இன்றைய காலகட்டத்தில் விரைவான ஆன்மீக முன்னேற்றத்திற்கு அவரவர் பிறந்துள்ள மதப்படியான கடவுளின் நாமத்தை ஜபிப்பது சிறந்தது. நம் ஆன்மீக பயிற்சியை ஆரம்பிப்பதற்கு அனுகூலமாக விளங்கும் மதத்திலேயே நாம் பிறந்துள்ளோம். இதுவே நம் ஆன்மீக பயிற்சியின் அடித்தளமாக விளங்குகிறது. நம் மதத்திற்கேற்ற கடவுளின் நாமத்தை ஜபிப்பதால் நம் விதியையும் வெல்ல முடிகிறது. இன்னும் சொல்லப் போனால், ஆன்மீக பயிற்சி இவ்வுலகில் மட்டுமல்ல இறந்த பின் மறு உலகிலும் நமக்கு உதவுகிறது.
நம் மதத்திற்கேற்ற கடவுளின் நாமத்தை ஜபிப்பதன் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
கடவுளின் எந்த நாமத்தை ஜபிப்பது?
பிறந்த மதம் | ஜபிக்க வேண்டிய இறை நாமம் |
---|---|
பெளத்தம் | ஓம் மணி பத்மே ஹம், நமோ புத்தாய |
கிறிஸ்தவம் | ரோமன் கத்தோலிக்கம் – அருள் நிறைந்த மரியே வாழ்க மற்றும் வேறு கிறிஸ்துவ பிரிவினர்கள் – கர்த்தராகிய யேசு |
ஹிந்து | குல தெய்வத்தின் நாமம். குல தெய்வம் பற்றி தெரியாவிடில் ஸ்ரீ குல தேவதாயை நமஹ எனும் நாமத்தை உச்சரிக்க வேண்டும் |
குலதெய்வத்தின் நாமத்தை ஜபிக்கும் முறை : குலதெய்வ நாமத்தின் முன் ஸ்ரீசேர்த்து நான்காம் வேற்றுமையில் நாமத்தை உச்சரித்து இறுதியில் நமஹ என்று முடிக்க வேண்டும். | |
உதாரணத்திற்கு : குலதெய்வம் கணபதியாக இருந்தால், ‘ஸ்ரீ கணேஷாய நமஹ’; பவானியாக இருந்தால் ‘ஸ்ரீ பவானி மாதாயை நமஹ’ அல்லது ‘ஸ்ரீ பவானி தேவ்யை நமஹ’ என்று ஜபிக்க வேண்டும். | |
இஸ்லாம் | யா அல்லாஹ், அல்லாஹு அக்பர், ரஹீம் முதலியன. |
ஜைனம் | நவகார் மந்திரம் (ஓம் நமோ அரிஹந்தானம்) |
யூதம் | ஜெஹோவா, யாவே, அடோனை அல்லது யூத மதத்தைச் சார்ந்த பல நாமங்களில் ஏதேனுமொன்று |
சீக்கியம் | வாஹே குரு, ஸ்ரீ வாஹே குரு, சுக்மணி சாஹேப், ஜபஜி சாஹேப் |
ஜோரோஸ்ட்ரியம் | 101 நாமங்கள் உள்ளன. ஸாதகர் தியானத்தின் மூலம் கிடைக்கும் எண்ணிற்குரிய நாமத்தை ஜபிக்க வேண்டும். |
மூதாதையரால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து நிவாரணம் பெற – ‘ஸ்ரீ குருதேவ தத்த’
https://www.spiritualresearchfoundation.org/userfiles/download.php?path=/userfiles/audio/chants_deities/3.%20Shree%20Datta.mp3&as3cf-fix-wp-check-file-type-ext=.phpமூதாதையரால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து விடுபட 30 வினாடிகள் கொண்ட இந்த ஒலி நாடாவை பதிவிறக்கவும்.
வருடம் 2025 வரை ஸாதகர்களுக்கு உகந்த நாமஜபம் (நீங்கள் எந்த மதப்பிரிவையும் சாராதபோது) – ‘ஓம் நமோ பகவதே வாஸுதேவாய’
https://www.spiritualresearchfoundation.org/userfiles/download.php?path=/userfiles/audio/chants_deities/7.%20Shree%20Krushna.mp3&as3cf-fix-wp-check-file-type-ext=.phpஇக்கட்டுரையைப் படிக்கவும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்