வீடியோ கேம்ஸினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் மற்றும் அதற்குரிய ஆன்மீக சிகிச்சைகள்

வீடியோ கேம்ஸினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் மற்றும் அதற்குரிய ஆன்மீக சிகிச்சைகள்

சுருக்கம்

வீடியோ கேம்களினால் ஸ்தூல மற்றும் மனோரீதியான நிலையில் (உடல் மற்றும் உளவியல் நிலையில்) ஏற்படும் நன்மை தீமைகள் பற்றிய ஆய்வுகள் இருந்தபோதிலும், அவற்றின் ஆன்மீக ரீதியிலான பாதிப்புகளை பற்றிய ஆய்வுகள் இன்றளவும் எதுவும் இல்லை. ஆன்மீக ஆய்வுகள், (மேம்பட்ட ஆறாவது அறிவுடன் கூடிய ஒளி மண்டலம் மற்றும் ஆற்றல் ஸ்கேனர்களைப் பயன்படுத்தி) ஒருவர் வீடியோ கேம்களை ஒரு மணிநேரம் விளையாடினாலும், அது அவரின் ஒளிமண்டலத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது என்பதை குறிக்கின்றது. பாதிப்பு(தாக்கம்) இல்லாத வீடியோ கேம்கள் என குழந்தைகள் மற்றும் பதிமூன்று வயதிற்கு உட்பட்டவர்கள் உபயோகப்படுத்தும் வீடியோ கேம்களும் ஆன்மீக ரீதியாக அவர்களை சீர்குலைக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. ஒரு நபர் வீடியோ கேம்களுக்கு அடிமையாகும்போது இந்த எதிர்மறை விளைவு அதிவேகமாகப் பெருகும். இந்த எதிர்மறையான ஆன்மீக அதிர்வலைகளின் நீண்டகால வெளிப்பாடு இறுதியில் ஸ்தூல மற்றும் மனோரீதியான (உடல் மற்றும் உளவியல்) நிலையில் எதிர்மறையான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கின்றது. இருப்பினும், விளையாடுபவர் (அல்லது அவரின் பெற்றோர்கள்) அதை அதீத வீடியோ கேமிங் பழக்கங்களுடன்(அடிமையாதல்)  இணைத்து பார்ப்பதில்லை. இந்த விளையாட்டில் ஒரு நபரின் ஈடுபாடு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆன்மீக ரீதியில் தீங்கு விளைவிக்கும். இந்த பொழுதுபோக்கின் பிடியில் இருந்து தன்னைப் பிரித்தெடுக்க கடவுளின் நாமஜபம் மற்றும் சுய ஆலோசனைகள் போன்ற ஆன்மீக தீர்வுகளைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது.

அட்டவணை

1. வீடியோ கேம்களினால் ஏற்படும் விளைவுகள்

9 நவம்பர் 2010 அன்று, ‘கால் ஆஃப் டூட்டி: பிளாக் ஆப்ஸ்எனப்படும் முதல்நபர் துப்பாக்கி சுடும் வீடியோ கேம் வெளியிடப்பட்டது.

Call of duty gaming addiction

ஒரு மாதத்திற்குப் பிறகு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் மூலம், இது 600 மில்லியனுக்கும் அதிகமான மணிநேரத்திற்கு  கூட்டாக (பலரால்  இணைந்து) விளையாடப்பட்டது, இது 68,000 ஆண்டுகளுக்கும் மேலான மனித நேரத்திற்கு சமமானதாகும்

சில வருடங்களாக வீடியோ கேம்கள் பெருமளவில் பிரபலமடைந்து, கலாசாரத்தின் முக்கிய அம்சமாக மாறியுள்ளன. பெற்றோர்களாகிய நாம் வீட்டிற்குள் நுழையும்போது குழந்தைகள் வன்முறையான வீடியோ கேம் விளையாடுவதைப் பார்த்திருக்கலாம். உதாரணமாக ஜோம்பி ஹன்டரில் ( Zombie Hunter) ஜோம்பிக்களை சுடுவது.

Zombie hunter gaming addiction

அந்த நேரத்தில், “ஜோம்பிக்களை சுட்டு விளையாடுவதன் மூலம் என் குழந்தை தனது நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்துகிறதாஅவர்களால் ஏன் நாம் குழந்தை பருவத்தில் இருந்ததைப் போல வெளியே சென்று விளையாட முடியாதா?” என்ற கேள்வி எழலாம். மேலும் நம்மில் பலர் வீடியோ கேம்களின் ஆபத்துகளைப் பற்றி கேள்விப்பட்டு, அவற்றை விளையாடும் நம் குழந்தைகளை எண்ணி கவலையடைகிறோம்.

இன்றைய காலகட்டத்தில் வீடியோ கேம்களின் இருப்பும் மற்றும் அவை மக்களின் நேரத்தை முழுவதும் ஆக்கிரமித்துள்ளதும் மிக தெளிவாகத் தெரிகிறது.

பெரும்பாலான பெற்றோர்களின் மனதில் குழந்தைகளை இவ்வாறு தொடர்ந்து வீடியோ கேம்களை விளையாட அனுமதிக்க வேண்டுமா? என்ற கேள்வி உள்ளது.

வீடியோ கேம்களை விளையாடுவது கண்கை ஒருங்கிணைப்பு, சிக்கலைத் தீர்க்கும் திறன் மற்றும் தகவல்களைச் செயலாக்கும் மூளையின் திறனை அதிகரிக்கிறது என்று சில ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனாலும் அளவிற்கு அதிகமான எந்த பழக்கமும் நாளடைவில் அடிமைத்தனமாகி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் கூட வீடியோ கேம் அடிமைத்தனத்தை மனநலக் கோளாறு என்று வகைப்படுத்தியது. இருப்பினும், ஆன்மீக நிலையில் வீடியோ கேம்களின் ஆன்மீக விளைவைப் பற்றி எந்த விவாதமும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த கட்டுரையில், வீடியோ கேம்கள் ஆன்மீக நிலையில் நம்மை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றிய எங்கள் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்துள்ளோம்.

2. வீடியோ கேம்களினால் ஏற்படும் ஆன்மீக விளைவு

பக்க விளைவுகளைப் பற்றி படிக்கும் போது, ​​நாம் பொதுவாக உடல் மற்றும் உளவியல் அம்சங்களை மட்டுமே கருத்தில் கொண்டு, ஆன்மீக நிலையில் ஏற்படும் தாக்கத்தை (பாதிப்பை) மறந்துவிடுகிறோம். எவ்வாறாயினும், எந்தவொரு செயலின் ஆன்மீக தாக்கமும் மிகவும் ஆழமான உட்பொருளைக் கொண்டிருப்பதை ஆன்மீக ஆராய்ச்சி காட்டுகிறது மற்றும் அதன் விளைவு இறுதியில் உடல் மற்றும் உளவியல் நிலையில் காணப்படுகிறது.

வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பற்றி, ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (எஸ்.எஸ்.ஆர்.எஃப்) மகரிஷி அத்யாத்மா விஸ்வவித்யாலயாவுடன் (மகரிஷி ஆன்மீக பல்கலைக்கழகம் அல்லது MAV என்றும் அழைக்கப்படுகிறது) இணைந்து ஆன்மீக ஆராய்ச்சியை நடத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள ஆன்மீக ஆராய்ச்சி குழு (2020 வரை) 39 வருட ஆன்மீக ஆராய்ச்சி அனுபவத்தைக் கொண்டுள்ளது. வீடியோ கேம்களினால் ஆன்மீக பக்க விளைவுகள் விளையும் என்று ஆன்மீக ஆராய்ச்சி காட்டுகிறது. வீடியோ கேம்களின் ஆன்மீக விளைவுகள் குறித்து ஆன்மீக ஆராய்ச்சி குழு நடத்திய ஒரு பைலட் ஆய்வு கீழே உள்ளது.

3. ஆராய்ச்சி ஆய்வுஒருவரின் ஒளிமண்டலத்தில்  வீடியோ கேம்களினால் ஏற்படும் எதிர்மறை விளைவு

இந்தியாவின் கோவாவில் உள்ள ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. யுனிவர்சல் ஆரா ஸ்கேனர் (யுஏஎஸ்) வீடியோ கேம்களை விளையாடிய பிறகு ஒரு நபரின் ஒளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தை ஆய்வு செய்ய பயன்படுத்தப்பட்டது.

3.1 வழி முறை

. சோதனையில் பங்கேற்ற ஸாதகர்களைப் பற்றி

  • ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தைச் சேர்ந்த 5 ஸாதகர்கள்  சோதனையில் பங்கேற்றனர்.
  • பங்கேற்ற ஸாதகர்கள் அனைவரும் ஆன்மீகத்தை வழக்கமாக கடைபிடித்தவர்கள், எனவே அவர்கள் சராசரி ஆன்மீக நிலையில் உள்ளவர்களை விட உயர்ந்த நிலையில் இருந்தவர்கள். மேலும், அவர்களின் ஆன்மீக பயிற்சியின் காரணமாக, அவர்களின் ஆறாவது அறிவு ஓரளவு விழிப்படைந்துள்ளது,அவர்களால் சூட்சும அதிர்வலைகளை உணர முடியும். அதன்படி, வீடியோ கேம்களை விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சூட்சும  அளவில் அவர்களால் கருத்து தெரிவிக்க முடிந்தது.

. பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் உபகரணம் (கருவி)

இச்சோதனையில் பங்கேற்ற ஸாதகர்களிடம் வீடியோ கேம்களை விளையாடியதால் ஏற்பட்ட விளைவை பகுப்பாய்வு செய்ய யுனிவர்சல் ஆரா ஸ்கேனர் (யுஏஎஸ்) பயன்படுத்தப்பட்டது. பங்கேற்பாளர்களிடம் பரிசோதனைக்கு முன்னும் பின்னும் யுஏஎஸ் ஸ்கேனரைப் பயன்படுத்தி அளவீடுகள் எடுக்கப்பட்டது.

முன்னாள் அணு விஞ்ஞானி டாக்டர் மன்னெம் மூர்த்தி அவர்களால் உருவாக்கப்பட்ட யுஏஎஸ் (UAS) என்ற கருவி, (நேர்மறை மற்றும் எதிர்மறை) சூட்சும ஆற்றலையும், (உயிருள்ளஉயிரற்ற பொருளை) சூழ்ந்திருக்கும் ஒளிமண்டலத்தையும் அளக்க உபயோகிக்கப்படுகிறது. யுஏஎஸ் (UAS) அளவீடுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன மற்றும் அதன் பொருள் என்ன என்பதைப் பற்றி மேலும் அறியயுஏஎஸ் அளவீடுகளின் முறை பற்றிய கட்டுரையைப் பார்க்கவும்.

3.2 யுஏஎஸ் அளவீடுகள்

 

கீழே உள்ள அட்டவணையில் 4 வகையான யுஎஎஸ் (UAS) அளவீடுகள் விவரிக்கப்பட்டுள்ள :

யுஏஎஸ் அளவீடுகளின் வகை விளக்கம்
IR மற்றும் UV தீயசக்தி அளவீடுகள் 2 வகைகளாகும். அவை IR (இன்ஃப்ராரெட்) மற்றும் UV ( அல்ட்ராவயலட்) என்று அழைக்கப்படுகின்றன. இன்ஃப்ராரெட் எதிர்மறை அதிர்வலைகளின் குறைந்த தன்மையையும், அல்ட்ராவயலட் அவற்றின் மிகவும் தீவிரமான தன்மையையும் குறிக்கிறது.
PA இது நேர்மறை ஒளிமண்டலத்தைக் குறிக்கிறது
MA இது குறிப்பிட்டவரிடம் அளவிடப்பட்ட  ‘மொத்த ஒளிமண்டலத்தின் அளவைகுறிக்கிறது.

ஆராய்ச்சிக் குழு இந்த கருவியை மிக விரிவாகப் பயன்படுத்தியுள்ளது, அதாவது 5 வருட காலத்தில் வெவ்வேறு பொருட்களின் மீது 10,000 அளவீடுகளை எடுத்துள்ளது. யுஏஎஸ் மிகவும் துல்லியமானது, இதை ஆறாவது அறிவின் (சூட்சும உணர் திறன்) மூலம் பெறப்பட்ட அளவீடுகள் உறுதிப்படுத்துகின்றது.

3.3 உண்மையான பரிசோதனை

ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஐந்து ஸாதகர்களை ஒரு மணி நேரம்முதல் துப்பாக்கி சுடும் (FPS) வீரர்என்ற வீடியோ கேமை விளையாட சொன்னோம். மேலும் வீடியோ கேமை விளையாடுவதற்கு முன்பும் பின்பும் ஒவ்வொருவரிடமும் யுஏஎஸ் கருவி மூலம் அளவீடுகள் எடுக்கப்பட்டது. வீடியோ கேம் விளையாடுவதனால் அவர்களின் ஒளிமண்டலத்தில் ஏற்படும் விளைவுகளை பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பரிசோதனையில்கண்டறியப்பட்ட முக்கிய விஷயங்கள்

  • அனைவரிடம் (ஐவரிடமும்) எதிர்மறையானது கணிசமாக அதிகரித்து காணப்பட்டது அல்லது அவர்களின் நேர்மறைத்தன்மை முற்றிலுமாக அழிந்துபோயிருந்தன.
  • இதுவரை எதிர்மறை ஒளிமண்டலமே இல்லாத இருவரிடம், அவை உருவாகியுள்ளது தென்பட்டது.
  • தீயசக்திகளால் கஷ்டப்படும் ஒரு ஸாதகரின், சூட்சும தீயசக்தி 72% அதிகரித்து காணப்பட்டது (இது வெறும் 1 மணிநேர விளையாட்டிற்குப் பிறகு).
  • ஒரு நபரின் ஒளிமண்டலத்தில் குறுகிய காலத்தில் ஏற்படும் இத்தகைய எதிர்மறை மாற்றங்கள் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இது உடல் மற்றும் உளவியல் நிலையில் பாதிப்பு எற்பட வழிவகுக்கிறது. இதன் பாதிப்புகள் உடனடியாகத் தெரியவில்லை எனினும், அவை சோம்பல், மந்தமான சிந்தனை, மனச்சோர்வு மற்றும் உணர்வுகளை கட்டுப்படுத்த இயலாமை, போன்றவற்றின் வளர்ச்சியை உள்ளடக்கியிருக்கலாம்.

3.4 குழந்தைகளிடம் வீடியோ கேம்களினால் ஏற்படும் எதிர்மறை விளைவு

ஒரு சிலர்முதல் துப்பாக்கி சுடும் (FPS) வீரர்” (ஃபர்ஸ்ட்பர்சன் ஷூட்டர்) வீடியோ கேம் மிகவும் வன்முறையானது எனவே எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியிருக்கும் என்று வாதிடலாம்.

இதனை மேலும் ஆராய்வதற்காக, குழுவானது 10 முதல் 12 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்களிடம் பைலட் ஆய்வை நடத்தியது, பொதுவாக இளைய குழந்தைகள் பயன்படுத்தும் வீடியோ கேம்களின் தாக்கத்தை ஆய்வு செய்தது.

Children's video games causing addiction

Children's video games causing addiction

 

ஒருவர்சூப்பர் மரியோ ரன்என்றும் மற்றவர்மினிமிலிஷியாஎன்றும் அழைக்கப்படும் சாமானிய விளையாட்டை விளையாடினர். இவை பொதுவாக குழந்தைகளின் விளையாட்டுகளாகும். இவை மிகவும் சாதாரணமானதாகவும் பாதிப்பில்லாததாகவும் தோன்றினாலும், FPS கேமால் ஏற்படுத்தக்கூடிய அதே அளவிலான எதிர்மறையான பாதிப்புகளைக் கொண்டிருப்பதையும் மற்றும் இதை விளையாடும் குழந்தைகளின் சூட்சும சக்தி மற்றும் ஒளிமண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதும் கண்டறியப்பட்டது.

3.5 வீடியோ கேம்களை விளையாடும் போது பங்கேற்பாளர்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்கள்

வீடியோ கேம்களை விளையாடிய அனைத்து ஸாதகர்களும் எதிர்மறையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பரிசோதனையின் முடிவுகள் காட்டுகின்றன.

இருப்பினும், ஸாதகர்கள் அனைவரும் சில ஆண்டுகளாக ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால், பரிசோதனைக்காக விளையாடும் போது சூட்சும அதிர்வலைகளை அவர்களால் ஓரளவுக்கு உணர முடிந்தது. அவர்கள் உணர்ந்த சில விளைவுகள் இங்கே:

  • மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற உணர்வுகள் அதிகரித்தன
  • மூர்க்கத்தன்மை அதிகரித்தது
  • பொறுமையின்மை அதிகரித்தது
  • கேமிங்கிற்குப் பிறகு மயக்கம், மந்த புத்தி மற்றும் சோம்பேறித்தனமாக உணர்தல்மேலும் அதை விட்டு மீண்டு வருவதற்கு நேரம் பிடித்தது
  • கடவுளைப் பற்றிய எண்ணங்கள் மற்றும் அனைத்து விதமான ஆன்மீகப்பயிற்சியிலிருந்தும் விடுபட்ட உணர்வு

ஒரு சராசரி நபரைப் பொறுத்தவரை, அதன் பாதிப்புகள் உடனடியாகத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் நீண்ட காலத்திற்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்தல் மற்றும், குறைந்த ஆற்றல் அளவுகளை கொண்டிருக்கும் நிலை ஏற்படலாம். FPS துப்பாக்கி சுடும் விளையாட்டுகள் மிகவும் வன்முறையானவையாதலால், விளையாடுபவருக்கு மிகவும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என சிலர் கூறலாம். ஆனால் குழந்தைகளின் விளையாட்டுகளும் ஸாதகர்களின் ஒளிமண்டலத்தில் அதே வகையான எதிர்மறையான விளைவுகளைக் காட்டியது. ஆன்மீக பரிமாணத்தைப் பற்றிய புரிதல் இல்லாததால் நவீன அறிவியலால் இந்த பாதிப்பை புரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும், ஆன்மீகக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, வீடியோ கேம்கள் மனதையும் புத்தியையும் சுற்றி ஒரு கருப்பு படலத்தை உருவாக்கி ஆன்மீகப்பயிற்சியில் ஈடுபடுவதைத் திசை திருப்பும் சக்தி வாய்ந்தது.

4. வீடியோ கேம் விளையாடும் நபர் மீது சூட்சும சக்திகளால் ஏற்படும் பாதிப்பு

சூட்சும அதிர்வலைகளின் உண்மையான அளவீடு மற்றும் பகுப்பாய்வு, ஆறாவது அறிவின் மூலமாக (சூட்சும உணர் திறன்) மட்டுமே உணர முடியும். நம்முடைய ஆன்மீக ஆராய்ச்சிக் குழுவில் உள்ள ஸாதகர்களால் பொதுமக்களிடம் இருந்து வெளிப்படும் அதிர்வலைகளை  உணர முடியும். அவற்றை வரைவதன் மூலம், அவை ஆன்மீக எக்ஸ்கதிர்களாக(எக்ஸ்ரே) செயல்படுகின்றன மற்றும் அத்தகைய ஊடகங்களின் உண்மையான தன்மை பற்றிய தெளிவையும் அளிக்கின்றன.

ஒரு சராசரி மனிதர் வீடியோ கேம் விளையாடும்போது சூட்சும நிலையில் என்ன நடக்கிறது என்பதைக் கீழே உள்ள படம் காட்டுகிறது.. இந்த நிகழ்வோடு தொடர்புடைய அனைத்து சூட்சும அதிர்வலைகளும் இதில் காட்டப்பட்டுள்ளன. இந்த படம்,முன்பு வீடியோ கேம்களை விளையாடி வந்த பரம் பூஜ்ய தேயன் க்லெஷ்சிச்(எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் மகான்) அவர்களால்  வரையப்பட்டது. ஆன்மீக பயிற்சியின் காரணமாக, வீடியோ கேம்களை விளையாடும்போது சூட்சும முறையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய நுண்ணறிவை அவரால் பெற முடிந்தது.

வீடியோ கேம்களை விளையாடுவதன் மூலம் ஒருவர் அதிக அளவு சூட்சும கஷ்டம் தரும் சக்தியை  உள்வாங்குவதை மேலே உள்ள சூட்சும வரைபடம் காட்டுகிறது. மாயை உருவாக்கும் இந்த சக்தியால் (மாயாவி ஆற்றல் என்றும் அழைக்கப்படுகிறது) விளையாடுபவர் பாதிக்கப்படுவது கவலைக்குரியது. ஏனெனில் இந்த வகையான சக்தியானது தான் செய்வது சரியானது மற்றும் நல்லது என்ற தவறான ஒரு உணர்வை(உண்மைக்கு புறம்பான) அளிக்கிறது. சராசரி நபரால் இந்த அதிர்வலைகளின் சூட்சும எதிர்மறை விளைவை உடனடியாக உணர முடியாது, ஆனால் எதிர்மறையான எண்ணங்கள், முயற்சியின்மை மற்றும் ஆவிகளால் பீடிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து போன்ற அறிகுறிகளின் வடிவத்தில் அவர்கள் காலப்போக்கில் நயவஞ்சகமாக பாதிக்கப்படுவார்கள்.

இந்த சூட்சும வரைபடத்தில் காட்டியுள்ளபடி, வீடியோ கேம்களை விளையாடுவதனால் ஏற்படும் மற்றொரு எதிர்மறையான விளைவு என்னவென்றால், இவற்றை விளையாடுவதன் மூலம் ஒருவர் கிரகிக்கும் கருப்பு சக்தியால், அவரின் அகம்பாவம் அதிகரிக்கிறது, இது ஆன்மீக பயிற்சியின் நோக்கத்திற்கு முற்றிலும் எதிரானது.

வீடியோ கேம் பழக்கம் (அடிமைத்தனம்) பற்றிய தெய்வீக ஞானத்தைப் பெறுதல்

பூஜ்ய தேயன் க்லெஷ்சிச் வீடியோ கேம்களை விளையாடியதன் வழியாக தான் பெற்ற தெய்வீக ஞானத்தை, ஆன்மீக அனுபவமாக விவரிக்கிறார்

“2013 செப்டம்பர் மாதம் எனது ஆன்மீக கஷ்டங்கள் அதிகரித்தது. நான் நீண்ட காலமாக வீடியோ கேம்களை விளையாடாமல் இருந்தபோதிலும் அவற்றை விளையாடும் ஆசை மீண்டும் வந்தது. ஓரிரு நாட்கள் விளையாடினேன். நான் உண்மையில் அந்த நேரத்தில் அவற்றை விளையாட விரும்பவில்லை, ஆனால் என் மீது எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று உணர்ந்தேன். இதிலிருந்து மீள வேண்டும் என்று எனக்குள் ஆழ்ந்த ஆர்வம் இருந்தது, எனவே வீடியோ கேம் அடிமைத்தனம் என்னை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். ஒரு சில நிமிடங்களில் நான் ஒரு உள் உணர்தலைப் பெற ஆரம்பித்தேன். மேலும் இவ்விளையாட்டுகளிலிருந்து என்ன வகையான சக்தி  வெளிப்படுகிறது, அவை எவ்வாறு உடலிலும் மனதிலும் உள்வாங்கப்படுகிறது என்பதை என்னால் உணர முடிந்தது.

மேலும், இந்த நேரத்தில் கடவுள் என் மனதிலுள்ள விருப்பு மற்றும் வெறுப்பு மையத்தில் வீடியோ கேம் விளையாடுவதை வெறுப்பாக மாற்றியதாக உணர்ந்தேன். இந்த தருணத்திலிருந்து, நான் விரும்புவதற்குப் பதிலாக, வீடியோ கேம்களை வெறுக்கத் தொடங்கினேன்.”

5. கேமிங் அடிமைத்தனத்தை போக்குவதற்குரிய சிகிச்சை

 வீடியோ கேம்கள் ஓய்வெடுக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் அல்லது மனதை திசைதிருப்பவதற்குமான ஒரு வழி என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அவை நம்மீது வைத்திருக்கும் ஈர்ப்பு மிகவும் உறுதியானது அதனாலேயே இதை நிறுத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது. இருப்பினும், நீங்கள் வாழ்க்கையில் எந்த நிலையில் இருந்தாலும், வீடியோ கேம்களை விளையாடுவது எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும் என்பதையே இந்த ஆய்வு காட்டுகிறது. எனவே, வீடியோ கேம்களில் செலவிடும் நேரத்தைக் குறைப்பது அவசியம். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் கேமிங்கில் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்து அவர்கள் நல்வழியில் செல்ல உதவ வேண்டும்.

வீடியோ கேம்களை விளையாடுவதற்கான ஆர்வத்தை சமாளிக்க சில ஆன்மீக தீர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: குறிப்பாக வீடியோ கேம்களுக்கு அடிமையாக இருக்கும் போது ஆன்மீக தீர்வுகளை இணைப்பது (எடுத்துக்கொள்வது) மிகவும் அவசியம். ஏனென்றால், பெரும்பாலான அடிமைத்தனங்கள் ஆன்மீக நடவடிக்கைகளால் மட்டுமே சரிசெய்யக் கூடிய ஆன்மீக கூறுகளைக் கொண்டுள்ளன.

5.1 வீடியோ கேம்களின் ஏற்படும் தீய விளைவுகளை நீக்கும் உதவும் நாமஜபங்கள்

பின்வரும் நாமஜபங்களில் ஏதேனும் ஒன்றை மீண்டும் மீண்டும் உச்சரிக்கவும்.

||ஓம் ஓம் ஸ்ரீ வாயுதேவாய நமஹ ஓம் ஓம்||

||ஓம் ஓம் ஸ்ரீ ஆகாச தேவாய நமஹ ஓம் ஓம்||

விளையாடுவதற்கான உந்துதல் எவ்வளவு வலிமையானது என்பதைப் பொறுத்து ஒருவர் தினமும் 3 மணி நேரம் வரை நாமஜபம் செய்ய வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்து ஒருமுகப்படுத்த்தி நாமஜபம் செய்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம். ஒருவரின் வசதிகேற்ப 3 மணி நேர கால அளவை, சிறு, சிறு கால அளவாக பிரித்துக்கொள்ளலாம்.

5.2 சுய ஆலோசனைகள் – கேமிங் அடிமைத்தனத்திற்கு ஒரு சிறந்த சிகிச்சை

சுய ஆலோசனைகள் (AS) ஆழ் மனதில் உள்ள பதிவுகளை சமாளிக்க உதவுகின்றன. எனவே, சுய ஆலோசனைகள் எடுப்பதன் மூலம் வீடியோ கேம்களை விளையாட வேண்டும் என்ற எண்ணங்கள் குறைகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு சுய ஆலோசனைகளுள் உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

சுய ஆலோசனை 1: எப்போதெல்லாம் நான் வீடியோ கேம்களை விளையாட விருப்பம் கொள்கின்றேனோ அப்போதெல்லாம் சில மன அழுத்தத்தின் காரணமாக இந்த கவனச்சிதறலைத் தேடுகிறேன் என்பதை உணர்ந்து. அதை அடையாளம் கண்டு, அதற்கு பக்குவமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் தீர்வு காண உதவியை நாடுவேன்.

சுய ஆலோசனை 2: எப்போதெல்லாம் நான் வீடியோ கேம்களை விளையாட விருப்பம் கொள்கின்றேனோ அப்போதெல்லாம் அவ்வாறு செய்வது எனது மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை உணர்ந்து அந்த நேரத்தில் நான் கடவுளின் நாமஜபம் / வீட்டை சுத்தம் செய்தல் / வேலைக்கான அடுத்த திட்டமிடுதல் / குழந்தையுடன் நேரத்தை செலவிடல் / படிப்பை முடித்தல் போன்றவற்றில் எனது கவனத்தை செலுத்துவேன்.

6. முடிவுரை

வீடியோ கேம்களும் வேறு எந்த வகையான பொழுதுபோக்கையும் போன்றதேயாகும். ஆனால் அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் மற்றும் எந்த வகையான நோக்கத்தோடு அதில் நாம் ஈடுபடுகிறோம் என்பதை பொறுத்து அவை நம் மீது நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை வரையறுக்கும். துரதிர்ஷ்டவசமாக, இன்றைய உலகில், பெரும்பாலான வீடியோ கேம்கள் எதிர்மறை அதிர்வலைகளையே வெளியிடுகின்றன. நாம் கேம்களை/விளையாட்டுகளை பொழுதுபோக்கிற்காகவும், மகிழ்ச்சியைத் தருவதனாலும் விளையாடுகிறோம். ஆனால் நாம் தேடும் அந்த மகிழ்ச்சி நிலையானதாக இருக்க வேண்டும், இது வீடியோ கேம்களில் இல்லை. நீண்ட நேரம் வீடியோ கேம்களை விளையாடிய பிறகும் வெறுமையான உணர்வை அவர்கள் அனுபவிப்பதை நாம் சான்றளிக்க முடியும். கடவுளின் நாமஜபம் மனதில் நேர்மறை மற்றும் ஸ்திரத்தன்மையை உருவாக்குகின்றது, இது அடிமைத்தனத்தை தூண்டுபவற்றிற்குப் பின் ஓட வேண்டிய தேவையை குறைக்கின்றது.