ஒருமுகப்பட்ட மனதுடன் தொடர்ந்து நாமஜபம் செய்ய வேண்டும் என்பதே நமது நோக்கமாகும். இதை மனதில் கொண்டு கால்களை குறுக்கே மடித்து உட்கார்ந்த நிலையிலோ நின்று கொண்டோ அல்லது நடந்து கொண்டிருக்கும்போதோ நாமஜபம் செய்யலாம்.
உதாரணமாக ரயிலில் பயணப்பட்டுக் கொண்டிருக்கும்போதோ, சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதோ, தொலைகாட்சியை பார்த்துக் கொண்டிருக்கும்–போதோ அல்லது ஓய்வாக படுத்த நிலையிலோ கூட நாமஜபம் செய்யலாம்.
நாம் உட்கார்ந்து நாமஜபம் செய்யும்போது சௌகரியமாக உணர வேண்டும். அவ்வாறு நாம் சௌகரியமான நிலையில் இல்லாவிட்டால் நம் மனம் சிதறக் கூடும். அதனால் ஒருமுகப்பட்ட மனதுடன் செய்யும் நாமஜபத்தின் பயன் கிடைக்காமல் போய்விடும்.
கால்களை குறுக்கே மடித்து உட்கார்ந்து நாமஜபம் செய்வதால் அதிகபட்ச அளவு பயன் நமக்குக் கிடைக்கும் என்பது ஏற்புடையதாக இருக்கும். காரணம் என்னவென்றால் இந்த நிலையில் உட்கார்ந்து நாமஜபம் செய்வதால் உண்டாகும் ஆன்மீக சக்தி நமது உடலுக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கும். படுத்துக் கொண்டிருப்பது போன்ற மற்ற நிலைகளில் செய்யும் நாமஜபத்தினால் இந்த சக்தி சூழ்நிலையில் கலந்து விடும் வாய்ப்பு உள்ளது.
பரிசோதனையாக, மற்ற நிலைகளில் செய்யும் நாமஜபத்திற்கும் கால்களை குறுக்கே மடித்து உட்கார்ந்து செய்யும் நாமஜபத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நீங்களே செய்து பார்த்து உணர முயற்சிக்கலாம்.