1. முன்னுரை

எல்லாவற்றுக்கும் சரியான காலம் ஒன்று இருக்கிறது. ஆன்மீக பயிற்சிக்கும் இது பொருந்தும். சரியான விஷயம் தப்பான காலத்தில் நடந்தால் வேண்டிய பலன் கிடைப்பதில்லை. உதாரணமாக, நிலம் எத்தனை வளமாக இருந்தாலும் விதையை மழை காலத்திற்கு பதிலாக வறண்ட மாதங்களில் விதைத்தால் வேர் விடுவதில்லை. அதைப்போல், பிரபஞ்சத்தின் யுகத்திற்கேற்ப சில வகையான ஆன்மீக பயிற்சிகள் ஆன்மீக வளர்ச்சிக்கு உகந்ததாகும்.

2, பிரபஞ்சத்தின் யுகங்கள், மனிதகுலத்தின் ஆன்மீக நிலை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட ஆன்மீக பயிற்சி

2.1 பின்னணி தகவல்

  • பிரபஞ்சத்தின் வயது மற்றும் அதன் சுழற்சி பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி என்னும் நமது கட்டுரையில் இந்த பிரபஞ்சம் அதன் துவக்கத்திலிருந்து 4 முக்கிய யுகங்களை கடந்து வந்திருக்கிறது என்று விளக்கியிருந்தோம். அவை சத்யயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம் மற்றும் கலியுகம் ஆகும். இதில் சத்யயுகம் முதல் யுகம், கலியுகம் நாம் தற்போது வாழும் யுகமாகும். இந்த 4 யுகங்களில் மக்களின் சராசரி ஆன்மீக நிலை குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடும்.
  • மேலும், ஆன்மீக பயிற்சியின் நான்காவது அடிப்படை கோட்பாடு பற்றிய ஒருவரின் ஆன்மீக நிலைக்கேற்ப ஆன்மீக பயிற்சி மேற்கொள்வது என்னும் நமது கட்டுரையில் ஒரு நபரின் ஆன்மீக பயிற்சி அவரின் ஆன்மீக நிலைக்கேற்ப இருக்க வேண்டும் என்பதை விளக்கியிருந்தோம், அதன்படி, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு யுகத்திற்கும் பரிந்துரைக்கப்பட்ட ஆன்மீக பயிற்சியும் வேறுபடும்.
  • இந்த கருத்தை விவரமாக புரிந்துகொள்ள தயவு செய்து ஆன்மீக நிலை பற்றிய எங்களுடைய கட்டுரையை பார்க்கவும்.

2.2 ஒவ்வொரு யுகத்திற்கும் பரிந்துரைக்கப்பட்ட ஆன்மீக பயிற்சி பாதை

கீழ்காணும் அட்டவணையில் 4 யுகங்களில் உள்ள சராசரி ஆன்மீக நிலையை காணலாம்.

யுகம் யுகத்தின் அளவு வருடங்களில் சராசரி ஆன்மீக நிலை2 பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட ஆன்மீக பாதை ஆளுமை குறைகளின் சதவிகிதம் அகம்பாவத்தின் சதவிகிதம்
சத்யயுகம் 1,728,000 80% ஞானயோகம் 103 54
த்ரேதாயுகம் 1,290,000 70% தவம் மற்றும் தியானயோகம் 20 15
த்வாபரயுகம் 864,000 50% கர்மகாண்டம் 30 20
கலியுகம்1 432,000 20% கடவுளின் நாமஜபத்துடன் இணைந்து ஆளுமை குறைகளை மற்றும் அகம்பாவத்தை அகற்றும் முயற்சி பாதை 50 30

மூலம்: ஆன்மீக ஆராய்ச்சி

அடிக்குறிப்புகள்:

  1. 2016 –ல் நாம் கலவரம் நிறைந்த யுகம் என்றும் கூறப்படும் கலியுகத்தின் 5118 –வது ஆண்டில் உள்ளோம்.
  2. அடுத்தடுத்த யுகங்களில் சராசரி ஆன்மீக நிலை குறைந்தது.
  3. ஒருவர் 100% ஆன்மீக நிலையை அடையும்வரை தோஷங்கள் குறைந்த பட்ச அளவில் மற்றும் குறைந்த பட்ச தீவிரத்தில் நீடிக்கும்.
  4. இந்த அகம்பாவம் ஒருவர் 100% ஆன்மீக நிலையை அடையும் வரை அவரிடம் இருக்கும் தோஷங்களுடன் தொடர்புடையதாக நீடிக்கும்.

2.3 ஒவ்வொரு யுகத்திற்கும் பரிந்துரைக்கப்பட்ட ஆன்மீக பயிற்சி வகை

நமது வலைதளத்தில் சமஷ்டி சாதனை மற்றும் வ்யஷ்டி சாதனை என்று இரண்டு வகையான ஆன்மீக பயிற்சியை பற்றி குறிப்பிட்டிருக்கிறோம். வ்யஷ்டி சாதனை என்பது தனிமனித ஆன்மீக வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் ஆன்மீக பயிற்சியாகும். சமஷ்டி சாதனை என்பது பிறரின் ஆன்மீக வளர்ச்சிக்காகவும் ஆன்மீகம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காகவும் மேற்கொள்ளப்படும் ஆன்மீக பயிற்சியாகும். இந்த இரண்டு வகை ஆன்மீக பயிற்சியின் முக்கியத்துவம் யுகத்தை பொருத்து மாறுபடும்.

யுகம் வ்யஷ்டி சாதனை சமஷ்டி சாதனை கூட்டல்
சத்யயுகம் 1001 0 100
த்ரேதாயுகம் 80 20 100
த்வாபரயுகம் 70 30 100
கலியுகம் 502 502 100
கலியுகம் (1999-2023) 302 702 100

அடிக்குறிப்புகள்:

  1. சத்யயுகத்தில் எல்லோருடைய ஆன்மீக நிலையும் உயர்வாக இருந்ததால் சமஷ்டி சாதனைக்கான அவசியம் ஏற்படவில்லை.
  2. கலியுகத்தில் சமஷ்டி மற்றும் வ்யஷ்டி சாதனை இரண்டும் சமமாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஏனென்றால், சுற்றுப்புற சூழலில் உள்ள ஆன்மீக மாசுபாடு ஒட்டுமொத்தமாக அதிகரித்திருக்கிறது மற்றும் மனிதர்களின் ஆன்மீக நிலை தாழ்ந்துள்ளதால் அவர்களுக்கு ஆன்மீக உதவி தேவைப்படுகிறது. எனினும் 1999-2023 –க்கு இடைப்பட்ட தற்போதைய காலத்தில் உலகம் கொந்தளிப்பான ஒரு கட்டத்தில் உள்ளது மற்றும் மூன்றாம் உலகப்போர் அண்மையில் நிகழும் அபாயமுள்ளது. பாதகமான இந்த காலத்தில் ஆன்மீக பயிற்சி மட்டுமே சாதனை செய்வோர் உயிர்வாழ உதவி செய்யும். ஆகையால், தற்போதைய காலத்தில் வ்யஷ்டி சாதனைக்கு 30% மற்றும் சமஷ்டி சாதனைக்கு 70% முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

2.4 யுகத்திற்கேற்ப ஆன்மீக பயிற்சி பற்றிய தகவல்கள்

  • சத்யயுகம்: மிகவும் பரிசுத்தமான இந்த யுகத்தில் ஒரு சராசரி மனிதனின் ஆன்மீக நிலை 80% ஆக இருந்தது. (இது மிகவும் உயர்ந்த மகானின் ஆன்மீக நிலையாகும்). இந்த யுகத்தில் வாழ்ந்த மனிதர்கள் ஆன்மீகப்படி மிகவும் தூய்மையானவர்களாக இருந்ததால் ஞானத்தின் பாதையில் கடவுளை அடைவது இவர்களுக்கு ஏற்றதாக இருந்தது. ஏனென்றால், இவர்கள் கடவுளுடன் மனமொன்றிய நிலையில் இருந்தனர். மேலும் முழு ஆன்மீக பரிமாணத்தின் ஞானத்தை இவர்கள் பெற்றிருந்தார்கள். இவர்கள் அப்போது சூட்சும உருவத்தில் மட்டுமே இருந்த ஆன்மீக நூல்களின் உள்ளர்த்தங்களை புரிந்துகொள்ளும் ஆற்றலை பெற்றிருந்தார்கள். (தெய்வீக நூல்கள் பிற்பாடு வந்த யுகங்களில்தான் எழுத்து வடிவம் பெற்றது.)
  • த்ரேதாயுகம்: இந்த யுகத்தில் ஒரு சராசரி மனிதனின் ஆன்மீக நிலை 70% ஆக வீழ்ச்சி அடைந்தது. ஆகையால், இவர்கள் ஞானத்தின் பாதையில் செல்லும் ஆற்றலை இழந்தார்கள். எனினும், இவர்களுக்கு தவம் (ஒற்றைக்காலில் 12 வருடங்கள் நிற்பது போன்று) மற்றும் தியானம் (தன் மேல் எறும்பு புற்று வளரும் வரை) மேற்கொள்ளும் ஆன்மீக திறன் இருந்தது.
  • த்வாபரயுகம்: ஆன்மீக நிலை மேலும் வீழ்ச்சியடைந்தது. மனிதர்கள் கடுமையான தவம் மற்றும் நீண்டகால தியானம் செய்யும் திறனை இழந்தார்கள். ஆகவே, அவர்கள் முன்னேறுவதற்கு சடங்குகள் கொண்ட வழிபாட்டுமுறை தெய்வீகமாக விதிக்கப்பட்டது. கண்டிப்பான ஆசார அனுஷ்டானங்களை பின்பற்ற வேண்டியதால் இந்த சடங்குகள் மற்றும் யக்ஞங்கள் மிகுந்த நேரத்தை செலவழித்து பாடுபட்டு செய்ய வேண்டியதாயிற்று. இத்துடன் படிப்படியாக, நுணுக்கமாக அனுசரிக்க வேண்டிய பல வழிமுறைகள் இருந்தன. எனினும் இந்த யுகத்தின் மனிதர்களிடம், நேரம், உழைப்பு மற்றும் செல்வத்தை செலவு செய்து இச்சடங்குகளை செய்யும் தார்மீக மனப்பாங்கு இருந்தது.
  • கலியுகம்: தற்போது நாம் வாழும் கலியுகமாகிய இக்காலத்தை கலவரம் நிறைந்த யுகம் எனக்கூறலாம். ஒரு சராசரி மனிதனின் ஆன்மீக நிலை வெறும் 20% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. முந்தைய யுகங்களின் ஆன்மீக பாதைகளை பின்பற்றும் திறன் நம்மிடம் பெரிதும் குறைந்திருக்கிறது. மேலும், தற்போதைய உலக சூழல் முந்தைய யுகங்களோடு ஒப்பிடும்போது ஆன்மீக வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை. மனிதர்களிடம் பெரும் விகிதத்தில் உள்ள ஆளுமை குறைகளாலும் மற்றும் ஆன்மீக பரிமாணத்தின் தீய சக்திகளின் அதிகமான செயல்பாடுகளாலும் ரஜ மற்றும் தம சூட்சும கூறுகள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளன. இதனால் ஆன்மீக மாசுபாடு ஏற்படுவதால், எந்த விதமான ஆன்மீக பயிற்சிக்கும் தீவிரமான தடங்கல் ஏற்பட்டு ஆன்மீக வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

    கொந்தளிப்பும் அழுத்தமும் மிக்க இக்காலத்தை மனதில் கொண்டும் குறைப்பட்ட நமது தற்போதைய ஆன்மீக திறனை மனதில் கொண்டும் கடவுள் பிரதிகூலமான இக்காலத்திலும் நாம் ஆன்மீக முன்னேற்றம் அடைய ஒரு எளிய ஏற்பாடு செய்திருக்கிறார். அதன்படி நாம், நமது ஆளுமை குறைகளையும் அகம்பாவத்தையும் குறைக்க முயற்சி செய்ய வேண்டும் மற்றும் கடவுளின் நாமத்தை ஜபிக்க வேண்டும். உண்மையில் கடவுளின் நாமத்தை சரியான முறையில் ஜபிப்பது (ஒருமுகத்தோடும், ஆன்மீக உணர்ச்சியோடும், நாள் முழுவதும் ஜபிப்பது) என்பது உயர்ந்த ஆன்மீக நிலையில் மட்டுமே செய்ய முடியும். எனினும், தம்மைத்தாமே சரிபடுத்திக்கொண்டு மற்றும் மனதிலிருந்து ஆளுமை குறைகளை மற்றும் அகம்பாவத்தை அகற்றிக்கொள்வதன் மூலம், ஒருவரால் தனது லட்சியத்தில் அதிக கவனம் செலுத்த முடியும். இதனால், ஒருவரால் கடவுளின் நாமத்தை தொடர்ந்து ஜபிக்கும் பயிற்சியை செய்ய முடிகிறது.