வாசகர்களுக்கான குறிப்பு: இந்த கட்டுரையை முழுமையாக புரிந்துகொள்ள பிரபஞ்சத்தின் மூன்று சூட்சும கூறுகளான ஸத்வ, ரஜ மற்றும் தமவைப் பற்றி படிக்கவும்.
அட்டவணை
- 1. சைவ உணவு மற்றும் மாமிச உணவை பற்றிய ஆன்மீக பார்வையின் ஒர் அறிமுகம்
- 2. சைவ உணவு மற்றும் மாமிசம் சார்ந்த உணவு வகைகளின் ஆன்மீக தூய்மை
- 2.1 சூட்சும ஞானத்தின் மூலம் வரையப்பட்ட இறைச்சியின் வரைபடம்
- 2.2 சூட்சும ஞானத்தின் மூலம் வரையப்பட்ட ஒரு வாழைப்பழத்தின் வரைபடம்
- 2.3 பண்ணை தொழிற்சாலைகளில் விலங்குகளை கையாளும் முறையினால் இறைச்சியில் ஏற்படும் விளைவு
- 2.4 கொல்லப்படும்போது தாவரங்களும் வலியை அனுபவிக்கின்றதா?
- 2.5 இறைச்சி சமைக்கும் முறை
- 2.6 அதிகரித்த தம கூறுகளின் விளைவு எவ்வளவு காலம் நீடிக்கும்?
- 2.7 மனிதர்களின் கடைவாய் பற்கள் இறைச்சி உண்பதற்க்காக
- 2.8 பூண்டு மற்றும் வெங்காயம் உண்பதைக் குறித்த ஆன்மீக பார்வை
- 2.9 பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டியைப் (சீஸ்) பற்றிய ஆன்மீக பார்வை
- 3. உணவினால் மனிதனிடம் ஏற்படும் விளைவுகள்
- 4. அசைவ உணவு தொடர்பாக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
1. சைவ உணவு மற்றும் மாமிச உணவை பற்றிய ஆன்மீக பார்வையின் ஒர் அறிமுகம்
சைவ உணவு உண்பவர்களுக்கும் மாமிச உணவு உண்பவர்களுக்கும் இடையே பரந்த அளவில் விவாதம் எங்கும் நடைபெறுகிறது. இவ்விரண்டு தரப்பினருக்கும் இடையே, அதாவது சைவம் மற்றும் அசைவ உணவு உண்பவர்கள் தமது உணவு முறையிலுள்ள நன்மைகளை குறித்து சத்தியம் செய்கிறார்கள். எனினும், அதிகமான மக்கள் சைவத்திற்கு மாறும் உலகளாவிய போக்கு நிலவுகிறது. இக்கட்டுரையில், நாங்கள் இந்த சிக்கலை ஆன்மீக கண்ணோட்டத்தில் ஆராய்கிறோம்.
2. சைவ உணவு மற்றும் மாமிசம் சார்ந்த உணவு வகைகளின் ஆன்மீக தூய்மை
பிரபஞ்சத்தின் மூன்று சூட்சும கூறுகளான ஸத்வ, ரஜ மற்றும் தமவைப் பற்றிய எங்களது கட்டுரையில், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் எவ்வாறு சூட்சும நிலையில் இந்த மூன்று சூட்சும கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை விளக்கி உள்ளோம்.
மூன்று கூறுகள்பண்புகள்அடைமொழிஉதாரணம்ஸத்வ (%)301010ரஜ (%)202010தம (%)507010மொத்தம்10010010
மூன்று கூறுகள் |
பண்புகள் |
அடைமொழி | உதாரணம் |
---|---|---|---|
ஸத்வ | தூய்மை மற்றும் ஞானம் | ஸாத்வீக | ஸாத்வீக மனிதன் – புகழ், வெகுமானம் அல்லது வேறு நோக்கம் என்று எந்த எதிர்பார்ப்புமின்றி சமூக நலனுக்காக வாழ்பவர் |
ரஜ | செயல்பாடு மற்றும் ஆசை | ராஜஸீக | ராஜஸீக மனிதன் – சுய லாபத்திற்காகவும் லட்சியத்திற்காகவும் வாழ்பவன் |
தம | அறியாமை மற்றும் சோம்பல் | தாமஸீக | தாமசீக மனிதன் – மற்றவர்களை மிதித்து மேலே செல்ல தயங்காதவன், சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பவன் |
ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை
உணவும் இதற்கு விதிவிலக்கல்ல. சூட்சும நிலையில் உணவும் ஸத்வ, ரஜ மற்றும் தம சூட்சும கூறுகளால் ஆனது. இந்த சூட்சும கூறுகளின் விகிதாச்சாரம், உணவின் வகை அதாவது சைவம் அல்லது மாமிச உணவை பொறுத்து மாறுபடும். ஸத்வ கூறனாது தூய்மை மற்றும் ஞானத்தை குறிக்கிறது, அதே நேரத்தில் தம, அறியாமை மற்றும் சோம்பல் தன்மையைக் குறிக்கிறது. உயர்ந்த ஸத்வ கூறுகளை கொண்ட எதுவும் நமது ஆன்மீக பயணத்திற்கு உதவுகிறது மற்றும் தமவை பிரதானமாக கொண்ட எதுவும் நமது ஆன்மீக பயிற்சியை குறைக்கவோ அல்லது தடுக்கவோ முனைகிறது.
ஆன்மீக ஆராய்ச்சி மூலம், சைவ உணவு மற்றும் அசைவ உணவில் உள்ள சூட்சும-கூறுகளின் விகிதத்தின் அளவீடுகளைப் பெற்றுள்ளோம்.
சூட்சும கூறு | சைவ உணவு | மாமிச உணவு அல்லது அசைவ உணவு |
---|---|---|
ஸத்வ (%) | 30 | 10 |
ரஜ (%) | 20 | 20 |
தம (%) | 50 | 70 |
மொத்தம் | 100 | 100 |
ஆதாரம்: ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையால் (எஸ்.எஸ்.ஆர்.எஃப்.) நடத்தப்பட்ட ஆன்மீக ஆராய்ச்சி – செப்டம்பர் 2020
தயவுகூர்ந்து கவனிக்கவும்: இத்தகைய அளவீடுகள் ஒவ்வொரு உணவு வகைகளிலும் சராசரியாக உள்ளவை. மீன் அசைவ உணவை சார்ந்தது என்றாலும் வெள்ளை மற்றும் சிவப்பு இறைச்சியை காட்டிலும் குறைவான தம கூறுகளை கொண்டுள்ளது. ஒரே பிரிவில் உள்ள உணவு, ஒன்றுக்கு ஒன்று ஓரளவு வேறுபடுகிறது. உதாரணமாக, அசைவ பிரிவில் உள்ள ஆட்டிறைச்சி மற்றும் கோழி அதன் ஸத்வ, ரஜ மற்றும் தம கூறுகளின் சதவீதத்தில் வேறுபடுகிறது.
ஒரு விலங்கு கொல்லப்படும்போது எந்த அளவு துன்பத்தை அனுபவிக்கிறதோ, அந்த அளவு அதன் இறைச்சியில் தம கூறு அதிகரிப்பதற்கான காரணமாக அமைகிறது. மேலும் அடிப்படை மனமும் புத்தியும் கொண்ட ஒரு தாவரத்துடன் ஒப்பிடும்போது, ஒரு விலங்கு கொல்லப்படும்போது அதன் கோபம் மற்றும் பழிவாங்கும் எண்ணங்கள் மிகவும் மேலோங்கி உள்ளன. இதுவே தம கூறு அதிகரிக்க முக்கிய காரணமாகிறது.
மேலே உள்ள அட்டவணையில் நீங்கள் காண்பது போல், சூட்சும ஸத்வ கூறுகளின் விகிதம் சைவ உணவில் அதிகமாக உள்ளது. தம கூறுகளை பிரதானமாக கொண்ட இறைச்சியை உண்ணும் செயல் ஒரு தாமஸீக செயலாகும் மற்றும் ஆன்மீக நிலையில் அது ஒருவரை மோசமாக பாதிக்கிறது.
2.1 சூட்சும ஞானத்தின் மூலம் வரையப்பட்ட இறைச்சியின் வரைபடம்
சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட கீழே உள்ள வரைபடத்தை ஆறாவது அறிவின் மூலம் பார்க்கும் போது, ஆரோக்கியமானதாக காட்சியளிக்கும் இறைச்சி துண்டு எப்படி இருக்கும் என்பதை காட்டுகிறது. சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வரைபடத்தை திருமதி யோயா வாலே (பாரிஸ், பிரான்ஸ்) வரைந்துள்ளார்
2.2 சூட்சும ஞானத்தின் மூலம் வரையப்பட்ட ஒரு வாழைப்பழத்தின் வரைபடம்
வாழைப்பழம் போன்ற ஒரு ஸாத்வீகமான பழம், ஆறாவது அறிவின் மூலம் நோக்கப்படும்போது எப்படி இருக்கும் என்பதை கீழே உள்ள சூட்சும ஞான சித்திரம் காட்டுகிறது. இது திருமதி யோயா வாலே (பாரிஸ், பிரான்ஸ்) அவர்களால் சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது.
இந்த பழம் அதிக ஸாத்வீக தன்மை கொண்டுள்ளதால் சடங்கு வழிபாட்டில் கடவுளுக்கு படைக்கப்படுகிறது.
2.3 பண்ணை தொழிற்சாலைகளில் விலங்குகளை கையாளும் முறையினால் இறைச்சியில் ஏற்படும் விளைவு
2.3.1 படுகொலைக்கு முன் விலங்குகளை கையாளும் விதம்
உலகெங்கிலும் உள்ள பண்ணை தொழிற்சாலைகளில் விலங்குகள் பெரும்பாலும் லாபத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களாகவே கருதப்படுகின்றன. விலங்கியல் வேளாண்மையில் ஏற்பட்ட இத்தகைய மனப்போக்கினால் நிறுவனமயமாக்கப்பட்ட விலங்கியல் கொடுமை மற்றும் பாரிய சுற்றுச்சூழல் அழிவு ஏற்படுவதால், வளங்கள் குறைந்து, விலங்குகள் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு அபாயங்களை வழிவகுக்கிறது. பின்வரும் காணொளி ஒரு பண்ணை சரணாலயத்தில் விலங்குகளை கொடுமைப் படுத்துவதைக் காட்டுகிறது.
ஆன்மீக கண்ணோட்டத்தில் விலங்குகளை மோசமாக நடத்துவதும் படுகொலை செய்வதும் பாவம். பகுதி 3.3ஐ பார்க்கவும்.
2.3.2 படுகொலை செய்யப்படும் முறையினால் இறைச்சியில் ஏதேனும் ஆன்மீக தாக்கத்தை ஏற்படுத்துமா
சில மதங்களும், வழக்கங்களும் குறிப்பிட்ட முறையில் விலங்குகள் படுகொலை செய்யப்படவேண்டும் என வரையறுக்கின்றன. அவ்வாறு செய்யப்படவில்லையென்றால் அந்த இறைச்சியை அச்சமூகத்தினர் சாப்பிட அனுமதிக்கப்படுவதில்லை. இறைச்சி கூடங்களில் மின்னதிர்ச்சி (எலக்ட்ரிக் ஷாக்) அல்லது மந்தைகளை பிடிக்கும் துப்பாக்கி மூலம் விலங்குகளுக்கு அதிர்ச்சியூட்டுவது வழக்கம். இதனால் மிருகங்கள் மயக்கமடைகின்றன. உடலை இழுத்து செல்வதற்குமுன்பு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் மற்றும் மூளையின் நாளம் கத்தியால் துண்டிக்கப்பட்டு, இரத்தம் வெளியேற்றப்படுகிறது. மிருகங்கள் இரத்த இழப்பால் இறக்கின்றன.
இருப்பினும் சில சமூகங்களில் விலங்குகளை அதிர்ச்சியூட்டாமல், தமனி நரம்பை வெட்டி, இரத்தப்போக்கினால் மரணம் அடையும் முறைக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கிறார்கள். அப்போதுதான் இறைச்சி சாப்பிட அனுமதிக்கப்படுகிறது. இரத்தப்போக்கினால் மரணம் நிகழ்வது சுமார் இரண்டு நிமிடங்கள் வரை நீடிக்கும். இம்முறை மிகவும் கொடூரமானது என்றும், விலங்கு மிகுந்த வலியை அனுபவிக்கிறது என்றும் விலங்கு உரிமைகள் அமைப்புக்கள் இந்த முறையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். ஆனால், இந்த சமூகங்களின் செய்தி தொடர்பாளர்கள் வலியின் அளவில் எந்த வேறுபாடும் இல்லை என்றும் திடீரென்று முதன்மை தமனி நரம்பை வெட்டுவதால், இரத்தக்கசிவினால் இரத்த அழுத்தம் விரைவாக குறைகிறது. இரத்தம் இன்றி மூளை செயலிழந்து போவதால், எந்த வலியையும் உணர நேரமில்லை என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். (குறிப்பு: BBC.com 2003)
இந்த பிரச்சனையை குறித்து நாங்கள் ஆன்மீக ஆராய்ச்சி செய்த போது கண்டறிந்தோம்:
- மனிதர்கள் கொல்லப்படும்போது எவ்வளவு வலியை உணர்கிறார்களோ அதே அளவு வலியை விலங்குகளும் இறக்கும் போது உணர்கின்றன. இருப்பினும், அந்த வலியை புரிந்துகொள்வதில் விலங்கின் மனம் மற்றும் புத்தியின் வளர்ச்சியைப் பொறுத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஒரு விலங்கின் வாழ்க்கை பெரும்பாலும் உணவு மற்றும் பாலின்பத்தோடு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது, ஆனால் ஒரு மனிதனது வாழ்க்கையில் பல அம்சங்கள் உணர்வு பூர்வமாக இணைந்து இருப்பதால் வலியின் அளவு மிகவும் அதிகம்.
- மேற்கூறிய சமூக பழக்கத்திற்கு ஏற்ற வகையில் படுகொலை செய்யப்படும்போது, விலங்குகளின் துன்பம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கிறது . 1முதல் 100 வரையிலான அளவில், 100 அலகுகள் ஒரு விலங்கின் உடல் பாகங்கள் மெதுவாக வெட்டுவதன் மூலம் ஏற்படும் வலி என்றால், பிறகு
- இறைச்சி கூடங்களில் சாதாரண முறையினால் படுகொலை செய்யப்படும் போது விலங்கு அனுபவிக்கும் வலியின் அளவு 30 அலகுகள் ஆகும்.
- மேற்கூறிய சமூகங்கள், படுகொலை செய்ய பின்பற்றும் முறையினால் விலங்குகள் அனுபவிக்கும் வலியின் அளவு 50 அலகுகள் ஆகும்.
- வலி அதிகரிப்பதன் விளைவாக, சூட்சும தம கூறு இறைச்சியில் அதிகரிக்கிறது. மேலும் இச்சமூகங்களின் நம்பிக்கை படி விலங்குகள் கொல்லப்படுவதனால் கொல்லும் நபர் மீது விலங்குகளுக்கு ஏற்படும் கோப எண்ணங்கள் அதிகரிப்பாலும் இந்நிலை ஏற்படுகிறது.
முரண்பாடு என்னவென்றால், இந்த சமூகங்கள் அவர்களின் நம்பிக்கைகளின்படி, விலங்குகளை படுகொலை செய்வதனால் இறைச்சியில் ஆன்மீக தூய்மையற்ற தன்மை அதிகரித்து அவர்கள் அதிக தம ஆதிக்கம் நிறைந்த இறைச்சியை உட்கொள்கிறார்கள். ஆன்மீக ஆராய்ச்சி மூலம் பெறப்பட்ட பின்வரும் சூட்சும அளவீடுகள் இதையே குறிக்கின்றன.
கழுத்தை வெட்டி கொல்லப்படும் விலங்கு மற்றும் அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்படும் விலங்கின் இறைச்சியில் உள்ள ஆன்மீக தூய்மையின்மையின் ஒப்பீடு
சூட்சும கூறு | விலங்கை முதலில் அதிர்ச்சிக்குள்ளாக்கி பின் கொலை செய்தல் | ஒரு விலங்கின் முதுகெலும்பு விடுத்து அதன் கழுத்தை வெட்டி கொலை செய்து, இரத்தப்போக்கினால் மரணமடைய செய்தல் |
---|---|---|
ஸத்வ (%) | 10 | 5 |
ரஜ (%) | 20 | 15 |
தம (%) | 70 | 80 |
மொத்தம் | 100 | 100 |
ஆதாரம்: SSRF.org ஆல் நடத்தப்பட்ட ஆன்மீக ஆராய்ச்சி – செப்டம்பர் 2020
மேலேயுள்ள அளவீடுகளிலிருந்து, தம கூறுகள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்தும் ஸத்வ கூறுகள் குறைந்தும் இருப்பதைக் காணலாம்
2.4 கொல்லப்படும்போது தாவரங்களும் வலியை அனுபவிக்கின்றதா?
ஆம், தாவரங்கள் வெட்டப்படும் போதும் அல்லது அதன் பாகங்கள் துண்டிக்கப்படும் போதும், வலியை அனுபவிக்கின்றன. இருப்பினும் வலியின் புரிதல் விலங்குகளை விட தாவரத்திற்கு குறைவாக உள்ளது. ஏனென்றால் ஒரு விலங்குடன் ஒப்பிடும்போது ஒரு தாவரத்தின் மனமும் புத்தியும் மிக அடிப்படைஅளவிலேயே உள்ளன. . இருப்பினும், முழுமையாக பழுத்த நிலையில் உள்ள பழம் அல்லது காய் பறிக்கப்பட்டாலோ அல்லது மரத்திலிருந்து விழுந்தாலோ தாவரத்திற்கு எந்த வலியும் இல்லை.
2.5 இறைச்சி சமைக்கும் முறை
இறைச்சியை வாட்டுவதற்கு பொதுவான மூன்று வழிகள் உள்ளன, அதாவது முழுமையாக சமைக்கப்படாத விதம், மிதமாக சமைக்கும் விதம் மற்றும் நன்றாக சமைக்கும் விதம். முழுமையாக சமைக்கப்படாத இறைச்சி சமைக்காத இறைச்சி போலவே இருக்கும். அதாவது வெளிப்புறத்தில் சமைக்கப்பட்டும் உட்புற மையத்தில் சிவப்பாகவும் இருக்கும். மறுபுறம், நன்றாக சமைத்த இறைச்சி வெளிப்புறத்தில் நன்கு எரிந்து, பழுப்பு நிறமாகவும், மெல்லும் பதத்திலும் இருக்கும்.
முழுமையாக சமைக்கப்படாத இறைச்சித் துண்டை விரும்பும் நபர்கள் ஆவிகளால் (பேய்கள், பிசாசுகள், எதிர்மறை ஆற்றல்கள் போன்றவைகளால்) பீடிக்கப்படுவர்கள் அல்லது பயன்படுத்திக் கொள்ளப்படுவார்கள். ஏனென்றால், முழுமையாக சமைக்கப்படாத இறைச்சி எதிர்மறை சக்திகளாகிய பேய்களால் விரும்பப்படும் இறைச்சியாகும். “முழுமையாக சமைக்கப்படாத மற்றும் மிதமாக சமைக்கப்பட்ட இறைச்சியை” நன்கு சமைத்த இறைச்சியுடன் ஒப்பிடும்போது, நன்கு சமைத்த இறைச்சியில் தம சூட்சும கூறுகள் குறைவாக உள்ளது
2.6 அதிகரித்த தம கூறுகளின் விளைவு எவ்வளவு காலம் நீடிக்கும்?
வழக்கமாகவே நாள்தோறும் தம ஆதிக்கம் நிறைந்த உணவை உட்கொள்ளும் போது, அதிகப்படியான தம கூறு உடலுக்கு சுமையாகிறது. தம கூறுகளின் அதிகரிப்பு பல எதிர்மறையான பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படைக் கோட்பாடுகளுடன் இணைந்திருக்கும் ஆன்மீக பயிற்சியை ஒருவர் செய்தால் மட்டுமே இந்த தம கூறு நீங்கும். இருப்பினும், பெரும்பாலான மக்கள் ஆன்மீக பயிற்சி மேற்கொள்வதில்லை. ஆதலால், இந்த தம கூறு ஒரு நபரின் உடல், மனம் மற்றும் புத்தியில் சேர்ந்து விடுகிறது.
சராசரி ஆன்மீக நிலையில் உள்ள ஒருவர் இறைச்சி சாப்பிடுவதை விட்டுவிட்டு சைவத்திற்கு மாறினால் தம ஆதிக்கம் நிறைந்த அசைவ உணவை உட்கொண்டதால் ஏற்பட்ட அதிகமான சூட்சும தம கூறுகளின் விளைவுகளை சமாளிக்க அவருக்கு சுமார் 30 ஆண்டுகள் ஆகும்.
ஆறு அடிப்படைக் கோட்பாடுகளின் படி ஒருவர் ஆன்மீக பயிற்சி செய்தாலும், தம ஆதிக்கம் நிறைந்த உணவை உண்பதால் ஏற்படும் மோசமான விளைவுகளை சமாளிக்க அவருக்கு சராசரியாக 5 ஆண்டுகள் ஆகும். இதற்கு அவர் அசைவ உணவை உடனடியாக விட்டுவிட்டு, ஒரு நாளைக்கு 4-5 மணி நேரம் ஆன்மீக பயிற்சி (ஆறு அடிப்படைக் கோட்பாடுகளின் படி) செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர் அசைவ உணவை படிப்படியாக விட்டால், அதிக தம-ஆதிக்கம் நிறைந்த அசைவ உணவை உண்பதால் ஏற்படும் மோசமான விளைவுகளை சமாளிக்க அவருக்கு 10 ஆண்டுகள் ஆகும்.
2.7 மனிதர்களின் கடைவாய் பற்கள் இறைச்சி உண்பதற்க்காக
மனிதர்களுக்கு கோரைப் (கடைவாய்) பற்களின் செயல்பாடு உணவை கிழிக்க உதவுகிறது. அசைவ உணவை ஆதரிப்பவர்கள், கடவுள் நமக்கு கோரைப் பற்களைக் கொடுத்திருக்கிறார், எனவே அசைவ உணவை உட்கொள்ளலாம் என்று வாதம் செய்கிறார்கள். ஆனால் அந்த வாதத்திற்கே இடம் இல்லை. நம்மிடம் நகங்கள் இருப்பதால் விலங்குகளைப் போலவே நாமும் மற்றவர்களை பிறாண்டலாம் என்று சொல்வது போலாகும். மனிதர்களுக்கு கோரைப் பற்கள் இருப்பதால் அசைவ உணவை சாப்பிட வேண்டும் என்று அர்த்தமல்ல.
2.8 பூண்டு மற்றும் வெங்காயம் உண்பதைக் குறித்த ஆன்மீக பார்வை
2.9 பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டியைப் (சீஸ்) பற்றிய ஆன்மீக பார்வை
- ஒருவர் பசுவின் பால் உட்கொள்ளுவதால் ஸத்வ கூறு அதிகரிக்கிறது. எல்லா பால் வகைகளை காட்டிலும், பசுவிலிருந்து வரும் பால் மிகவும் ஸாத்வீகமானது ஆகும்
- பாலை விட தயிர் மற்றும் மோரில் ஸாத்வீகத் தன்மை குறைவாக உள்ளது
- பாலிருந்து பிற பொருட்கள் (குறிப்பாக பாலை திரிய செய்து பனீர் தயாரிப்பது) தயாரிக்கப்படும் போது ஸத்வ கூறுகள் குறைவடையத் தொடங்கி, சூட்சும தம கூறுகள் அதிகரிக்கத் தொடங்குகிறது.
3. உணவினால் மனிதனிடம் ஏற்படும் விளைவுகள்
3.1 ஸ்தூல நிலையில்
அசைவ உணவு உண்பதால், தம கூறு அதிகரிக்கிறது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
3.2 மனோரீதியான நிலையில்
அசைவ உணவிலிருந்து தம கூறுகள் அதிகரிப்பதால் பல்வேறு ஆசைகள் மற்றும் பிற தாமஸீக எண்ணங்களாகிய பாலியல் எண்ணங்கள், பேராசை, கோபம், போன்ற எண்ணங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது.
3.3 ஆன்மீக நிலையில்
- தம ஆதிக்கம் நிறைந்த அசைவ உணவை உண்பதன் மூலம், ஒருவர் ஆவிகளின் (பேய்கள், பிசாசுகள், எதிர்மறை ஆற்றல்கள் போன்றவை) தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகமாகிறது. மற்ற காரணிகள் மாறாத நிலையில், சைவ உணவு உண்ணும் நபரைக் காட்டிலும் இறைச்சி உண்ணும் நபர் ஆவிகளால் பீடிக்கப்படும் வாய்ப்பு 20% அதிகமாகும். இதற்கான காரணம், இறைச்சி உணவு வகை அசுர சக்திகளால் விரும்பப்படும் ஒரு உணவு ஆகும். சமூகத்தில் தர்ம பிரசாரம் செய்யும் சேவையை, தங்களது ஆன்மீக பயிற்சியாக செய்பவர்கள் அசைவ உணவை உண்ணும் போது பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், உயர்மட்ட ஆவிகள் தம சூட்சும கூறுகளின் அதிகரிப்பைப் பயன்படுத்தி அவர்களை தொந்தரவு செய்கின்றன.
- அதிக ஸத்வ கூறுகளின் விகிதத்தால் ஆன்மீக பயிற்சிக்கு உகந்தது சைவ உணவு ஆகும்
உதாரணம் : 30% ஆன்மீக நிலையில் இருக்கும் மோகன் ஆறு அடிப்படை ஆன்மீகக் கோட்பாடுகளின் படி, தினசரி 4-5 மணி நேரம் ஆன்மீக பயிற்சியை செய்கிறார். எல்லா காரணிகளும் சமமாக இருக்கும்போது, அவர் அசைவத்திற்கு பதிலாக சைவத்திற்கு மாறினால், 40% ஆன்மீக நிலையை 20 ஆண்டுகளில் அடைவார்.
நாம் இறைவனோடு இரண்டறக் கலப்பதற்கு, மூன்று சூட்சும கூறுகளை தாண்டி வர வேண்டும். எனவே மூன்று சூட்சும கூறுகளாலான நம்முடைய விருப்பு வெறுப்புகளையும் ஆன்மீக பயிற்சியின் மூலம் கடந்து செல்ல வேண்டும். 90% ஆன்மீக நிலையை தவிர, மற்ற எல்லா நிலையிலும் அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காகவும் இவ்வாறு நிகழ்கிறது. 90% ஆன்மீக நிலைக்குப் பிறகு ஒருவர் என்ன உட்கொண்டாலும், மூன்று சூட்சும கூறுகளின் விகிதத்தில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது.
- அசைவ உணவை சாப்பிடுவதன் மூலம் நாம் பாவம் செய்கிறோமா?ஆம், நாம் விலங்குகளை கொல்லும்போது பாவத்திற்கு ஆட்படுகிறோம். 50% பாவம் இறைச்சி கூடத்தில் கசாப்பு கடைக்காரர் / ஊழியர்களால் ஏற்படுகிறது, மற்ற 50% பாவம் இறைச்சி சாப்பிடும் நபரால் ஏற்படுகிறது. அத்துடன், இறைச்சி உண்ணும் நபர்களிற்கிடையே இந்த 50% பிரிக்கப்படாது. மாறாக, இறைச்சி சாப்பிடும் ஒவ்வொரு நபரும் தனித்தனியாக விலங்கை கொல்வதால் ஏற்படும் 50% பாவத்திற்கு சரிசமனாக ஆட்படுகிறார்கள். . கசாப்புக்காரன் விலங்குகளைக் கொல்லும் செயலை மகிழ்ந்து அனுபவிக்கும் பட்சத்தில், பாவத்தின் தீவிரம் அவனது பங்கில் அதிகரிக்கிறது. பல சந்தர்ப்பங்களில் இறைச்சிக் கூடங்களில் பணிபுரியும் மக்கள் ஆவிகளால் பீடிக்கப்படுவார்கள் அல்லது பாதிக்கப்படுகிறார்கள். இதனுடன் சேர்த்து அவர்களது ஆளுமை குறைகளும், விலங்குகளின் மீது கடுமையான அணுகுமுறையை கையாள்வதற்கு ஏதுவாகிறது. இறைச்சிக் கூடங்களில் தொழிலாளர்கள் / கசாப்பு கடைக்காரர்கள் ஆவிகளால் பீடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் இம்முறையான வேலைகள் எதிர்மறை சக்திகளுக்கு தேவையான தம அதிர்வுகளை வெளியிடுகின்றன.
- ஒருவரின் ஆன்மீக நிலை 60% ஆக வளரும்போது, அவரது உணவு அசைவமா இருந்தாலும் சரி அல்லது சைவமா இருந்தாலும், மிக சிறிய அளவிலான வேறுபாட்டையே ஏற்படுத்தும். ஏனென்றால், ஆன்மீக வளர்ச்சியை பொருத்தவரையில், உணவு முறையை விட, ஆன்மீக உணர்வுடன் நாமஜபம் செய்வதற்கு தான் முக்கியத்துவம் அதிகமாக உள்ளது. ஆன்மீக அறிவியலின் படி, 60% ஆன்மீக நிலையில் உள்ள ஒரு நபருக்கு, இரண்டு காரணிகளின் அடிப்படையில் ஒப்பிடும்போது:
- சைவ உணவை உண்ணும் ஒருவரின் சூட்சும ஸத்வ கூறு 0.0001% அதிகரிக்கிறது.
- இருப்பினும், ஒருவர் ஆன்மீக உணர்வுடன் நாமஜபம் செய்தால், சூட்சும ஸத்வ கூறு 5% அதிகரிக்கிறது.
ஆயினும், 60% க்கு மேல் ஆன்மீக நிலையை அடைந்த ஸாதகர், அசைவ உணவை தொடர்ந்து உண்பதால், அது அவரது ஆன்மீக வளர்ச்சியை மோசமாக பாதிக்கும், ஏனெனில் அவரது ஆன்மீக பயிற்சி ஏற்பட்ட பாவத்தை நீக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, ஒருரின் ஆன்மீக நிலை வளரும்போது, அவர் மேலும் ஸாத்வீகமானவர் ஆகிறார். இதனால் தம ஆதிக்கம் நிறைந்த அசைவ உணவிடம் அவர்களுக்கு ஒவ்வாமையும், விருப்பமற்ற நிலையும் ஏற்படுகிறது . இதன் காரணமாக உயர் ஆன்மீக நிலையில் உள்ளவர்கள் பெரும்பாலும் சைவ உணவு உண்பார்கள் மற்றும் அசைவ உணவு உண்ணும் போது அதிக கஷ்டங்களை உணர்கிறார்கள்
4. அசைவ உணவு தொடர்பாக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
- ஒருவர் இறைச்சி உண்பதை விட முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் பின்வரும் காலங்களில், அதவாது சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், கிரகணத்தின் போது, இரவில், பௌர்ணமி அமாவாசை தினங்களிலும் இரண்டு நாட்களுக்கு முன்பும் மற்றும் இரண்டு நாட்களுக்கு பின்பும் மட்டுமாவது அதை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. மேற்கூறிய நேரங்களில் ஆவிகள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன மற்றும் சுற்றுச்சூழலில் இருக்கும் உயர்ந்த ரஜ-தமவை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. (சூரிய உதயம் ஸாத்வீகமான நேரமாகக் கருதப்பட்டாலும், தம ஆதிக்கம் செலுத்தும் இருளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நாங்கள் அதையும் சேர்த்துள்ளோம்.)
- ஒருவர் தனது ஆன்மீக பயிற்சியில் தீவிரமாக இருந்தால், சைவ உணவு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது