ஆன்மீக நிவாரணம் என்றால் என்ன? அது எவ்வாறு உங்களுக்கு உதவும்?
அட்டவணை
1 ஆன்மீக நிவாரணத்திற்கு ஒரு அறிமுகம்.
ஆன்மீக நிவாரணம் அல்லது சக்தி நிவாரணம் எனும் பதங்கள் பலரும் அறிந்ததே. அனால் இவற்றின் அர்த்தம் வெவ்வேறு மனிதர்களால் வெவ்வேறு விதமாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இக்கட்டுரையில், ‘ஆன்மீக நிவாரணம்’ எனும் சொற்றொடரின் பொருளை வரையறுத்து, அது எந்த கோட்பாடுகளின் மூலம் செயற்படுகிறது என்பதை பற்றி காண்போம்.
இக்கட்டுரை முழுவதும் ‘வாழ்வின் நோக்கத்தில் ஒன்றான ஆன்மீக முன்னேற்றமடைதல்’ என்பதை முன்னிறுத்தியே எழுதப்பட்டுள்ளது. இதன் குறிக்கோள் என்னவென்றால் ஒருவருக்கு பௌதீக அளவில் உதவி செய்வது மட்டுமல்லாமல், அவரது ஆன்மீக முன்னேற்றத்திலும் கவனம் செலுத்துவதாகும். ஒருவருக்கு ஆன்மீக நிவாரணம் செய்யும் போது, அவரது ஆன்மீக முன்ன்னேற்றத்திற்கு உதவி செய்வதையும் நினைவில் கொள்வோமே ஆயின், வாழ்வின் நோக்கத்திலிருந்து விலகி செல்லாமல் இருக்க இயலும். இந்த உயர் நோக்கத்தை மனதில் கொண்டு ஒருவருக்கு ஆன்மீக நிவாரணம் செய்யும்போது நமது ஆன்மீக திறன் குறைவதில்லை.
2 ஆன்மீக நிவாரணம் என்றால் என்ன?
ஆன்மீக ஆராய்ச்சியின்படி, ஒருவரது வாழ்க்கையில் 80% கஷ்டங்களின் மூலகாரணம் ஆன்மீக பரிமாணத்திலேயே உள்ளது. ஆன்மீக பரிமாணம் எவ்வாறு நம் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதின் பல்வேறு அம்சங்களை ‘வாழ்வின் துன்பங்களின் ஆன்மீக காரணங்கள்‘ எனும் கட்டுரையில் விளக்கியுள்ளோம்..
ஆன்மீக நிவாரணம், நல்ல சக்தியை உள்வாங்குவதற்கும் தீயவற்றை விலக்குவதிற்கும் உதவி செய்கிறது
எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF), ‘சூட்சும உலகம்’ அல்லது ‘ஆன்மீக பரிமாணம்’ என்பதை ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது என வரையறுக்கிறது. சூட்சும உலகம் என்பது கண்களால் காண இயலாத தேவர்கள், ஆவிகள், சுவர்க்கம் நிறைந்த உலகை குறிக்கிறது. இதை நம் ஆறாவது அறிவால் மட்டுமே உணர முடியும்.
ஒரு பிரச்சனையின் மூல காரணம் ஆன்மீக பரிமாணத்தில் இருக்கும்போது, அதை எதிர்கொள்ளவோ, அல்லது தீர்வு காணவோ, அந்த மூல ஆன்மீக காரணத்தைவிட ஆற்றல்மிக்க ஒரு முறையே தேவையாகின்றது. இதையே ஆன்மீக நிவாரணம் என்கிறோம். இதுவே, ஆன்மீக சக்தியை பயன்படுத்தி ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பதாகும். உதாரணத்திற்கு தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்கள். எவரொருவருக்கு, தீயசக்திகளினால் ஏற்படும் பாதிப்பு இல்லையோ, அவர்கள் ஆன்மீக நிவாரணத்திற்கு உட்படும் போது, கூடுதல் நல்ல சக்தி கிடைக்கப் பெறுகிறார்கள்.
2.1 பிரச்சனையின் அறிகுறிகளுக்கும் மூல காரணத்திற்கும் உள்ள வித்தியாசம்
நோய்களின் பல அறிகுறிகள் ஆன்மீக மூல காரணத்தை சுட்டிக்காட்டும்
ஒருவரிடம் வெளிப்படும் அறிகுறிகளுக்கும் அடிப்படை மூல காரணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறிவது முக்கியமாகும். இதை நாம் கீழ் காணும் உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF), தீய சக்திகள் எனும் பதத்தை, சாதாரண சக்தி படைத்த ஆவிகளிலிருந்து அதிக சக்தி வாய்ந்த மாந்திரிகன்கள் வரை, மனித இனத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய, சூட்சம நிலையில் உள்ள அனைத்து தீய சக்திகளையும் குறிக்கும் கூட்டு பெயர்ச்சொல்லாக பயன்படுத்தியுள்ளது. ஒன்றிலிருந்து பத்து எனும் அலகுகளின் அளவில், ஒரு சாதாரண ஆவியின் சக்தி இருக்குமாயின் ஒரு மாந்திரீகனின் சக்தி நூறு கோடியிலிருந்து முடிவிலி வரையாகும்.
நவீன், ஜனனியின் அறையில் அவள் இல்லாதபோது ஒரு வாளி தண்ணீரை தரையில் கொட்ட முடிவு செய்கிறான். அவ்வாறு செய்து விட்டு ஜனனி வரும்போது அவளது எதிர்வினையை கண்டு களிப்பதற்காக ஒளிந்து கொள்கிறான். ஜனனி அறையினுள் நுழைந்து ஈரத்தரையினை கண்டு, காரணம் என்னவாக இருக்கும் என நாலாபுறமாக தேடுகிறாள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. நவீன் அவளின் நிலையை பார்த்து உள்ளுக்குள்ளே ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து கொள்கிறான். அவளின் அறியாமையை – அதாவது பிரச்சனையின் மூல காரணத்தை உணராத அறியாமையை கண்டு மகிழ்ச்சி அடைகிறான். இங்கு பிரச்சனையின் மூல காரணம் என்பது அவனே ஆவான்.
இந்த ஒப்புமை, ஆவிகளாலோ அல்லது தீய சக்திகளாலோ ஏற்படும் தாக்குதல் எவ்வாறு வாழ்வின் கஷ்டங்களுக்கு (உதாரணத்திற்கு – இதய நோய்) – காரணமாக அமைகின்றது என்பதை விளக்குகிறது . அதாவது இதய நோயை தரையில் இருக்கும் தண்ணீருக்கும், ஆவிகள் அல்லது தீய சக்திகளின் தாக்குதலை நவீனுக்கும் ஒப்பிடலாம். உண்மையில் நமக்கு ஆறாவது அறிவு கொண்டு பார்க்கும் திறன் இல்லாத காரணத்தால், ஆவிகளை பார்க்கவோ, உணரவோ இயலாமல், நெஞ்சு வலிக்குண்டான காரணங்களை தேடுவதில் பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம். துரதிர்ஷ்டவசமாக நோய்க்கான காரணங்களின் நமது விசாரணை உடலளவிலும், உளவியல் அளவிலும் மட்டுமே உள்ளது.
2.2 ஆன்மீக நிவரணம் எதை குணப்படுத்துகின்றது?
மேலே உள்ள உதாரணத்தின் அடிப்படையில், இதய நோய் உண்மையில் ஆன்மீக காரணங்களினால் வருகிறது என்பதை இப்போது நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு மருத்துவ பிரச்சனையை (ஆன்மீக மூல காரணத்தினால் ஏற்பட்ட) மருந்துகள் மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ குணப்படுத்த முயல்வது, ஆன்மீக மூல காரணத்தினால் ஏற்பட்ட பாதிப்பை மட்டுமே போக்க உதவும். இதனால், இதய நோயை மருந்துகள் மூலமாகவோ, அறுவை சிகிச்சை மூலமாகவோ, மருத்துவ அறிவியல் குணப்படுத்துவது என்பது நோயின் அறிகுறிகளை மட்டுமே. ஆனால் நோய்க்கான மூல காரணத்தை (ஆவிகள் அல்லது தீய சக்திகள்) கவனிக்காததாலும், அது இன்னும் செயல்பாட்டில் உள்ளதாலும் நோய் திரும்ப வருகிறது.
ஆன்மீக நிவாரணம் என்பது பிரச்சனையின் மூல காரணத்தை கண்டறிவதும், அதை அகற்றுவதுமேயாகும். மேற்கண்ட உதாரணத்தில், இது நவீனை (தீய சக்தி) கண்டுபிடிப்பதும், அவன் மேற்கொண்டு தண்ணீரை தரையில் ஊற்றாமல் (இதய நோயை உண்டாக்குதல்) தடுப்பதுவுமேயாகும். இதன் மூலம் வருவதற்கு சாத்தியமுள்ள பிரச்சனைகளை கூட வரவே விடாமல் தடுக்க பயன்படுத்த இயலும்.
ஆன்மீக நிவாரணம், ஆன்மீக மூல காரணத்தினால் உண்டாகும் நோய்க்ளை குணப்படுத்துகின்றது
2.3 ஆன்மீக நிவாரணம் வெற்றிகரமாக அமைய சரியான சக்தி நிலையை பயன்படுத்துவது முக்கியமாகும்
மேம்பட்ட ஆன்மீக நிவாரணங்கள் ஒரு உடல் குறைபாட்டை முற்றிலுமாக நீக்க வல்ல சாத்தியங்கள் உள்ளவை. ஆனால் பெரும்பாலான பிரச்சனைகளில், உடலளவில் ஏற்பட்ட சேதத்தை போக்க உடலளவிலான முயற்சிகளை (மருத்துவ சிகிச்சை) மேற்கொள்ள வேண்டும். எதனாலென்றால், ஆன்மீக சக்தி விலைமதிப்பற்றதாகவும், மருத்துவ சிகிச்சையை போன்ற உடலளவிலான முயற்சியை காட்டிலும் கிடைப்பதற்கரியதாகவும் உள்ளதாலேயே. ஆன்மீக வழிமுறைகளை பயன்படுத்தி ஒரு நோயை குணப்படுத்துவதற்கு நிறைய விலைமதிப்பற்ற ஆன்மீக சக்தி தேவையாகின்றது. அதே பயனை ஒப்பீட்டளவில் குறைந்த உடலளவு முயற்சிகளினாலும் பெற இயலும்.
இதனாலேயே எஸ்.எஸ்.ஆர்.எஃப். சரியான சக்தி நிலையை பயன்படுத்தி ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறது. உதாரணத்திற்கு, ஒருவருக்கு ஆன்மீக மூல காரணத்தால் எக்சீமா போன்ற தோல் நோய் உண்டானால், அதை குணப்படுத்த கீழ் கண்ட மூன்று நிலைகளிலும் சிகிச்சை செய்ய வேண்டும்:
- உடலளவில் – மருந்துகள் மூலம்
- உளவியல் அளவில் – எக்சீமாவினால் மன அழுத்தம் இருக்குமாயின்
- ஆன்மீக நிலையில் – ஆன்மீக மூல காரணத்தை போக்க ஆன்மீக நிவாரணங்கள்
3. நீங்கள் எவ்வாறு ஆன்மீக நிவாரணத்தை துவங்கலாம்?
ஆன்மீக நிவாரணத்தை துவங்குவது எளிது. இதை சில எளிய முறைகளில் செய்யலாம். உதாரணத்திற்கு ஒரு 15 நிமிடத்தில் செய்யக்கூடிய மிக பயனுள்ள, எளிய ஆன்மீக நிவாரணம், உப்பு நீர் ஆன்மீக நிவாரணம். இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை விளக்கும் காணொளியை கீழே காண்க. ஆரோக்கியத்திற்காக நாமஜபம் , நியாஸ் (குவிக்கப்பட்ட சக்தி நிவாரணம்) மற்றும், பிற சுயமாக செய்யும் ஆன்மீக நிவாரணங்களையும் நீங்கள் செய்யலாம்.
நீங்கள் மேலும் ஆன்மீக நிவாரணத்தை பற்றி அறிய விரும்பினால் ஆன்மீக நிவாரணத்தின் கோட்பாடுகள் எனும் கட்டுரையை படிக்கவும். இதில் உங்களுக்கு, ஆன்மீக நிவாரணத்தை பாதிக்கும் காரணிகள் எவை , மருத்துவ அறிவியலுக்கும் ஆன்மீக நிவாரணத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன , நீங்கள் ஆன்மீக நிவாரணம் செய்யும் ஒருவரை அணுக வேண்டுமா, ஆன்மீக நிவாரணம் செய்யும் ஒருவர் அதை எவ்வாறு செய்ய வேண்டும், என்பதை போன்ற பல வினாக்களுக்கு விடை கிடைக்கும்.
இந்த ஆன்மீக நிவாரண முறைகளை பின்பற்றி உங்களை முழுமையாக குணப்படுத்திக்கொள்ளும் செயல்முறையை இன்றே துவங்குங்கள்.
உப்பு நீர் ஆன்மீக நிவாரணம் தீய சக்திகளை நீக்கி, நல்லவற்றை அதிகரிக்க செய்கின்றது.
எஸ்.எஸ்.ஆர்.எஃப். ஆன்மீக நிவாரணத்துடன், உடலளவிலும், மனதளவிலான நோய்களுக்கு வழக்கமான சிகிச்சை முறைகளை தொடர பரிந்துரை செய்கின்றது.
வாசகர்கள் அவர் அவர்களின் சுயேச்சையான விருப்பத்தை பயன்படுத்தி ஆன்மீக நிவாரண முறைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆன்மீக நிவாரணத்தை பற்றிய நூல்கள்
காலி பெட்டிகளின் மூலம் நோய்களின் ஆன்மீக நிவாரணம் (பகுதி -1)
இந்நூல் வெற்று பெட்டிகளை எவ்வாறு ஆன்மீக நிவாரணத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை பற்றிய தகவலையும், நிவாரணத்தின் முக்கியத்துவத்தையும், அதன் அடிப்படை விஞ்ஞானத்தையும் விளக்குகிறது. |
பிராணசக்தி ஓட்ட அமைப்பில் உள்ள தடைகளினால் ஏற்படும் நோய்களுக்கான ஆன்மீக நிவாரணம்
பிராணசக்தி என்பது நம் உடலில் புலன் உணர்வுகளை கொண்ட முக்கிய சக்தியாகும். உடலினுடைய, மனதினுடைய வெவ்வேறு அமைப்புகளின் செயல்பாட்டிற்கு தேவைப்படும் சக்தியை இந்த பிராணசக்தி ஓட்ட அமைப்பே தருகிறது. பல சமயங்களில் பிராணசக்தி ஓட்ட அமைப்பில் உள்ள தடைகளினாலேயே நோய்கள் உண்டாகின்றன. இந்நூல் அத்தடைகளை எவ்வாறு கண்டறிவது என்பதையும், எவ்வாறு நீக்குவது என்பதையும் விளக்குகிறது. |
பொதுவான சாதாரண நோய்களுக்கு அக்யுப்ரெஷர் சிகிச்சை (அழுத்தமுறை வைத்தியம்)
அக்யுப்ரெஷர் சிகிச்சை (அழுத்தமுறை வைத்தியம்) மக்களுக்கு உடலளவிலும், மனதளவிலும், ஆன்மீக நிலையிலும் ஏற்படும் சாதாரண நோய்களுக்கு தீர்வு அளிகின்றது. பொதுவான சிகிச்சை முறைகளுடன், அக்யுப்ரெஷர் சிகிச்சையையும் (அழுத்தமுறை வைத்தியம்) செய்வதால் ஒரு முழுமையான மற்றும் விரைவான பலன் கிடைக்கின்றது. ஏனென்றால் அது நோய்க்கான ஆன்மீக மூல காரணத்திற்கும் சிகிச்சை அளிக்கின்றது. அக்யுப்ரெஷர் சிகிச்சையின் இன்னொரு பயன் என்னவென்றால், இது ஒருவரை மருத்துவர்களையோ, மருத்துவ உதவியையோ அணுக இயலாத போது சுயாதீனமாக்குகிறது. |