவித்திருக்கிறார்கள். விச்வபுத்தி மற்றும் விச்வமனம் என்பது சர்வ வியாபியான இறைவனின் புத்தி மற்றும் மனம் ஆகும். ஒரு குறிப்பிட்ட நிலைக்கு பிறகு ஆன்மீக பயிற்சியின் மூலம் ஒருவர் தனது ஆறாவது அறிவை (ESP) வளர்த்துக் கொள்கிறார். இதன் மூலம் விச்வபுத்தி மற்றும் விச்வமனத்துடன் கட்டுப்பாடற்ற அணுகலைப் பெற முடியும்.

இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து ஞானமும் விச்வபுத்தி மற்றும் விச்வமனத்திலிருந்து  பெறப்பட்டது அல்லது சரிபார்க்கப்பட்டது.

2.5 ஆன்மீக ஆராய்ச்சி நேரத்தையோ இடத்தையோ சார்ந்தது அல்ல

விச்வபுத்தி மற்றும் விச்வமனத்திலிருந்து ஞானம் பெறப்படுவதால், ஆராய்ச்சி செய்ய எந்த இடத்திற்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும் இது ஒரு நிகழ்வின் நேரத்தை சார்ந்து இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட நிகழ்வு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்ததா அல்லது எதிர்காலத்தில் நடக்குமா, சம்பவத்தின் தன்மை மற்றும் அதன் பங்களிப்பு காரணிகளையும் கண்டறிய முடியும்.

இதனாலேயே நாஸ்ட்ராடாமஸின் ஆன்மீக வாழ்க்கை பற்றிய ஆன்மீக ஆய்வு போன்ற கட்டுரைகளை எங்களால் வெளியிட முடிந்தது. இத்தகைய கட்டுரைகள், நிகழ்காலத்தை அல்லது இடத்தை சாராது                                                               தனித்துவமான தகவல்களைத் தருகின்றன

2.6 உன்னத ஆன்மீக நிலையில் இருப்பவரின் வழிகாட்டுதலின் கீழ் இருக்க வேண்டும்

ஆன்மீக ஆராய்ச்சியில் மிக முக்கியமானது என்னவென்றால், எந்தவொரு ஆன்மீக ஆராய்ச்சி குழுவும் உன்னத ஆன்மீக நிலையில் இருக்கும் மகான் அல்லது ஒரு குருவால் வழிநடத்தப்பட வேண்டும்.

0-100 என்ற அளவில்,இறைவனோடு இரண்டற இணையும் ஆன்மீக நிலை(எந்தவொரு ஆன்மீகப் பாதையிலும் இறுதியானது) 100% என்று வைத்துக் கொண்டால், இன்றைய கலியுகத்தில் சராசரி மனிதனின் ஆன்மீக நிலை 20%-25% தான்.ஆன்மீக பயிற்சியின் மூலம் ஒருவர் 70% க்கு மேல் ஆன்மீக நிலையை அடைந்தால் மட்டுமே, அவர் ஆன்மீக வழிகாட்டி அல்லது மகான் என்று அழைக்கப்பட முடியும்.இந்த உன்னத நிலை அடைந்தவர்களால் மட்டுமே விச்வபுத்தி மற்றும் விச்வமனத்தை அணுக முடியும் ,மேலும் இவர்களை சூட்சும உடல்கள் அல்லது சக்திகளால் தவறாக வழிநடத்தப்படுவதில்லை என்பதில் உறுதியாக இருக்க முடியும். எளிமையாக கூறவேண்டுமென்றால், ஒரு மகான் உன்னத ஆன்மீக நிலை அடைவது என்பது ஆன்மீக வளர்ச்சியில் உயர் நிலைகளை அடைவது போன்றதாகும். இதற்கு இணையாக கூற வேண்டுமென்றால்,லௌகீக வாழ்வில் ஒரு குறிப்பிட்ட துறையில் நோபல் பரிசு பெற்றவருக்கு ஒப்பானதாகும்.