கருப்பு சக்தி அல்லது இருண்ட சக்தி என்றால் என்ன?

கருப்பு சக்தி அல்லது இருண்ட சக்தி என்றால் என்ன?

இன்றைய உலகில், துரதிர்ஷ்டவசமான உண்மை என்னவென்றால், நம்மைச் சுற்றி நேர்மறை ஆற்றலை விட கருப்பு சக்தி அல்லது இருண்ட சக்தியே அதிகம் உள்ளது. அனைவரையும் பாதிக்கும் இந்த தீய சூட்சும சக்தியைப் பற்றி மேலும் அறிந்துகொள்வோம் .

1. கருப்பு சக்தி – அறிமுகம்

நீங்கள் எப்போதாவது பேய் வீட்டில் பொருட்கள் தானாக நகருவது அல்லது இரத்தக்கறை தானாகவே தோன்றுவது போன்ற காட்சிகள் கொண்ட திகிலூட்டும் திரைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா?

இது போன்ற நிகழ்வுகள் நிஜ வாழ்க்கையிலும் நிகழலாம். இவ்வாறு இயற்கைக்கு அப்பாற்பட்ட அல்லது அசாதாரணமானதாகத் தோன்றும் நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளே, சூட்சும லோகங்களில் இருந்து தீய சக்திகள் மக்களை பயமுறுத்துகின்றன என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் ஆகும். இருப்பினும், இந்த சூட்சும சக்திகள் திட்டமிடும் அனைத்து நிகழ்வுகளும் இயற்கையில் மிகவும் வியத்தகு அல்லது அமானுஷ்யமானவை அல்ல. நாளுக்கு நாள் அவை நம் வாழ்வில் ஊடுருவ பல வழிகள் உள்ளன, எடுத்துக்காட்டாக, அவை ஒரு நபரை ஆழமான மன அழுத்தத்தில் தள்ளலாம், போதை பழக்கத்திற்கு அடிமையாக்கலாம், குடும்பத்தில் சண்டைகளை உருவாக்கலாம் மற்றும் சமூகத்தில்,ஆன்மீக தூய்மையற்ற நிலையை அதிகரிப்பதற்கான உரிய சூழலை உருவாக்கலாம்.

ஏன் அவர்கள் இது போன்ற செயல்களை செய்கிறார்கள்?

கருப்பு சக்தி என்றழைக்கப்படும் இவை, இருண்ட சக்தி என்றும் அறியப்படுகிறது. அதன் மற்றொரு சொல் காளி சக்தி (காளி என்றால் கருப்பு மற்றும் சக்தி என்றால் ஆற்றல்). எஸ்.எஸ்.ஆர்.எஃப் இணையதளம் முழுவதும், இந்த வார்த்தையை நாம் விரிவாகப் பயன்படுத்தியுள்ளோம். இந்த கட்டுரையில், கருப்பு சக்தி அல்லது இருண்ட சக்தி பற்றிய விவரங்களையும் மற்றும் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் விரிவாக பார்க்கலாம்.

2. கருப்பு சக்தி அல்லது இருண்ட சக்தி என்றால் என்ன?

கருப்பு சக்தி அல்லது இருண்ட சக்தி என்பது, தீய சக்திகளால் ஆன்மீக பரிமாணத்தில் பூமியில் உள்ள உயிருள்ள அல்லது உயிரற்ற அல்லது சூட்சும மண்டலத்தில் உள்ளவற்றையோ தாக்க பயன்படுத்தப்படும் ஒரு சூட்சும சக்தியாகும். தீய சக்திகள் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தைக் கொண்ட சூட்சும சக்திகளாகும் மற்றும் கருப்பு ஆற்றலே அவர்களுடைய தாக்குதலின் முதன்மையான ஆயுதமாகும்.

தீய சக்தி அல்லது இருண்ட சக்தி தாமஸீக குணத்தை பிரதானமாகக் கொண்டது

ஆன்மீக அறிவியலின் படி, பிரபஞ்சத்தில் மூன்று அடிப்படை சூட்சும கூறுகள் உள்ளன, அவை ஸத்வ, ரஜ, மற்றும் தம என்று அழைக்கப்படுகின்றன. அவை கண்களுக்கு புலப்படும் மற்றும் புலப்படாத அனைத்து படைப்புகளிலும் உள்ளன. ஸத்வ கூறுகள் பிரதானமாக உள்ளபோது ஒரு நபருக்கு ஆன்மீக ஞானமும், ஆன்மீக தூய்மையும் ஏற்படுகிறது, ரஜ கூறுகள் ஒருவரை செயல்பாட்டு நிலையில் வைக்கிறது மற்றும் தம கூறுகள் ஆன்மீக அறியாமை மற்றும் சோம்பலைத் தூண்டுகிறது. எல்லாவற்றிலிருந்தும் வெளிப்படும் சூட்சும அதிர்வலைகள் (நேர்மறை அல்லது எதிர்மறை) அவை உள்ளடக்கிய ஆதிக்கம் நிறைந்த சூட்சும அடிப்படை கூறுகளைச் சார்ந்தது.

இதன் பொருளானது கருப்பு சக்தி அல்லது இருண்ட சக்தி என்பது தாமஸீக முதன்மையானது அல்லது ஆன்மீக ரீதியாக தூய்மையற்ற சக்தி என்பதாகும். இது பரவுவதற்கும் செயலில் ஈடுபடுவதற்கும் ராஜஸீக கூறுகளைப் பயன்படுத்துகிறது. இது எதிர்மறை அதிர்வலைகளை வெளியிடுகிறது.

தயவு செய்து கவனிக்கவும் : கருப்பு சக்தி அல்லது இருண்ட சக்தி என்பது ஒரு சூட்சும சக்தியாகும். மேலும் மேம்பட்ட ஆறாவது அறிவின் மூலம் பார்க்கும்போது கருப்பு நிறத்தில் தெரிகிறது. ‘கருப்பு’ அல்லது ‘இருட்டு’ என்ற சொல்லிற்கும் பூமியில் (ஸ்தூல லோகத்தில்) உள்ள எந்தவொரு நபருக்கும் அல்லது இனத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. உலகம் முழுவதும் கருமையான நிறத்தைக் கொண்ட பல மகான்கள் மற்றும் ஸாதகர்கள் உள்ளனர். ஒருவரின் நிறமோ அல்லது இனத்தின் நிறமோ அவரின் ஆன்மீக ரீதியான வளர்ச்சியின் திறனைப் பாதிக்காது.

3. கருப்பு சக்தி அல்லது இருண்ட ஆற்றலின் ஆதாரம் எது?

பாதாளத்தின்(நரகத்தின்) தாழ்ந்த சூட்சும பகுதியில் இருக்கும் இந்த உயர் நிலை தீய சக்திகள், சூட்சும கருப்பு சக்தியை பெறுவதற்கு, தியானம், பேய்களுக்கான யாகம் மற்றும் தவம் போன்ற பல்வேறு வகையான சூட்சும பயிற்சிகளை செய்கின்றன.

பெரும்பாலும், சக்திவாய்ந்த தீய சக்திகளான மாந்த்ரீகர்கள் (சூட்சும மந்திரவாதிகள்), தங்களின் ஏவல்களை புரிவதற்காக கீழ் நிலையிலுள்ள தீய சக்திகளுக்கு கருப்பு சக்தியை வழங்குகின்றனர். அதே நேரத்தில், கீழ்-நிலை தீய சக்திகள் மாந்த்ரீகர்கள் இடும் பணிகளை செய்வதன் மூலம் அவர்களை சமாதானப்படுத்தி இதன் மூலம் அவர்களிடம் உள்ள அதிகமான தீயசக்தி குவியல்களை பயன்படுத்த முனைகின்றன.

எந்தவொரு தீய சக்திக்கும், அவை அணுகக்கூடிய கருப்பு சக்தியின் அளவு அதன் சூட்சும வலிமையை தீர்மானிக்கிறது. மிகவும் சக்திவாய்ந்த தீய சக்திகள், கிட்டத்தட்ட வரம்பற்ற சக்தியைக் கொண்டுள்ளன, மேலும் அவை அபரிமிதமாக சேமித்து வைத்துள்ள கருப்பு சக்திகளை பயன்படுத்தி சமூகத்தில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, பாதாளத்தின்/நரகத்தின் தாழ்ந்த சூட்சும பகுதிகளைச் சேர்ந்த மாந்த்ரீகர்கள் (சூட்சும மந்திரவாதிகள்) தொற்றுநோய்களையும் (கொரோனா வைரஸ் போன்றவை) மற்றும் பூகம்பம், சுனாமி போன்ற பரந்த அளவிலான இயற்கை பேரழிவுகளையும் உருவாக்க முடியும்.

பணத்தைப் போலவே சக்தியும் நல்லதோ மற்றும் கெட்டதோ அல்ல. தர்ம மற்றும் அதர்ம வழியில் பணத்தை சம்பாதித்து, பிறகு அதை நல்ல அல்லது கெட்ட செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதைப் போலவே, சூட்சும சக்தியின் விஷயமும் உள்ளது. அதை சம்பாதிக்கும் விதம் மற்றும் பயன்படுத்தப்படும் விதம்தான் அதற்கு நல்லது அல்லது கெட்டது என்ற அடைமொழியைக் கொடுக்கின்றது. எதிர்மறை நோக்கங்களுக்காக சூட்சும சக்தியைப் பயன்படுத்தினால், அது கருப்பு சக்தி அல்லது இருண்ட சக்தி என்று அழைக்கப்படுகிறது. சூட்சும முறையில் கருமையாகத் தெரிவதாலும், அதிலிருந்து வரும் உணர்வு எதிர்மறையாக இருப்பதாலும் இது கருப்பு சக்தி என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால், தீய வழியில் பெறப்பட்ட இந்த சக்தியானது, தீய நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதாலும், இதிலிருந்து வரும் அதிர்வலைகளும் எதிர்மறையாக மாறுகிறது.

4. கருப்பு சக்தி அல்லது இருண்ட சக்தி எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

தீய சக்திகள் எந்தவொரு செயல்முறையையும் ஆன்மீக பரிணாமத்தில் சூட்சும லோகங்களிலும், ஸ்தூல நிலையில் பூலோகத்திலும் செயல்படுத்த கருப்பு சக்தி அல்லது இருண்ட சக்தியை பயன்படுத்துகின்றன. இதை கையாளுதலின் அளவு, அதை தாக்கும் தீய சக்தியின் வலிமையைப் பொறுத்தது.

ஒரு நபரை எல்லா நிலைகளிலும் பாதிக்க தீய சக்திகளால் கருப்பு சக்தியைப் பயன்படுத்தமுடியும்.

நிலை உருவாக்கக்கூடிய அல்லது அதிகரிக்கக்கூடிய கஷ்டத்தின் எடுத்துக்காட்டுகள்
உடல்(ஸ்தூல) ரீதியாக சோம்பல், பலவீனம், தலைவலி மற்றும் எதாவது ஒரு வகையான நோய்
உளவியல்(மனோ) ரீதியாக கோபம், பதட்டம், மனச்சோர்வு மற்றும் போதை அல்லது மன சிதைவு நோய் போன்ற ஒருவித மனநோய்கள்
ஆன்மீக ரீதியாக எந்தவொரு ஆன்மீக பயிற்சியையும் செய்ய விரும்பாத ஒரு உணர்வு

உடலில் உள்ள பிராணசக்தி ஓட்டத்தில் ஏற்படும் தடைகளால், ஒருவருக்கு பல தடைகள் ஏற்படுதல்

ஒருவர் பேய்களால் பீடிக்கப்படுதல்

பின்வரும் இரண்டு படங்கள், தீய சக்திகள் எவ்வாறு கருப்பு சக்தியினால் மக்களை பாதிக்கின்றன என்பதற்கான எடுத்துக்காட்டுகளாகும்.

ஒரு நபரை சுற்றி கருப்பு சக்தி ஆவரணம்(படலம்) சூழ்ந்து இருந்தால், அது கருப்பு சக்தி படலம் என அழைக்கப்படுகிறது. பின்வரும் விளக்கப்படமானது ஒரு நபரின் உள்ளேயும் வெளியேயும் கருப்பு சக்தி படலம் எவ்வாறு உள்ளது என்பதைக் காட்டுகிறது.

ஒருவரைச் சுற்றியுள்ள கருப்பு சக்தி படலத்தை அகற்ற பல்வேறு ஆன்மீக நிவாரணங்கள் உள்ளன. அவை – கருப்பு படலத்தை எவ்வாறு அகற்றுவது?என்ற எங்கள் கட்டுரையில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

மேலும், தீய சக்திகள் ஆன்மீக ரீதியாக சுற்றுச்சூழல் அல்லது வளாகத்தை மாசுபடுத்த இந்த கருப்பு சக்தியைப் பயன்படுத்துகின்றன. உயர் நிலை தீய சக்திகள் இந்த கருப்பு சக்தியைப் பயன்படுத்தி அதிக அளவிலான தொற்றுநோய்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

5. கருப்பு சக்திகளின் வகைகள்

தீய சக்திகள் பல்வேறு வகையான கருப்பு சக்தியை பயன்படுத்துகின்றன. கருப்பு சக்தியின் பொதுவான உருவத்தைக் கொண்டு எதிர்மறையான ஒரு தாக்கத்தை உருவாக்கலாம், உதாரணமாக, தீய சக்திகள் நோயை உருவாக்கலாம் அல்லது இந்த வகையான கருப்பு சக்தி மூலம் வன்முறையைத் தூண்டலாம்.

மற்றொரு வகை கருப்பு சக்தி என்பது மாய(மாயாவி) அதிர்வலைகளை உருவாக்கும். அதாவது இல்லாத ஒன்றை இனிமையானதாகவோ அல்லது பயனுடையதாகவோ தோன்ற வைக்கும் திறன் கொண்டது. உதாரணமாக, கோலா பானங்கள் மற்றும் பெரும்பாலான ஒப்பனை பொருட்கள் இந்த வகையான தீய அதிர்வலைகளை வெளியிடுகின்றன. இவை முதல் வகையை விட மிகவும் ஆபத்தானது, ஏனெனில் இது தீங்கு விளைவிக்கும் ஒன்றை கவர்ச்சிகரமானதாகத் தோன்ற வைக்கிறது.

மூன்றாவது வகை கருப்பு சக்தி கவர்ச்சிகரமான (மோகினி) அதிர்வலைகளை உருவாக்குகிறது. ஒரு நபரை ஆட்கொண்டிருக்கும் தீய சக்திகளால் அவரை அல்லது அவளை மிகவும் கவர்ச்சியானவராக தோன்றச் செய்யலாம். ஒரு நபருக்கு அதிகப்படியான பாலியல் எண்ணங்களை உருவாக்கவும் இது பயன்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, இந்த கவர்ச்சிகரமான அதிர்வலைகள் ஒரு நபரை மிகவும் கவர்ச்சிகரமானவராக மாற்றி அவர்களை நட்சத்திரமாக முன்னிறுத்துகிறது, இந்த வகையில் சமூகத்தை பெரிய அளவில் எதிர்மறையாக இது பாதிக்கிறது.

பல்வேறு வகையான தீய சக்திகள் இருப்பதைப் போலவே, பல வகையான நல்ல சக்திகள் இருப்பதையும் – நேர்மறை ஆற்றல் என்றால் என்ன? என்ற எங்கள் கட்டுரையில் விவரிக்க இருக்கிறோம் (விரைவில்)

6. கருப்பு சக்தி தொடர்பாக நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய கருத்துக்கள்

கருப்பு சக்தி என்பது ஸ்தூல தேகத்தின் பரிமாணத்தை பாதிக்க தீயசக்திகளால் பயன்படுத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். அதன் விளைவுகளிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு, வழக்கமான ஆன்மீக பயிற்சிகளை மேற்கொள்வதும், ஆன்மீக நிவாரணங்களை தொடர்ந்து செயல்படுத்துவதுமே சிறந்த வழியாகும். ஒருவர் அவ்வாறு செய்வதன் மூலம், கடவுளின் பாதுகாப்பைப் பெறுகிறார்.