அட்டவணை
1. நோய் முழுமையாக வெளிப்படும் முன் நோயின் அறிகுறிகள் தெரியும்
உடல், உளவியல் மற்றும் ஆன்மீக ரீதியான காரணங்களால் ஏற்படும் நோயின் துயரங்கள், அந்நோய் 30% விருத்தி அடைந்த பின்பே தெளிவாக வெளிப்படும். அதன் பின்பே உளவியல் ரீதியாக அல்லது உடல் ரீதியாக தென்பட ஆரம்பிக்கும். நாமஜபத்தின் காரணமாக இந்த அறிகுறிகள் வெளிப்படும் முன்னரே நோய் இருப்பதை உணர முடியும். எதிர்காலத்தில் துயரம் ஏற்பட சாத்தியமாக இருந்தால், அல்லது தற்பொழுது துயரம் வெளிப்படாமல் இருந்தால், நாமஜபத்தின் மூலம் இத்துயரங்கள் உடல் அல்லது உளவியல் ரீதியாக வெளிப்பட ஆரம்பிக்கும். இதன் காரணம் யாதெனில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்புகள், நாமஜபத்தின் மூலம் நேர்மறை அதிர்வலைகளை பெறுவதனால் ஆகும். 30% வரை நோய் விருத்தி அடையும் வரை வைத்தியர்களால் கூட நோயினை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. மாறாக, 10-30% வரை நோய் விருத்தி அடையும் பொழுதே நாமஜபத்தின் மூலம் கண்டறிய முடிகிறது. உதாரணமாக ஒருவர் மன நோயினை கொண்டிருந்தால் நாமஜபத்தின் மூலம் அதை கண்டறியலாம்.
2. மன உறுதியினால் உடல் ரீதியாக ஏற்படும் நன்மைகள்
நாமஜபத்தின் மூலம் மனம் அமைதி அடையும்பொழுது, ஒருவரின் மன உளைச்சலால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளில் இருந்து விடுதலை பெற்று சுகமான உடல்நலத்தை அனுபவிக்க முடிகிறது.
3. குறிப்பிட்ட நோய்க்கு உரிய குறிப்பிட்ட ஆன்மீக நிவாரண நாமஜபங்கள்
இதைப்பற்றிய விரிவான தகவல்களை நோய்களிற்கான/ ஆரோக்கியதிற்கான நாமஜபங்கள் எனும் பகுதியில் காணலாம்.