உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப். பரிந்துரைக்கிறது.
வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாகத் தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அட்டவணை
1. ஆரோக்கியத்திற்காக நாமஜபம் செய்தல் – ஒரு அறிமுகம்
ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (எஸ்.எஸ்.ஆர்.எஃப்) தொடங்கிய காலத்திலிருந்தே, உடல், உளவியல் மற்றும் ஆன்மீக விஷயங்களே வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மூல காரணங்கள் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறது. வாழ்க்கையில் ஏற்படும் எந்தவொரு பிரச்சனைக்கும் உடல்நல பிரச்சனைகள் உட்பட, 80% வரை ஆன்மீக மூல காரணங்கள் பங்களிக்க முடியும் என்பதை எஸ். எஸ்.ஆர்.எஃப் ஆல் நடத்தப்பட்ட ஆன்மீக ஆராய்ச்சி காண்பிக்கிறது. ஆன்மீக பரிமாணத்தில் அவற்றின் மூல காரணங்களைக் கொண்ட பிரச்சனைகளை ஆன்மீக பயிற்சி மற்றும் பிற ஆன்மீக நிவாரணமுறைகள் மூலம் சிறப்பாக எதிர்கொள்ள முடியும். தற்போதைய யுகத்தில் ஒருவர் பிறந்த மதத்தின்படி கடவுளின் பெயரை உச்சரிப்பதை ஆன்மீக பயிற்சியின் அடிப்படை வடிவமாக பரிந்துரைக்கப்படுகிறது. நாமஜபம் உடல், உளவியல் மற்றும் ஆன்மீக நல்வாழ்வைத் தருகிறது.
மேலும் எங்கள் கட்டுரையை படியுங்கள் – நவீன மருத்துவ அறிவியல் அல்லது மருத்துவத்தின் வரம்பு மற்றும் ஆன்மீக நிவாரணத்தின் தேவை.
2. ஆன்மீக நிவாரணங்களைச் செய்வதன் மூலம், நோயால் பாதிக்கப்பட்ட உறுப்புகள் வலுவடையும்
ஒரு நோய்க்கான மூல காரணத்தைப் புரிந்துகொள்வது என்பது, அதன் பின்னணியில் உள்ள ஆன்மீகக் காரணங்கள் மற்றும் ஆன்மீகக் காரணத்தின் சதவீதம் ஆகியவை ஆன்மீக அல்லது சூட்சுமமான பரிமாணத்தின் ஒரு பகுதியாகும் என்பதையும் அறிவதாகும். இதனை இயல்பில் புரிந்துகொள்வது கடினம், மேலும் சூட்சும பரிமாணத்தைப் புரிந்துகொண்டு அதற்கான தீர்வை சொல்லக்கூடிய ஒரு நபர் அமைவது எப்போதும் சாத்தியமில்லை. எனவே, எந்த உறுப்பு பாதிப்புக்குள்ளாகிறது, எந்தெந்த ஆன்மீக நிவாரணம் (நாமஜபம், முத்திரை மற்றும் நியாஸ்) மூலம் நோயை கணிசமான அளவிற்கு குறைத்து அதை வலிமையாக்க முடியும் என்பதை எப்போதும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது. உடல் உறுப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பீஜமந்திரங்கள் மற்றும் மந்திரங்கள் ஆகியவை ஆரோக்கியத்திற்கான நாமஜபங்கள் என்ற கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நோய்க்கு செய்ய வேண்டிய முத்திரை மற்றும் தொடர்புடைய சக்கரங்களில் என்ன நியாஸ் செய்ய வேண்டும் என்பதும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட ஆன்மீக நிவாரணங்களைப் பயன்படுத்தி நோயாளிகள் அவர்களின் நவீன மருந்துகளுடன் சேர்த்து சிகிச்சையை நிறைவு செய்ய வேண்டும்.
3. உடலின் உறுப்புகளுடன் தொடர்புடைய தெய்வங்களின் பெயர்களின் நாமஜபங்கள்
ஆன்மீக நிவாரணத்திற்கென குறிப்பாக நாமஜபம் தேவைப்படும்போது, அதனுடைய ஒரு முக்கியமான ஆன்மீகக் கொள்கையை புரிந்துகொள்வது அவசியம். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் கடவுளின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தால் நிர்வகிக்கப்படுகிறது. ஆன்மீகக் காரணத்தால் ஒருவரின் உறுப்புகள் ஒரு குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்படும்போது, அந்த உறுப்பு மற்றும் நோய் தொடர்பான குறிப்பிட்ட தெய்வத்தின் பெயரை உச்சரிப்பது நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். கடவுளின் குறிப்பிட்ட பெயரின் தெய்வீக உணர்வு (தெய்வீக சைதன்யம்) ஒருவருடைய உறுப்பை ஆன்மீக நிலையில் பலப்படுத்தி, நோயை எதிர்த்துப் போராடும் அவரின் திறனை அதிகரிக்கிறது.
நோய்க்காக கொடுக்கப்பட்ட ஆன்மீக நிவாரண நாமஜபம், எவ்வளவு பிரத்யேகமாக உள்ளதோ அவ்வளவு விரைவாக, நிவாரணமும் பெரிய விகிதத்தில் ஏற்படும்.
4. நாமஜபத்தின் நிவாரணப்படுத்தும் விளைவை எவ்வாறு அதிகரிப்பது
- ஒருமுகத்தோடு நாமஜபம் செய்தல்: ஒருவர் ஒருமுகத்துடன் நாமஜபம் செய்யும்போது, நோயுற்ற செல்களைச் சுற்றி ஸாத்வீகமான அதிர்வுகளின் பாதுகாப்பு கவசம் உருவாகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, நோய் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு குறைக்கப்படுகிறது
- ஆன்மீக உணர்வுடன் நாமஜபம் செய்தல்: ஒருவர் ஆன்மீக உணர்வுடன் நாமஜபம் செய்யும்போது, உறுப்புகளில் தெய்வீக சக்தி விழித்துக்கொள்கிறது. இதன் விளைவாக, தெய்வீக உணர்வின் வலிமை, உறுப்புகளில் உள்ள செல்களுக்குள் உட்செலுத்தப்படுகின்றன. இவ்வாறு அதிகரித்த ஆன்மீக நேர்மறை சக்தியின் காரணமாக, நோயை உண்டாக்கும் கிருமிகளின் வடிவில் உள்ள துன்பகரமான அதிர்வுகள் அழிக்கப்பட்டு, குறிப்பிட்ட உறுப்பின் செல்கள் மீண்டும் ஆற்றல் பெறுகின்றன.
- பிரார்த்தனையுடன் நாமஜபம் செய்தல்: கடவுளின் நாமத்தை திரும்பத் திரும்ப உச்சரிக்கும் போது, இடையிடையே பிரார்த்தனைகளையும் சொல்லிவர நாமஜபத்தின் செயல்திறன் பன்மடங்காக அதிகரிக்கிறது. உண்மையில் ஒருவர் ஆன்மீக உணர்வுடன் தீவிரமாக பிரார்த்தனை செய்யும் போது மட்டுமே, பிரபஞ்சத்தில் உள்ள குறிப்பிட்ட தெய்வத்தின் தத்துவ அதிர்வுகள் அந்த நபரை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. தெய்வீக அதிர்வுகள் நபரின் உணர்வு நிலையை முழுமையாக நிரப்பி, நோயின் துன்பகரமான அதிர்வுகளை அழிக்கின்றன. ஆன்மீக உணர்வுகள் நிறைந்த பிரார்த்தனைகள் இல்லாவிட்டால், நாமஜபம் தரமானதாக இல்லாமல் வெறும் எண்ணிக்கைக்காக மாத்திரம் சொல்வதாக இருக்கும். இது நோயாளிக்கு குறைவான நன்மையே கொடுக்கும்.