கொரோனா வைரஸிற்கான நிவாரண நாமஜபம் (கோவிட்-19)

பொறுப்புத் துறப்பு : வாசகர்கள் அனைவருக்கும் எஸ்.எஸ்.ஆர்.எஃப் அறிவுறுத்துவது என்னவென்றால் உங்கள் பகுதியில் இந்த நோய் பரவுவதை தடுக்க உள்ளூர் மற்றும் தேசிய சட்டங்களை மதிக்கவும். உங்கள் பகுதிகளில் இருக்கும் மருத்துவர்கள் சொன்னபடி வழக்கமான சிகிச்சையை தொடரவும். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்மீக நிவாரணங்கள் யாவும் வழக்கமான சிகிச்சை மற்றும் கொரோனா நோய் தடுப்பு ஏற்பாடுகளுக்கு மாற்று வழி அல்ல. தங்களின் அறிவிற்கேற்ப ஆன்மீக நிவாரணங்களை எடுக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

1. அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று நம் எல்லோர் வாழ்வையும் அணுகி நம் அன்றாட நடைமுறை செயற்பாடுகளை வியத்தகு முறையில் பாதித்துள்ளது. நம்முடைய பாதுகாப்பிற்காக கடுமையான நடவடிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த புதிய சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்வதற்கு நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். கொரோனா வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள மருத்துவ ரீதியாக என்ன செய்ய முடியும் என்பது குறித்த நல்ல தகவல்கள் கிடைத்தாலும், இந்த கடினமான காலங்களில் நம்மில் பலர் ஆன்மீக உதவியை நாடுகிறோம், கொரோனா வைரஸ் பிரார்த்தனை வேலை செய்கிறதா என்பது பற்றி எங்கள் வலைப்பதிவில் விவரித்துள்ளோம். கொரோனா வைரஸின் தீங்கு விளைவிக்கும் பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாக்க உதவுவது மட்டுமல்லாமல், நம் உள் வலிமையையும் அதிகரிக்கும் ஒரு எளிய நாமஜபம் உள்ளது.

2. கொரோனா வைரஸிற்கான நிவாரண நாமஜபம்

கடவுளின் பெயரை நாம் மீண்டும் மீண்டும் சொல்லும்போது, அந்த குறிப்பிட்ட தெய்வத்தின் பெயருடன் தொடர்புடைய தெய்வீக நேர்மறை சக்தியை நாம் ஈர்க்கிறோம். அந்த பெயரின் ஆன்மீக சக்தி ஒரு பாதுகாப்பு கவசமாக  நம்மைச் சுற்றி உருவாக்கப்படுகிறது. கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்மீக பாதுகாப்பிற்கான ஒரு குறிப்பிட்ட நாமஜபம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாமஜபத்தில்  கொடுக்கப்பட்ட கடவுளின் பெயர்கள் ஸம்ஸ்க்ருதத்தில் உள்ளன. இந்த நாமஜபத்தின்  குறிப்பிட்ட வரிசைமுறை ஆன்மீக ஆராய்ச்சி மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த நாமஜபம் 3 தெய்வங்கள் அல்லது கடவுளின் தெய்வீக தத்துவங்களிலிருந்து ஆன்மீக சக்தியை பெற்றுத் தருகிறது. துர்கா தேவி தீமைகளை அழிக்கும் செயல்பாட்டைச் செய்யும் கடவுளின் ஒரு தத்துவத்தை குறிக்கிறாள். பிரபஞ்சத்தின் பிற செயல்பாடுகளுடன்,  இறந்த மூதாதையர்களின் (பித்ருக்கள்) சூட்சும தேஹத்தால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்தும் தீய சக்திகளிலிருந்தும்  தத்தாத்ரேயர் பாதுகாக்கிறார். சிவபெருமான் அழித்தல் வேலையை  செய்யும் கடவுளின்  தத்துவத்தை குறிக்கிறார் இந்த நாமஜபம் பின்வரும் வரிசையில் மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டும்.

  • ஸ்ரீ துர்கா தேவ்யை நமஹ
  • ஸ்ரீ துர்கா தேவ்யை நமஹ
  • ஸ்ரீ துர்கா தேவ்யை நமஹ
  • ஸ்ரீ குருதேவ தத்த
  • ஸ்ரீ துர்கா தேவ்யை நமஹ
  • ஸ்ரீ துர்கா தேவ்யை நமஹ
  • ஸ்ரீ துர்கா தேவ்யை நமஹ
  • ஓம் நம சிவாய

நாமஜபத்தை கேட்க இங்கே அழுத்தவும்

நாமஜபத்தை கேட்கவும் பதிவிறக்கம் செய்யவும் இங்கே அழுத்தவும்

நான் எத்தனை முறை இந்த நாமஜபம் செய்ய வேண்டும் ?

நான் பாதிக்கப்படவில்லை அல்லது பாதிப்புக்கான அறிகுறிகளும் இல்லை : கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான எந்த அறிகுறிகளையும் நீங்கள் உணரவில்லை என்றால், நீங்கள் இந்த நாமஜபத்தை  தினமும் 108 முறை மனதில் செய்யலாம். இவ்வாறு செய்ய ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும் (அதாவது, 8 நாமங்களையும் வரிசை முறையில் 108 முறை சொல்ல).

நான் பாதிக்கப்பட்டுள்ளேன் அல்லது பாதிப்புக்கான அறிகுறிகள்  உள்ளன : நீங்கள் அறிகுறிகளை உணர்ந்தால் அல்லது வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை  எதிர்த்துப் போராடுவதற்காக உங்கள் ஆன்மீக சக்தியை அதிகரிக்க இந்த நாமஜபத்தை தினமும் 648 முறை மனதில் செய்யலாம். இதற்கு சுமார் 7.5 மணி நேரம் ஆகும்.

என்னைப் பாதுகாக்க இந்த நாமஜபம் போதுமானதா ?

இந்த நாமஜபம் ஆன்மீக நிலையில்  ஒருவரை பாதுகாக்கிறது : இதற்குக் காரணம், வைரஸின் உருவாக்கம் மற்றும் பரவலுக்கான மூல காரணம் ஆன்மீக நிலையில் இருப்பதே.

இருப்பினும், அறிகுறிகள் பௌதீகமானது என்பதால், மருத்துவர்கள் அறிவுறுத்தியபடி, பௌதீக மட்டத்தில் (உங்கள் கைகளை கழுவுதல், சமூக தூரத்தை பராமரித்தல், ஒருவரின் முகத்தைத் தொடுவதைத் தவிர்த்தல், ஒருவர் தன் முழங்கைக்குள் இருமுதல் போன்றவை) எல்லா நடவடிக்கைகளையும் நாம் பின்பற்ற வேண்டும். நம்மைப் பாதுகாக்க அவர்கள் பரிந்துரைக்கும் மருத்துவ சிகிச்சையையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெறுமனே நாமஜபம் மட்டுமே செய்வது, மருத்துவ வல்லுநர்களால் அறிவுறுத்தப்படும் உடலளவிலான அல்லது மனதளவிலான தீர்வுகளுக்கு மாற்று இல்லை என்பதை தயவுகூர்ந்து நினைவில் கொள்க.

மேலும் அறிய கொரோனா வைரஸ் பற்றிய எங்கள் பிரதான கட்டுரையைப்  படியுங்கள்

3. சுருக்கமாக

இந்த நெருக்கடியின் போது பாதுகாக்கப்பட இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள நாமஜபத்தினை செய்ய உங்கள் அனைவரையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். அதோடு கூட, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது அன்புக்குரியவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களானால், இந்த நாமஜபத்தைப் பற்றி அவர்களிடம் சொல்வது நீங்கள் அவர்களுக்கு வழங்கக்கூடிய சிறந்த ஆன்மீக உதவியாகும். சுற்றுச்சூழலை ஆன்மீக ரீதியில் சுத்திகரிக்க உதவுவதால் இந்த நாமஜபத்தின் ஆடியோ பதிவு வீட்டில் ஒலிக்கப்படலாம்.